ஆற்றின் தீரம் — கொஞ்சூண்டு நர்மதா, குட்டியூண்டு ஜீலம்

எந்நாளும் தென்றல் வந்து வீசிடும் / என்னோடு தோழி போல பேசிடும்
झर झर झर झर झरना बहता ठण्डा ठण्डा पानी / ठण्डा ठण्डा पानी

கைதட்டல்கள் பற்றி கரவொலிகள் என்ன பேசிக்கொள்கின்றன? ஒரு முறை திட்டக்குடிக்கு போய் எதையாவது கண்டு ரசித்து நம்ம வேலையை செய்யலாமே! என்று ஒரு சேர பேசிக்கொள்கின்றன. திட்டு, திட்டி, திட்டல், திட்டம், திட்டங்கள் இவையெல்லாம் என்றோடொன்று நட்பு பாராட்டி ( நீயின்றி நானின்றி ரேஞ்சுக்கு ) இருப்பதைக் கண்டு வியந்து ஓ போட்டு கறிசோறு ஆக்கிப் போட்டு கை தட்டுவோமாக! இனிமேட்டு எக்காரணத்தைக் கொண்டும் யாரையும் செருப்பு பிஞ்சிரும் என்று கடுமை காட்டாதீர்கள். அதற்கு ஒரு காரணமிருக்கிறது. அதைச் சொன்னால் கோபம் வரும்.

நர்மதா ஆறே! என் வாலிப பருவத்தில் நான் ஏதேதோ ஊர்களில் அதிகாலை நேரத்தில் விழித்து, ஓடும் ஷூ அணிந்து மென்மையான கவாத்து உடையணிந்து உடற்பயிற்சிக்கென சிறு அசைவுகள் செய்து விழித்துக் கொண்டிருக்கும் தெருக்களில் இறங்கி ஓட்டமெடுத்தேன். உனக்கு தெரியாததல்ல. நான் உன்னைக் கொஞ்சூண்டு தான் பார்த்திருப்பேன். ஆனால் பார்த்தேன் என்பது உண்மை. உன்னிடம் இன்று பகிர்ந்து கொள்ள ஒரு கோளாறும் சொல்ல மாட்டாய் என்று நினைக்கிறேன். ஆம் நர்மதா ஆறே! நான் கோதாவரி ஆற்றிடம் என் மனதை இழந்துவிட்டேன். எப்படி என்றெல்லாம் கேட்காதே, ஏனெனில்… சிறு வயதில் எனக்கு கிருஷ்ணா ஆறென்றால் கொள்ளை பிரியம். அதிலிருந்தோ எப்படியோ கோதாவரி ஆற்றின் மேல் தீராத மையல் வந்துவிட்டது. கோதாவரி கோதாவரி என்று கோதாவரிகனி/ராமகுண்டம் சென்று நிம்மதி இழந்தேன். அப்போது ஆந்திரா மீல்ஸ் என்று அறியப்பட்ட உணவினை பெரிய தயவு செய்து கரிய இருள் சூழ்ந்த வீதியில் இறுக்க மூடிய கதவுகளை திறந்து உள்ளே அழைத்து அமரவைத்து பறிமாறி தூங்குவதற்கு இடமும் அளித்த விடுதி அய்யாவிடம் நான் கோதாவரி ஆற்றைப் பற்றி பேசவில்லை. நர்மதா ஆறே, உன் ஒருத்தியைப் பற்றி தான் யாரிடமாவது உணவருந்திக் கொண்டே அளவளாவியிருக்கிறேன். நர்மதா ஆறே, நீ சந்தோசமாக, ஜாலியாக இருக்கக் கடவது! ஆனால் நர்மதா ஆறே, ஆற்றைக் கடக்கத் தெரியாதே!

காய் டாக் விமான நிலையத்தில் இருக்கும் இந்த விமாத்தின் உள்ளே நான் இருந்திருக்கக் கூடும்! இல்லையென்றால் பின்னாலே கடலருகிலுள்ள விமானத்தில் அமர்ந்திருப்பேனோ என்னவோ! இல்லையில்லை, முன்னாலே இருக்கும் விமானநிலைய வளாகத்தில் பெரிய மாப்கோலுடன் தரையை சுத்தப் படுத்திக் கொண்டிருப்பவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பேன். ஓடிப்போக முடியாமல் தேங்கும் போது மழைநீரைக் கூட திட்டுவோமே! ஏம்மா கீழேயும் போ மாட்ர மேலேயும் போ மாட்ர சைடுலயும் போ மாட்ர, இப்படியே குந்திகினு இருக்கறே! நாங்கலாம் எப்படி ப்ரோஜக்ட் பண்ணறது போனசு வாங்குறது, கோவாக்கு போறது!

கூடாரம் இருக்குதா என்று நம்முடைய அரசியல் தலைவர்கள் தத்தம் வீடுகளில் தேடிப் பார்த்தார்களானால் எங்கேயாவது ஒரு இடத்தில் அவர்கள் கண்டுபிடித்து வெற்றி பெறுவார்கள். அதற்கு முன்னர் எனக்கு எல்லா அரசியல் தலைவர்களிடத்திலும் பிடித்ததே அவர்கள் நிறைய ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளுவது தான். கூடாரம் இல்லையென்றால் ஒரே அய்யே என்று இருக்கும். ஒபாமா அய்யா, சீ சின்பிங்க் அய்யா இவர்களுக்கெல்லாம் இந்த கூடார விசயம் பொருந்துமா என்று தெரியவில்லை. நம் நாட்டு தலைவர்களோ கண்டிப்பாக கூடாரப் பிரியர்களாகவே இருந்து வந்துள்ளனர். சில தலைவர்கள் தமது கூடாரங்களை ஏறக் கட்டிவிட்டனர் என்று சொன்னால் நம்பித்தான் ஆக வேண்டும். அதுமட்டுமல்லாமல் இப்போது அதிகாரிகள், கூடாரம் அடித்து தங்க யாரையும் அனுமதிப்பதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் இப்போது தான் எல்லோருக்கும் சகல வசதிகளுடன் கூடிய நட்சத்திர விடுதிகளை ஏற்பாடு பண்ணியிருக்கிறோமே என்று சொல்லி விடுகின்றனர். அரசியல் தலைவர்களெல்லாம் சேர்ந்து என்ன இருந்தாலும் கூடாரத்தில் தங்குவது போல் வருமா என்று கேட்டுப் பார்த்திருக்கின்றனர். சரி பரிசீலித்து சொல்கிறோம் என்று அதிகாரிகள் கூறி இப்போது பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சில பேர் முப்பது வருடங்கள் என்கிறார்கள், சில பேர் நாற்பது வருடங்கள் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள். இந்த விசயத்தை அரசியல் தலைவர்கள் மறந்தே போய் விட்டார்கள். அதிகாரிகளும் இந்த விசயத்தைப் பற்றி ஒரு திட்டமும் போடாமல் விட்டுவிட்டார்கள். நல்ல வேளையாக ஆங்காங்கே சில பல கோட்டைகளை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். நான் கொஞ்சமாக எட்டிப் பார்த்த கோட்டைகளான தில்லி செங்கோட்டை மற்றும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை இதெல்லாம் குறிஞ்சிக்கோட்டை போல வாராதாம். ஏனென்றால் குறிஞ்சிக் கோட்டை உயரமான மலையில் இருக்கிறதாம் என்று, ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவரான குஷால் தாத்தா தன் பேத்தியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த இடத்துள் ஒரு மேட்டு சங்கதியைப் போடலாம் என்று,

நீர் நிரம்பி ஓடும் ஆறுகள் கண்டு
நிறை குடங்களும் தளும்பும்

இன்றேல் எப்படி தணியும் தாகம்
எட்டி கயிலாசம் போனால் விளங்குமோ ?

ஜீலம் என்று யாருக்காவது பெயர் சூட்டிக் கேள்விபட்டுள்ளீரா? ஒரு நாள் ஸ்கேன் ஆஸ்பத்திரியில் பெரிய கூட்டம் காத்திருக்கையில் திருவாளர் சி குரியன் ஒரு சூப்பரான லெதர் பையுடன் வந்து வரவேற்புக் குழுவிடம் தன் கம்பெனி பிரதிநிதியாக வந்திருப்பதாகவும் கொஞ்சம் முன்னுரிமை கொடுத்து மருத்துவருடன் பேச்சுவார்த்தை செய்ய ஆவன செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அறிமுக அட்டையைப் பெற்று உட்கார சொல்லப்பட்டார் திருவாளர் சி குரியன். அன்று இருபது பேர் எல்லோருமே பிள்ளைத்தாய்ச்சிகள் ஒருவர் பின் ஒருவராக ஸ்கேன் அறைக்குள் சென்று குறைந்தது முக்கால் மணி நேரம் இருந்து மருத்துவருக்கு திருப்தி ஏற்படும் வரை ஒத்துழைத்து ஸ்கேன் எடுத்துக் கொண்டு சென்றார்கள். மருத்துவர் ஐந்து பேருக்கு ஸ்கேன் வேலை முடித்தவுடன் பக்கத்து அறைக்கு சென்று சின்ன தட்டில் மிக்சர் சாப்பிடும் போது திருவாளர் சி குரியனை வரவைத்து முகமலர்ந்து பேசி ஐந்து நிமிடத்தில் அனுப்பி விட்டார். திருவாளர் சி குரியனுக்கு அடுத்த மீட்டிங்க் அருகே தான் இருந்தது. வெளியே செல்வதற்குள் மொபைலில் அடுத்த மீட்டிங்க் தாமதமானது குறித்து தகவல் வந்திருந்தது. வெயிலிலிருந்து தப்பிக்க அங்கேயே சற்று நேரம் உட்கார்ந்து கணக்கு எழுத ஆரம்பித்தார். கூட்டிப் பெருக்கி அழகாக இடத்தை வைத்து மருத்துவரின் நன்னூலில் இடம் பிடித்திருந்த அன்னம்மா திருவாளர் சி குரியனிடம் பேசிவிட்டு சென்றார். அன்னம்மாவிடம் பேசியவுடன் உருட்டி உருட்டிப் பார்த்தும் சரிவராத கணக்கு சரியாக வந்துவிட்டது. எல்லாவற்றையும் பையில் வைத்து மூடி வைத்து நிம்மதியுடன் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலானார் திருவாளர் சி குரியன். அவரையே பார்த்துக் கொண்டிருந்த முதன்முறையாக கர்ப்பவதி ஆகியிருக்கும் பாரதி டக்கென்று தலையைத் திருப்பிக் கொண்டாள். கூட்டம் கொஞ்சம் குறைந்து இருந்தது. வரவேற்புக்குழு பாரதிக்கு சைகை செய்து இன்னும் இருவருக்கு அப்புறம் செல்ல வேண்டும் என்று தண்ணீர் பாட்டிலை நீட்டினர். அரைசிரிப்பு சிந்தி வேண்டாம் என்று சொன்னாள் பாரதி. காயிருப்ப கனி கவர்ந்தற்று போல் இருக்கிறது பாரதிக்கு.

கரடி விடுவது மிகவும் முக்கியமான திறமை என்பது வல்லுநர்கள் சொல்வது. நாம் சிறுவர்களாக இருக்கும் போது நண்பர்களிடம் பேசும் போது பதினைந்து இட்லி ஒரே நேரத்தில் சாப்பிட்டிருப்போம். ஒன் கிலோமீட்டர் டென் மினிட்ஸில் ஓடியிருப்போம். நம்ம அப்பா புலிப்பால் குடித்திருப்பார். கரடி விடுங்கள், கரடியை விடுத்து டீ, காப்பி, ராகிமால்ட் போன்றவைகளுக்கு ஆதரவு கொடுங்கள்!

உள்ளே சென்றவளுக்கு மருத்துவரால் விரைவில் விடை கொடுத்து அனுப்ப முடியவில்லை. வெளியே வந்ததும் பாரதிக்கும் தாள முடியவில்லை. முயற்சியின் சிறு எக்களிப்பு தோன்ற தினவெடுத்து அன்னம்மாவிடம் பேசலானாள். என்னக்கா என்ன தான் டாக்டரம்மா உத்து உத்து பாக்குறாங்க, மறாக்கா உள்ள போனா கிடைச்சிருமா என்றாள். திருவாளர் சி குரியன் அடடே என்று பார்க்க அன்னம்மா, வவுத்துல இருக்க பிள்ளைக்கு மூளைல நல்ல ரத்த ஓட்டம் இருக்கானு பாத்துட்டா அப்பால டாக்டரம்மா உன்னய உட்டுருவா என்று கூறினாள். பாரதி சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து தன் தலையைத் தானே கோதிக் கொண்டாள். ஓகோ, பார்ட்டி மேட்டர் சிலாங்க்ஸ் தெரிஞ்சு போச்சு டோய் என்று மெதுவாக எழுந்து சுவர் பக்கம் ஒட்டியிருந்த போஸ்டர்களை நோட்டமிட்டவாறு ரிலாக்ஸாக காத்திருந்தாள்.

கோவை ரயில்நிலையத்து பயணச்சீட்டு வாங்குமிடத்தின் முந்தைய தோற்றம். கடிகாரம், கூலர் மற்றும் கதவுகள் தெரியுமிடத்தில் தான் இப்போது பயணச்சீட்டு வாங்கும் சாளரங்கள் இருக்கின்றன.
இப்ப உள்ள ப்ரைமரி பள்ளி குழந்தைகள் ( சில பேர்கள் ) சொல்வது போல் நேற்று இரவு இந்த மீடியம் பதிவு கொலேப்ஸ் ஆகிவிட்டது! இந்த பாடலை கடைசியில் போட்டு முடித்துக் கொள்ளலாம் என்ற போது தயாரிப்பாளர் இது வேணாம் நல்லா இல்லை என்று சொல்லிவிட்டார். ரொம்ப tired ஆகிப் போய் எடிட்டரிடம் ரிவ்யு காணித்தால், நல்லா இருக்கு சார். ஆனால் இந்த பாட்டு கடைசில வரக்கூடாது. இதுக்கப்புறம் ஒரு ATM ட்ராக் — அதுக்கு sudo வேணும், வாங்கிக்கங்க, ATM ட்ராக் வச்சிட்டா போதும், this is your break, director — விட்டுறாதீங்க! எடிட்டராவது பொடிடப்பாவாவது, காக்கா குருவி காக்கா குரிவி என்று தூங்கியே போனேன் நான். காலையில் மொபைல் பீப்ப சட்டென்று கையில் எடுத்தேன். முக்கியமானவரின் மெசேஜ் : இந்த பாட்டு கண்டிப்பா இருக்கணும். இந்த பாட்டுனால தான் ஆடியன்ஸ் கான்செப்டை லிஃப்ட் பண்ணுவாங்க, so don’t ever worry, என்று எழுதி இருந்தது!

ஓகே கூகுள் போன்றே அலெக்ஸாவும் என்னை விட்டு வைக்கவில்லை. அலெக்ஸாவுக்கும் எனக்கும் சிறுவயது முதலே பழக்கம் என்றாலும் எதையெதையோ ஆராய்ந்து கேட்டாலும் பெரிதாக ஒன்றும் பதில் சொல்ல மாட்டாள். இப்ப அலெக்ஸா எல்லோருக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும் கேள்விகள் கேட்டவுடனே விடைகளை செவ்வனே தந்து விடுவதாகவும் கூறுகிறார்கள். அலெக்ஸா நல்ல ஆப் தான்! எப்பவும் பேஜார் பண்ண மாட்டாள். ATM போல தான், அலெக்ஸாவும் ஆனால் ATM அதிகம் பேசாமல் பேங்க் கார அய்யாக்கள் கேள்விகளுக்கு மட்டும் கதை சொல்லும் படிக்கு வடிவு பெற்றிருக்கின்றன.

பணம் எடுக்க என்னுடைய ATM-க்கு சென்றால் அங்கே ATM-ல் உள்ளே இருந்த இருவரும் திருவாளர் சி குரியன் அவர்களின் இரண்டாவது சித்தியின் மகன் B குரியன் மற்றும் இன்னொரு வேண்டப்பட்டவரான B குரியன் என்று தெரிந்துவிட்டது. இவர்கள் இருவரும் முதலில் ட்ராக்டர் ஓட்டிக் கொண்டிருந்தவர்கள் அப்புறமாக USPC தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இப்போது இருவரும் விமான பைலட்டுகளாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு நீல கலரில் பேங்க் பெயர் இவர்களின் பெயர் அட்டை எண் எதுவும் போட்டிராத ஸ்பெஷல் பேங்க் கார்ட் கொடுத்து இருக்கிறார்கள்! அந்த காலத்து அய்யாக்கள் போல் வாழ்கிறார்கள். பி குரியன் இருவர்களும் நம்மை சிந்திக்க வைத்துக் கொண்டு இருந்த போது, அங்கே ATM அருகாமையில் இருப்பத்தைந்து பேர் நின்று பெரிய கட்டு ரூபாய் நோட்டுகளை எண்ணிக் கொண்டிருந்ததை நாம் கவனிக்கத் தவறி விட்டோம். இப்படிப் பார்க்கவே முடியாத காட்சியாக அந்த இருபத்தைந்து பேர்களின் பணம் எண்ணும் காட்சி அமைந்துவிட்டது. எனக்கு எடுத்த எடுப்பில் தோன்றியது இரண்டு விசயங்கள்:

  1. இவர்கள் இருபத்தைந்து பேர்களும் பலே கில்லாடிகள் — என் உயர்ந்த மரியாதைக்கு உரியவர்கள்
  2. ஏன் எல்லோருமாக நின்று ATM-ல் எடுத்த நோட்டுகளை எண்ணிக் கொண்டுள்ளார்கள்? இது என்ன மெசேஜ் நமக்கு கொடுக்குது?
  3. இந்த புதிரை நாம் கண்டுபிடித்துவிட்டால் கண்டிப்பாக ஜோயல் கடையில் சாக்லெட்டு மிட்டாய் வாங்கி சாப்பிட்டாக வேண்டும்!

நான் பணம் எடுத்துக் கிளம்பும் போது, கடைசி ஸ்க்ரீனில் பெரிதாக நீங்கள் இந்த ATM-ல் எடுத்த பணத்தை எண்ணி சரிபார்த்த பின்பு செல்க என்று போட்டிருந்தது! என்னுடைய செல்ல ATM-மை சந்தேகப் படுவதா! என்று போகலாமென்றால் வெளியே இருந்தவர்கள் பணம் எண்ணிக் கொண்டிருந்ததைப் பார்த்து இருமனம் வந்து விட்டது. முதல் முறை பணத்தை எண்ணும் போது 101 நோட்டுகள் — சன்தோசப் பட்டேன், இரண்டாம் முறை எண்ணிய போது 102 நோட்டுகள் — மீண்டும் சந்தோசப்பட்டேன், இப்போது கடைசியாக எண்ணிய போது 99 நோட்டுகள் — நம்ம தப்பாக எண்ணியிருக்கக் கூடும் என்று தலையை உயர்த்திப் பார்த்தால் என் பின் பளபளவென்று ATM நிற்கிறது!! எல்லோரும் மும்மரமாக பணம் எண்ணிக் கொண்டிருந்தனர். எனக்கு உன்னைப் பிடித்து விட்டது, உன் வீட்டுக்கு அழைத்து செல் என்று ஆணையிட்டது என் ATM. என்னடா இது, ATM நம்மோடு நடை போட்டு வந்து கொண்டிருக்கிறது. என்ன ஆயிற்று இன்று, ஜோயல் கடை சாக்லெட் மிட்டாய்க்கு தானே நாம் ஆசைப் பட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், ATM ஜூஸ் கடையைப் பார்த்து அங்கே போலாமே என்றது. நான் என்ன! என்றதும், ATM, பரவாயில்லை நான் வாங்கித் தருகிறேன் என்றது! சரி, அப்ப இப்ப ஜூஸ் பிரேக்!!

ஏன் என் வீட்டுக்கு வர வேணுமாம், ATM-க்கு? இந்த முறை முதன்முறையாக இந்த கேள்விக்கான பதிலை ATM சொல்லப் போகிறது!
( இது என்ன சென்னை-ன்னு நினைச்சிட்டியா என்று ஒரு அப்பா தன் மகளிடம் பேசிக் கொண்டே வெளியே போகிறார் )

நீ நல்ல கதை எழுதுகிறாய், என்னிடம் நிறைய கதைகள் இருக்கின்றன. உன்னோடு வந்து நீ கதை எழுத நான் உனக்கு துணையாய் இருப்பேன் என்று சொல்லிவிட்டு ATM மௌனமானது. நான் இருக்கையிலிருந்து எட்டி ATM-மை பற்றிக் கொண்டேன். ATM என்னைப் பார்த்து, உம் எழுது, நானிருக்கிறேன் உன்னுடன், எழுது என்றது!

மீசைக்காரர்களும் ஆசைக்காரர்களும் புட்பால் போட்டி ஆடப் போகிறார்கள். போன முறை மீசைக்காரர்களின் ஆட்டத்தை தாக்குப் பிடிக்க முடியாத ஆசைக்காரர்கள் இந்த முறை நல்ல பயிற்சிகள் செய்து நம்பிக்கை தெளிவு மற்றும் புது இறக்குமதிகளுடன் வந்துள்ளார்கள் என்று விமானத்திலுள்ள டிவியில் சொல்லிக் கொண்டிருக்க, யாருடைய கவனமும் அதில் இல்லை. எங்கள் குழு புனித மக்கா மதினா யாத்திரை செய்து முடித்து கோவை திரும்பிக் கொண்டிருந்தோம். இப்போது ஷார்ஜாவிலிருந்து கோவை சென்று நெருங்கிய சொந்தம் மற்றும் நண்பர்களுடன் கலந்து முகமன் கூறி ஒரு சின்ன நன்றியாக பேரீச்சம்பழமும், ஜம்ஜம் தண்ணீரும் கொடுத்து அவரவர் அலுவலுக்கு செல்ல வேண்டும். எனக்கு ஏ அப்பா! என்றிருந்தது. எனக்கு முன்னர் இரண்டு வரிசை தள்ளி ஏ அப்பா! என்று சத்தமாக ஒருவர் கூறவும் விமானப் பணியாளர்கள் முகமலர்ந்து ஏ அப்பா! என்ன அழகான ஓசை, கேக்கறதுக்கே சூப்பராக இருக்கு, இந்த மகிழ்ச்சியில் எல்லோருக்கும் ஒரு சிறுபாட்டில் மோர் இலவசமாக வழங்கக் படுகிறது என்றதும் நிறைய பேர்கள் ஆங்காங்கே இருந்து கையை உயர்த்தி ஏ அப்பா என்று சொன்னவரைப் பார்த்து, ஏ அப்பா ஏ அப்பா என்று மெல்லிய குரலெழுப்பி உற்சாகப் படுத்தினர். நான் ஏ அப்பா என்று நினைக்கையிலே இவர் ஏ அப்பா என்கிறார். இப்ப மோர் பாட்டிலுக்கு வேற அவசரமாகத் தவிக்குது மனசு. ஏதேதோ எண்ணங்களில் நீந்தி மூழ்கி மூச்சு வாங்கி சுதாரித்து ஏ ஆத்தா என்று மனசுக்குள்ளே சொல்லி கண்ணை மெதுவாகத் திறந்து பார்த்தால் யாரோ ஒரு பெண்மணி என் அருகு இருக்கையில் அமர்ந்திருந்தார். பணியாளர் மோர் பாட்டில் இதோ என்று கொடுத்துவிட்டு நகர்ந்தார். நான் அப்போதே மோர் குடித்தால் தான் விமானத்தை கிளப்புவார்கள் என்று உள்ளுணர்வு சொல்லிற்று. விமானத்திலிருந்த மற்ற அனைவருக்கும் முன்னர் நான் மோர் குடிக்க ஆரம்பிக்க எங்கள் பக்கமாக வந்த பணிப்பெண் என்ன பாஸ் அதுக்கள்ள குடிச்சிட்டா! என்று தலையை சாய்த்து பாவனையாலேயே அழகாக சிரித்து வைத்தார். கொஞ்சம் எட்டி முன்னும் பின்னும் பார்த்தால் எல்லோரும் ஏ அப்பாவை சுத்தமாக மறந்து விட்டிருந்தனர். ஒன்பது வயதில் நண்பன் வீட்டுக்கு சென்று நான் கோலா உருண்டைகளை தின்ன வேகத்தைப் பார்த்து அவன் ஏ அப்பா என்றான். அப்போது ஏ அப்பா என்னுடன் கூடவே வந்துவிட்டது. ஆறு வயதுப் பையன் ஏதோ திருப்பி திருப்பி சொல்லி களித்துக் கொண்டிருந்தவன், சாளரத்தில் சாய்ந்து வேடிக்கை பார்க்க கண்களை கண்ணாடியில் பதித்துக் கொண்டான். என்னருகு அம்மையும் சிறுவனைப் பார்த்து மெலிதாக சிரித்துக் கொண்டு திரும்ப திரும்ப ஏ அப்பா சொல்கிறான். இன்னும் சற்று நேரத்தில் நம் விமானமும் ஏ அப்பா என்று மேல்காற்று மண்டலத்தில் தாவிவிடும். ஏ அப்பா! என்றவர் முகம் சட்டென சிந்தனை ரேகைகள் படர பையில் இருந்து தன் மொபைலை எடுத்து இரண்டு செகண்ட் அவசரத் தட்டலுக்கு பிறகு என் திசையில் காட்டி மேலே கீழே கொண்டு வந்துவிட்டு பளிச்சிடும் ஸ்கிரீனை எனக்கு காண்பித்தார். யாஸ்ஸ்! சூப்பர்! என்னைப் பார்த்து கட்டைவிரலை உயர்த்திக் காட்டி சிரித்தார். ஏதோ எனக்கும் சேர்த்து உற்சாகத்தை காற்றிலிருந்து வாங்கி என் முன்னே வைத்து உம் எடுத்துக் கொள்ளுங்கள் எனும் போது நான் ஒரே ஒரு மிட்டாய் எனக்கு போதும் என்பது போல் மெதுவானேன். நாம் நண்பர்கள், குறைந்தபட்சம் இந்த விமானத்தில் இருந்து செல்லும் வரை நாம் உற்ற நண்பர்கள் என்று கூறி இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டார் பெண்மணி. நான் இப்போது அவர் கொடுத்த உற்சாகத்தை ஒரு கை பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். நன்றாக இருக்கிறது என்று பலமாக ஞான் கூற, அவர், என்ன! ஞான் இன்னும் என் பெயரைச் சொல்லவே இல்லையே! என் பெயர் சாரா புல்லக் நிர்பயா.

டியூப் லைட் பிரியர்கள் என்று யாராவது கண்டிப்பாக இருப்பார்கள், இல்லையென்றால் உங்கள் வீட்டு சிறுகுழந்தைக்கு இந்த படத்தில் டியூப்லைட் எங்கயோ இருக்கு, கண்டுபிடி என்று கட்டிப் பிடிக்கலாம்! முத்தமும் கொடுக்கலாம்! இரும்பு பிரியர்கள் என்று யாரைக் கூப்பிடலாம்? இரும்பு தூக்கிகளைத்தான்!

நான் ஸ்டேட் டிபார்ட்மென்ட்-க்காக வேலை பார்க்கிறேன் என்று கரத்தை நீட்டினார். என் விரல் நுனிகளை அவர் பற்ற என் கை தன்னை சீக்கிரம் விடுவித்துக் கொண்டது. நீங்கள் அப்போது sudo ஆளா? என கேட்க, அவர் ஆம், முற்றிலுமே ஆம், சூடோ ஸ்டேட் டிபார்ட்மென்ட்டின் ஆபிசர் சாரா புல்லக் நிர்பயா என்று என் பக்கமாக திரும்பி புன்னகைத்தார். கொஞ்சம் நேரம் — 3 நிமிடம் எதுவும் பேசவில்லை. என்னுடைய உடல் பாராமீட்டர்கள் — படபடப்பு, மூச்சு பேட்டர்ன், டென்சன், வேர்வை, இதயத்துடிப்பு என்று உள்சோதனையை, என் உடலே செய்து கொண்டிருந்தது ( அப்படி ஒரு உணர்வு ). இந்தம்மா நம்மை டென்சன் படுத்தினால் நாம் என்னத்துக்கு ஆவோம் என்று பாவனையில்லாமல் இருப்பதைப் பார்த்து அவர் என்ன சிரிப்பு முழுதுமே கார்கோ-ல ஏற்றி விட்டீர்களா என்றார்.

ஷார்ஜா விமான நிலையத்தில் சூடோ ஸ்டேட் டிபார்ட்மென்ட் ஆபிசர் சாரா புல்லக் நிர்பயாவுடன் நான்!

மிகுந்த ரோசத்துடன் என் சட்டை பாக்கெட்டிலிருந்து விஷ் டப்பியை எடுத்து எனக்கு இது போதும் என்று காட்டினேன். சாரா தன்னையும் அறியாமல் என் அருகில் கொஞ்சம் நகர்ந்து உட்கார, நானும் கொஞ்சம் விட்டுக் கொடுத்தேன். ஹே சாரா, அப்ப உங்கள நான் தொட்டுப் பாக்கணும், யஸ்ஸ், அப்ப தான்.. ஆமாம்.. என நான் சொல்ல, சாரா பின்னால் சாய்ந்து உட்கார்ந்து தன் கையை இருக்கைப் பிடிப்பான் மேல் என் பக்கமாக பரத்தி வைத்து உம் என்று பெரிதாக இதழ்களை விரித்தார். நான் ஆகா உற்சாகம் பீரிட ஆரம்பித்து விட்டதே என்று என் ஒரு விரலை மையமாக சாராவின் நீண்ட கை மேல் படர விடும் நொடி நேரத்தில் மற்ற பயணியரிடம் களேபரம். ரொம்ப தாமதம் செய்கிறார்கள், விமானத்தைக் கிளப்புங்கள் தலைமை பைலட் எங்கே? என்று கூச்சல். சிங்கத்தை வலையிலிருந்து மீட்கையில் நம் தந்திரத்தை மிகவும் சிரத்தையாக அசராது செய்து முடிக்க வேண்டும் என்று முகுந்தராஜா சொன்னதை நினைவில் கொண்டு சாராவின் முழங்கை பக்கமாக ஒருவிரல் பதித்தவுடன் டக்கென்று விமானத்தின் எஞ்சின்கள் விய்ய் என்று ஸ்பெஷல் ஓசையுடன் உயிருக்கு வந்தன.

விமான தலைமை பைலட் தன் சக பைலட்டிடம் அனுமதி கிடைத்து விட்டது. முதலில் ஸ்டார்போர்ட் மோட்டார்களை ஸ்டார்ட் செய்து மற்ற மோட்டர்களையும் ப்ரைம் பண்ணுங்கள். நான் ஃபுயூசலேஜ் செக் பண்றேன். டெயில்விண்ட்ஸ் பிரமாதமா இருக்கு இன்னும் 69 நொடிகளில் நாம் டாக்ஸி பண்றோம், ஆனா க்விக்! என சொல்லும் போதே கடைசி எஞ்சின் சுழன்று அதிவேகத்தை அடைந்தது.

களேபரத்திலிருந்த பயணிகள் ஓமைஜி !கடைசியில் நாம் பறக்கப் போகிறோம் யே! என்று இருக்கையில் அமர்ந்து துரிதமாக சீட்பெல்ட் அணிய ஆயத்தமாயினர். முன் வரிசையில் அமர்ந்திருந்த இளம் சீமாட்டி தன் நண்பனிடம் டேய் தும்பினா, நீ ஏ அப்பா சொன்னதும் விமானம் கிளம்பி விட்டது. எனக்கு ஏ அப்பா — அதைக் கேட்டாலே என் டாடி நினைவு தான் வருது! நல்ல பேட்டி மா நீ — ம்பார் இதைக் கேட்டால்.

நான் ஒருவிரலில் தொட்டவுடன் விமானம் கிளம்பும் களேபரம் நடந்து சாரா, ஓகே உகும் ஓகே என்று என்னை பார்வையால் அளக்க, நான் என் ஒருவிரலை மிகவும் சிரத்தையுடன் நகர்த்தினேன். விமானமும் நகர்ந்து மெதுவாக ஓடுதளத்தில் வேகம் பிடித்தது. என் ஒருவிரலை அப்படியே அவருடைய மணிக்கட்டு நோக்கி நகர்த்த நகர்த்த விமானம் வேகம் பிடிக்க சாரா குறுகுறுப்பு சிந்தும் கண்களுடன் என் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் மணிக்கட்டைத் தொட்டவுடன் சாரா என்னுடைய கரத்தை அழுத்திப் பற்றிக் கொள்ள விமானம் விர்ரென தாவி வானத்தில் வேகமாக உயரத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. சூடோ வெற்றிக் களிப்பில் எங்கள் கைகள் விரல்கள் கோர்த்து லேசான பரவசம் அடைந்தன. சாரா கெட்டியாக பிடித்திருந்த என் கை எங்கே என்று கண்டுபிடிக்கலாமென்று சாராவைப் பார்த்தால் ஆபிசர் தூங்கிவிட்டார். அவருடைய புஜத்தில் ஒரு அமுக்கு அமுக்கினவுடன் சாரா கண் விழித்தார். என்ன ஆபிசர் தூங்கிட்டிங்க, போங்க ஆபிசர் நீங்க, என் கையை விடுங்க நீங்க! என்றேன். ஆபிசர் சாரா, ஆபிசர் இல்லடா சாரா! நான் கொஞ்சம் நேரம் எஞ்ஜாய் பண்ணி கண்ணை மூடிட்டிருந்தேன். எனக்கெல்லாம் இது ரொம்ப முக்கியம் டா. வேறென்னடா, எனக்கே சில விசயம் பேசணும்னு இருக்கு, இப்ப உன்னை விட்டா அளில்லை என்றார்.

நான் டிங்க்டிங்க் என்றேன். சாரா டிங்க்டிங்க் என்று சொல்ல இருவரும் ராசியாகி விட்டோம்.

எங்கள் இருவரின் அமைதியை ஆச்சரியப்படுத்தும் விதமாக விமான கேப்டன் சில புத்தம்புதிய, மற்ற விமான சேவை கம்பெனிகளில் இது வரை பார்த்திராத சில இனிய அரிய பொக்கிஷங்களை பயணியர்களிடத்தில் பகிர ஆரம்பித்தார்.

ஹலோ பயணிகளே நான் உங்கள் கேப்டன் பேசுகிறேன். உங்களுக்கு எங்களி பணியாளர் இப்போது கண்ணாடி கொடுப்பார்கள். அதைப் போட்டுக் கொண்டீர்களா! சரி, இப்ப இங்கிட்டு பாருங்கள் அதோ அங்கே ரஷியா தெரியும் போன வாரம் அங்கே விசேஷம். இப்பவும் கூட்டம் பாருங்கள். இந்த பக்கம் பாருங்கள் இன்னும் கொஞ்சம் உத்துக் பாருங்கள் ஒரு ரங்கராட்டினம் தெரிகிறதா! ஆம் அது லண்டன் தான், இன்னும் சிறிது நாட்களில் உங்களுக்கு தான் தெரியுமே! மக்களே ஒரு பெரிய கோலாகலமான திருமணம். இந்த லண்டன் அனுபவத்தை 30,000 அடு உசரத்தில் உங்களுக்கு அளிப்பதில் எங்கள் ஏர்லைன் பெருமகிச்சி அடைகிறது. இன்னும் இருக்கிறது உட்கார்ந்த இடத்திலில் கொஞ்சம் பின்னோக்கி பாருங்கள், ஆ ஆகா! நாங்கள் பைலட்கள் அன்றாடம் கண்டு களிக்கும் காட்சிகளை நாங்கள் முதன்முதலில் எங்கள் அன்பார்ந்த வாடிக்கையாளர்களான உங்களுக்கு வரலாற்றிலேயே முதன்முறையாக காணிக்கை ஆக்கியிருக்கிறோம். கண்டிப்பாக உங்கள் வீட்டாரிடமும் நண்பர்களிடத்தும் இந்த சந்தோசமாக விஷயத்தை பகிர வேண்டுடிறேன்.
சந்தோஷித்த பயணிகளிடம் இப்போது ஏ அப்பா ட்ரெண்ட் உறுதியாகிவிட்டது!

வாழைமரத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை. இந்தா பிடித்துக் கொள் என்பது போன்று குலை தள்ளும். வாழைப் பழமும் தன் பங்குக்கு நம்மை கடனாளி ஆகாமல் பார்த்துக் கொள்ளும். எத்தனையோ டென்னிஸ் வீரர்கள் வீராங்கனைகளை பெரும் பெரும் கோப்பைகளை வென்று பெரும் தனக்காரர்கள் ஆக்கிய பெருமையும் டிவி பார்த்து தெரிந்து கொண்ட மட்டிலும், பனானா என்று விளிக்கப் படுகிற வாழைப்பழத்தையே சாரும். இந்திக்காரர்களுக்கு கேலே பிடிக்காது இருந்ததில்லை. அரபி மற்றும் பாரசீக பாஷைகளில் மூவ்ஜ்/movz என்று சொல்கிறார்கள். முலாம்பழத்துக்கு அரபி மொழியில் ஷமாம் என்றும் பாரசீக மொழியில் கர்பூஜா மஷ்க் என்றும் அழைக்கிறார்கள். மராட்டியில் இதற்கு என்ன பெயர்? யவத்மல்லில் ( YAVATMAL ) இது கிலோ எவ்வளவு என்று கேட்டால் தெரிந்துவிடும்!

எனக்கொன்றும் உனக்கொன்றும் என்று
மென்றும் மெல்லாமலும் உண்ண பத்து

பழங்கள் வைத்திருப்பதாய் சொன்னாயே
சொன்னேனே என்று சொல்லவேண்டுமா

அடடா அப்படியா, என் வீட்டுக்கு வந்து பார்
என்னைப் பிடிக்கும் என்று சொன்னாயா!

நீயும் பத்து பழங்கள் மெல்லலாம் என்றாய்! நமக்கு
பத்தும் லாபம்தான், மென்றல்லவா தொலைந்திருக்கும்!

--

--