அறிவுடைத்து நிறங்களுடைத்து..

நிறங்கள் பல நாமறியாமலே நம்மை அறிய உதவுகின்றன என்றால் எனக்கு ஒரு உம்….ம்ம்ம்…

கொண்டலாம்பட்டி வந்திட்டு நன்றி!!
யே அப்பு !!
நீ கெலிச்சிகிட்டே இரு !
போரொ போரொ தெலம் தொரொ தொரொ நெமிக்ஹாத் திகெ திகெ நெமிக்ஹாம் பெபினாமெத்
என் இனிய பொன் நிலாவே !
நான் அப்பவே பாத்துட்டேன்.
ஓடு !
என்னமோடி! டஸ்ஸு புஸ்ஸு-னு உன்னால முடியாதா ?

முடியாதா? ஞாயிறு வேலைக்கு ஆள் வேண்டியிருக்கிறது. சும்மாவாவது ஒரு அமர்வு செய்ய கோடர்களும் டெஸ்டர்களும். ஒரு இரண்டு மாதம் மென்பொருள் வெளியீடு செய்யும் மட்டிலும் மெர்சலாக வேணாமேன்னு’ என்று பேஜார் பண்ணும் வாடிக்கையாளர் காத்துக் கிடந்தார். மீட்டிங்கில், அவரப் போகச் சொல்லுங்க! இப்படித் தான் நாங்க ஏற்கெனவே வேலை பார்த்துக் கொண்டிருக்கோம் என்றனர். புது மேனேஜருக்கு இது புதுசில்லை என்றாலும் இயலாமையை நன்கு காட்டினார்.

விரைவில் அணியின் மூத்த உறுப்பினர் சிலர் தங்களுடைய பிரச்சினைகளை பகிர ஆரம்பித்து என்னை சில விஷயங்கள் கேள்விப்பட வைத்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது போல நடந்து கொண்டனர். ஒருவர் ஒரு நாள் “ஏன் இப்படி?” என்று கேட்டுவிட்டு இதயெல்லாம் பார்த்தால் என் குடும்பத்து வயல்களிலேயே இருந்துவிட்டு போயிருக்கலாம் போலிருக்கிறது என்று சொன்னார். நான் சும்மா (“அப்பிடியா?”) கேட்டுக் கொண்டிருந்தேன்.

அந்த பிரச்சினையின் விசைகளை மூளையில் ஏற்றிக் கொண்டு பந்துகள் போன்று உருவம் கொடுத்து் மண்டையை உருட்டி உருட்டி அந்த பந்துகளுடன் ( வேலையினூடே ) விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது அரை நாள் பொழுதுக்குள்ளாகத் தோன்றிவிட்டது. ஒரு காகிதத்தில் பேனாவைக் கொண்டு வரைந்து காலையில் சந்தித்த மூத்த உறுப்பினரை நோக்கி ஓடலாயினேன்..

சரி! இப்ப சொல்லுங்கள்.. மேலே “ஓடு!” என்று குறிப்பிடப் பட்ட படத்தைப் பார்த்தால் ‘சட்’டென்று ( ரொம்ப யோசிக்காமல் ) என்ன தோன்றுகிறது?


அன்பு ஆட்டம் ! வரைதலில் நாட்டம் !!
நான் என்ன நினைக்கிறேன் என்றால் என்றால் என்றால்……… ஆங் நினைத்துவிட்டேன். காதல், அன்பு, நெகிழ்தல், மனிதநேயம் போன்ற வார்த்தைகள் - பெரும்பாலான அனைத்து வர்க்க மக்களும் ஓரளவேனும் நம்பும் இவ்வார்த்தைகள் கார்ப்பரேட் கலாச்சாரத்தின் பெரும்கொள்கையில் பொருத்தி தினசரி ஆட்ட உபயோகத்தில் மக்கள் புழங்கும் படி செய்தால் என்ன என்று தோன்றுகிறது. பாசிடிவிடி எனப்படும் நேர்மறை சக்தி மிகுந்துள்ள கூற்றுக்களின் பிரயோகம் கார்பரேட் பிரச்சார பீரங்கிகளின் வழியே பொழிவதைக் காட்டிலும் வேலையாட்களின் அன்றாட செயல்வழக்குகளில் ஓரளவுக்கேனும் எத்தி விட்டால் என்ன? இதற்கு என்ன பண்ண வேண்டுமென்றால் பிரச்சாரத் தனமான சொலவடைகளைக் கொஞ்சம் தவிர்த்து தெளிவான தீட்டலுடன் வரைவது நலம். இதெல்லாம் ஒரு அளவுள் பரிசோதனையாக செய்து பார்க்கக் கூடியவையே! கார்பரேட்டுக்கு ( இப்ப உள்ளதைக் காட்டிலும் ) நல்ல பேர் கொடுக்க வேண்டும் என்பதே என் அவா. என்னுடைய பூகோளத்திலிருந்து வரும் மக்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள் பல்கிக் கொண்டே இருக்கின்றனர். இவர்கள் ஏற்று நடக்கும் ஒரு “சைக்கி”( psyche ) என்ன என்பதை தெளிவு செய்தல் நலம். சந்தோஷப்படுத்தலுக்கேற்ற கூல் கார்ப்களுக்கு கிட்டும்! நிறைய கார்ப் அஞ்சல்கள் ஒரே டுபாக்கூர்த்தனமாகவும் கூர்மைமிக்கதாகவும் இருப்பதால் நிறைய பேர் திட்டிகிட்டே படிக்கிறார்கள். ( புலவு சாப்பிட்டு ஒரு மப்பில், கேஷுவலாக - திட்டமிடாதபடிக்கு எழுதிவிட்டேன், ஹிஹி , கீழே உள்ள படமும் அப்படியே படு விரைவாகப் போட்டது.)

என்னா தோன்றுகிறது?

ஓடு !! இதைப் படிப்பவர்கள் அதிகமதிகம் தங்களுக்கு தோன்றுவன வற்றை எனக்கு தங்களின் மேலான காமென்ட்களினால் தெரியப்படுத்து வீராக! இல்லையாயின் தங்கள் குழந்தையின் மகிழ்ச்சிச் சத்தத்தை பதிவு செய்வீராக!

இந்த படத்தை வைத்து இந்திய கல்வி முறைகளின் நிலைமை மற்றும் முன்னேற்றம், அதன் வருங்காலம் ஆகியவற்றினை என்னால் எனக்காக வேண்டி ஒரு சிறு துளி எடுத்து கூர் பார்க்க முடிந்தது. யே..ய்! (யே…ய்! என்பது என் மகளின் மகிழ்ச்சிச் சத்தமாக்கும்)

“ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு…”

இந்தப் படத்த பாத்தாலுந்தான் தெரியுது.. இந்தியக் கல்விமுறையின் வருங்காலத்தை! சிறுவயதில் செல்வி. ஜெயலலிதாவை நாங்கள் மெழுகுபொம்மை என்று சொல்லி மகிழ்ந்தோம். எங்களுக்கு என்ன தெரியும் அவர் முதல்வராகி விடுவாரென்று!! நாங்களெல்லாம் நல்ல பசங்களே!

ஆஃபீசில் இருந்து வீட்டுக்கு கிளம்புகையில் பார்கிங்க் லாட் செல்லும் வழியில் நடுவாக உணவகம் இருந்தது. ஒரு கப் நூடுல்ஸ் அல்லது ஒரு முசாம்பி சாறுக்கப்புறம் வண்டிக்கு செல்லலாமென குளிர்காற்றில் தாளகதியோடு என்றோ யாருக்காகவோ நடை போட்டுக் கொண்டிருந்தது போன்று ஒரு பிரம்மையுடன் நடந்து கொண்டிருந்தேன்.. திடீரென்று மெல்லிய சலனத்துடன் ஒருவர் என்னை ஒட்டி வந்து கொண்டிருந்ததைக் கண்டு திரும்பிப் பார்த்தேன். என் அணியின் மூத்த வல்லுநரும் இளம் மேனேஜருமான இவர் இரண்டு சின்ன பிள்ளைகளின் தந்தையாகவும் இருந்தார். இன்னும் இரண்டு மணி நேரம் தனக்கு வேலை இருப்பதாகக் கூறினார். நான் அவரிடம் “உணவருந்தி விட்டீர்களா?” என்றால், வீட்டுக்கு போய்த்தான் சாப்பிடப் போவதாக சொன்னார். உணவகத்தில் முசாம்பி சாற்றை வாங்க அவர் அனுமதிக்கவில்லை. ஏன் முருகா என்றால், இல்லை வீடு தான் என்றார். சாப்பாட்டு மேசையில் அமர்ந்து என்னோடு பேச்சு கொடுத்துக் கொண்டு, அப்புறம் பிரிந்து நான் என் கார் நோக்கியும் அவர் சதுரகத்திற்கும் ( cubicle :-O ) சென்று விட்டோம். இவருக்காகவே மேலே நான் வரைந்த “ஓடு!!” படத்தை முதன்முதலாகத் தீட்டினேன்.

ப்ரோஜெக்ட் பளு நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கையில் இவருடைய அணிக்கு ஒரு வழிப்போக்குத் துணையாக நான் கிடைத்திருந்தேன். இவருக்கு கொஞ்ச -மாகத் தாங்கல் கொடுத்துக் கொண்டு, ஆனமட்டிலும் கடின பொழுதுகளிலிருந்து அணியை விலக்கி சாதாரணமாக வேலை செய்யும் படிக்கு பல கற்பனைகளை ஓட்டிக் கொண்டிருந்தேன். பிள்ளைக்கு உடல்நலம் குன்றி இருந்ததால் வீட்டுப் பளுவின் மிகுதியாலும் இவர் பொழுதுகள் சற்று அல்லலாகவே இருப்பதாகப் பட்டது. வேண்டாமென்று ஒதுக்கிவிடும் பளுக்களை பல நிமித்தங்கள் காரணமாக எடுத்துக் கொள்ள நேரும் பொழுது நாம் ஒரு கட்டுக்குள் கட்டுண்டு இருப்பது போல் இருக்க நேரிடுகிறது. அந்த மாதிரி காலங்களில் நாம் காணும் உள்ளக்காட்சிகள் நமக்கு சரியாக பயன்படுவதில்லை. பேசவேண்டிய இடங்களில் நாம் பேசிவிட்டால் பிரச்சினையாகி விடலாமென கருதுவதும் அப்படிப் பேசிவிட்டாலும் பயனளிக்கா ஒரு தோற்றமும் நம்மை பிற்போக்குத்தனமான எண்ணங்களுக்குத் தள்ளி விடுகின்றன. இவர் ஒரு நாள் என்னிடம் வந்து “நான் விவசாயக் குடும்பம். இங்கு இருப்பதைவிட மீண்டும் அங்கேயே சென்று விடலாமென்று…நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்றார். நான் எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன், ஆயினும் உங்களுக்கேற்ற தெரிவாகவே அது இருக்க வேண்டும் என்று கூறி சில விளக்கங்கள் அளித்தேன்.

ஒருவர் மென்பொருள் வேலையிலிருந்து விலகி தன் குடும்பம் சார்ந்திருந்த தொழிலுக்கு செல்வது என்பது ஒரு விதத்தில் “பின்னிலைக்குச் செல்லும் நடத்தை” (regressive behavior) என்பது தானோ என்பதை எப்படிப் பார்ப்பது? இதை விட அது உசிதம் என்பது போன்ற கருத்துடைய பேச்சுக்களிலிருந்து விடுபட்டு இந்த தொழிலும் நன்று அந்த தொழிலும் நன்று என்று சிறு வயதாருடன் பேசும் அளவுக்கு மலர்ந்திருத்தலைக் கூறலாம். இங்கு இதை கூறும் நிலை ஏனென்றால், நான் பார்த்த சில இடங்களில் எல்லோரிடமும் இப்படித்தானோ ?என்று அய்யம் கொள்ளும் அளவுக்கு பெருவிஷயங்களையும் அதிக உபயோகமில்லா வண்ணம் பேசுகின்றனர். சுவைமிக்க விமர்சனங்களாலே அதிகம் நன்மை விளையச் செய்யலாம் என்ற கருத்து உங்களுடையதா ? கூறினால் ஒரு சலாம் போடுகிறேன். இல்லையென்றால் நீங்கள்…. வேண்டாம் வேண்டாம், இல்லை பரவாயில்லை…இருக்கட்டும்..ஹிஹி..

என் கேள்வி இது தான் நள்ளிரவில் இன்னும் இரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனும் சாப்பிடாத மனிதர் ஒருவர், ஏன் நான் கொடுக்கும் முசாம்பி சாறை வேண்டா-மென்று சொல்ல வேண்டும்?