ஜூஜூபெர்ரி மரப்பிசினும், நடுசாலைராஜின் தந்திரமும்..

ஊர்தி/ஊர்த்துவம் — வாகனம்/மேல்நோக்கம் என்றும், ஊர்த்தம் என்பது மேட்டுப் பாங்கான இடம் என்றும் அறியலாம்!

நடுசாலைராஜ் இப்ப எங்க இருக்காரென்று எனக்கு தெரியவில்லை. எனக்கு தெரிந்தவரையில் அவருக்கு கொம்புச்சா பிடிக்குமாதலால் முதலில் அவருக்கு கொம்புச்சா படையலை வைக்கலாமென்று முயன்று பார்க்கிறேன்.

நான் நடுசாலைராஜ் போல் அல்ல. இந்த வீடியோ பதிவில் உள்ள ஊர்களுக்கு நான் போகவேண்டுமென்றால் — எப்படி என்று சொல்லிவிடுகிறேன். நான்கு டப்பா ஹார்லிக்ஸ் பத்து நாட்களில் உண்டு, உறுதிதரும் கவாத்து முறைகளில் ஈடுபட்டு… போக மாட்டேனென்று சொல்லிவிடப்பா, நீ இதெல்லாம் செய்து முடித்து வருவதற்குள் பெல் அடித்துவிடுவார்களே என்று நடுசாலைராஜ் அங்கலாய்க்கிறார். அவரைப் பற்றி தானே எழுதவேணும் என்கிறார். சரி, நடுசாலைராஜ் பற்றியே எழுதுவோம்! ஆச்சரியக்குறிக்கு அருமருந்து (டானிக்!) கொடுத்தது போல ஆகிவிட்டேன் நான். அவர் என்னிடம் விட்டெறிந்த கட்டையைக் கண்டு!

உயிர் காக்கும் நல்ல கட்டையை என்னிடம் நடுசாலைராஜ் அசால்டாக விட்டெறிந்து, என்னை கெட்டியாகப் பற்றச் செய்து கதைவிளக்கத்தை மெதுவாகவும் அனாயாசமாகவும் நிறைய சிரிப்புடனும், அப்புறமேட்டு ரயில்வே டீத்தண்ணி பலவும் அருந்த வைத்து, கேள்விகளை நானே கேட்கிறேன் (ஏனென்றால் எனக்கு பதில் தெரியாத சங்கதிகள் தான் இப்ப எனக்கு முக்கியம்) தூக்கமா? பசியா? அட அப்பால பாப்பமப்பா, உனக்கென்று ஒரு குத்தூசி வைத்து இருக்கிறாயா நீ என்று கூர்மையாக கேட்டு சிரிப்பைக் கசியவிட்டார் நடுசாலைராஜ். நான், என்னென்னவோ வைத்துள்ளேன் என் பையில், இப்ப உங்க மூஞ்சயே மாத்திவிடலாம் தான், ஆனால் குத்தூசி ஏதுக்காம் என இளிப்புடன் அவர் விட்டெறிந்த கட்டையை ( இந்தா இதைப் பிடி நீ — கொஞ்சம் நேரம் பிடி, நல்லா பத்திரமா பிடி ) என் விரல்களினால் வருடிக் கொண்டு இருக்கும் போது ஒரு சின்னூண்டு ஓட்டையை — கட்டையில் தான், என் விரல்கள் சுற்றி சுற்றி வந்தன. அப்போது நடுசாலைராஜ் தன் கட்டையை வெடுக்கென்று என்னிடமிருந்து பறித்துக் கொண்டு அந்த சின்னூண்டு ஓட்டையை உற்றுப் பார்த்து என்னையும் கொஞ்சம் முறைத்துப் பார்த்தார். என்ன அண்ணே இப்பதான் கொடுத்தீர்கள் அதுக்குள்ளார வாங்கிக் கொண்டு விட்டீர்கள், என்று அவருடைய கட்டைக்காக என் ஆவல் பறந்தது. என்னிடம் கட்டையைத் திருப்பித் தந்து ஒரு சொட்டுத் தண்ணீரை அந்த ஓட்டையில் விடு என்றார். இல்லை இல்லை என நான் பின்வாங்க, வலுக்கட்டாயமாக என்னை அந்த ஓட்டையில் சிறிது தண்ணீரை விழச் செய்து விட்டு, இப்ப ஒரு மேஜிக் நடக்கும் பாரு என்று கூறி நடுசாலைராஜ் என் முகத்தைப் பார்த்துக் களேபரமாகாமல் கொஞ்சம் பொறு அப்பா, இன்னும் கொஞ்சம் தண்ணி ஊத்து என்றார். என்னைக் கட்டுப்படுத்தும் விதமாக, இது ஒரு முக்கியமான நடிவடிக்கை என்று கூறி கட்டையைத் தன் கையில் வாங்கி தோ பார் மேஜிக் என்றார். நான் நன்றாக உற்றுப் பார்த்து, அட ஆமாம் இது எப்படி நேர்ந்தது என்று மெலிதாக கூவினேன்! இரண்டு பேருக்கும் பசியெடுத்ததால் கட்டையை பத்திரமாக இருத்திவிட்டு எங்களிடம் உள்ள இட்லி-வடை பொட்டலங்களை போணி செய்தோம். மற்ற பயணிகளில், பன்வேல் தம்பி ஒருத்தர் கட்டை மேஜிக் பார்த்து அசந்து எங்களிடம் தன் தண்ணீர் பாட்டிலைக் கொடுத்து பேச்சு கொடுத்தார்.

காலை உணவு போன்றதோர் அமுதம் வேறில்லை. எனக்கு பிடித்தமான காலை உணவு பனிரெண்டு மெதுவடை மற்றும் சாம்பார். ஆனால் எங்கள் ஆஸ்தான பாவா மேஸ்திரி அய்யா என்ன சாப்பிடுவார் என்று கேட்டீர்களானால்! பாவா மேஸ்திரி மைசூர் மாகாணத்திலிருந்து வந்தவராம்!! எனக்கும் கோஜிபெர்ரி ஐஸ்கிரீம் வேண்டும்… :-\ அப்ப தான் என்ன மேஜிக் என்று சொல்லுவேன் :-(

பிடித்தம் போக பிடித்துப் போன பணியில் தான் இருக்கிறாரா நடுசாலைராஜ்? அவர் போக்கு அப்படிக் காட்டவில்லை. இவருடைய சோனி வாக்மேன்-லிருந்து கண்டு பெற்ற பாடலின் இப்போதைய வார்ப்பு ஒன்று கீழே!

நடுசாலைராஜ் எழுதலாம். கண்டிப்பாக நிறைய திமிங்கலம் பார்த்திருப்பார். இந்த இடத்தில் என்னைப் பற்றி சற்று யோசித்துப் பாருங்கள். VEVO — வெவோ அல்லது வேவோ அல்லது _______ அல்லது ________ — இவை எனக்கு வைர கடுக்கண், பாம்படம், தொங்கட்டான், லோலாக்கு, டோலாக்கு, தோடு, ஜிமிக்கி, கம்மல் போன்ற ஆபரணங்களாகத் தெரிகின்றன. இதெல்லாம் நடுசாலைராஜ் கிட்ட சொல்லுவதற்கு முன் அவர் என்னிடம் கேட்ட கேள்வி: உன்னைப் பத்தி பீத்தரா மாதிரி என்ன இருக்குது? நான்: சொன்னா நம்ப மாட்டீங்க! பட்டை டேஸ்ட் கொண்டுள்ள சூயிங்கம் அப்புறம் மைசூர்பாகு சூயிங்கம் — இதெல்லாம் எங்க டீம்ல தான்— நீ என்ன பண்ண? அதச் சொல்லு என்று லடாய் ஸ்டைலில் கேட்கிறார் நடுசாலைராஜ்! நான் ராமசாமி டீம்ல டாக்யுமென்டேஷன் செய்தேன் என்பதை கேட்க நடுசாலைராஜுக்கு என்னவோ நோக்காடு. எழுந்து ஒன்பாத்ரூம் போக ஓடியே போய்விட்டார்.

சாப்பாட்டு இடைவெளியில் நடுசாலைராஜ் மும்பையில் நான் எங்கு தங்கி வியாபாரம் செய்கிறேன் என்று கேட்டார். இரண்டு இடங்கள் — கொலாபா ஓட்டல், மற்றும் தாதர்(கி) டார்மிட்டரி, மிகவும் வசதியாக உள்ளது என்றேன். நான் வியாபாரம் செய்கிறேன் என்பதை நடுசாலைராஜ் சொல்லிதான் தெரிந்தது போல ஒரு உறுத்தல். வேர்க்கடலை விற்கும் தாதர் பெண்மணிக்கு கூட இது ஏற்கெனவே தெரியும் தானே என்று சமாதானமாக இருக்கும் போது நடுசாலைராஜ் வாயில் இட்லித் துணுக்குகள் மலர, நீ தாராவில வந்து தங்கலாமே, எதுக்கு அங்க இங்க எல்லாம் இருந்துட்டு. வியாபாரம் பண்றதுக்கு ரொம்ப உசிதமான இடமப்பா. அடுத்த முறை கட்டாயமாக தாராவியில் வந்து தங்குவியாம் என்று சொல்லி அப்படியே சாப்பாட்டு படலம் முடிந்தது. சரி இப்ப மறுபடி இதுக்கு வருவோம் என்று கட்டையை எடுத்து என்னிடம் தந்தார். மேஜிக்!

யப்பா, லைட் அணைஞ்சு போச்சு — ஊத்து, தண்ணியை ஊத்து! இது ஏன் இப்படி பண்ணுதுனு எனக்கு தெரியும். ஆனா நீயா கண்டுபிடிக்கறியான்டு பாப்பம்.

கட்டை என்று சொன்னது, இப்ப உள்ள பெரிய செல்போன் அளவுக்கு இருந்தது. மரக்கட்டையாக இல்லாமல் உறுதியான பிளாஸ்டிக்கினால் செய்த செங்கல் போன்றும் அதே நேரத்தில் தண்ணீரில் மிதக்கக் கூடும் என்பது போன்ற தோற்றம் கொண்டிருந்தது. அதனுள் இரண்டே பொருட்கள். நாம் தண்ணீர் செலுத்திய மிகச்சிறிய ஓட்டை மற்றும் ஒரு மின்விளக்கு — டார்ச்லைட்டின் நுண்ணிய பல்பை ஒத்தது. இப்போது அந்த விளக்கு எரிவது பற்றி நடுசாலைராஜ் மூலமாகவே கேட்போம்!

விளக்கு அணையற மாதிரி இருந்தா ஓட்டையில தண்ணீரை ஊற்றச் சொன்ன நடுசாலைராஜ், விளக்கைப் பார்க்கையில் கொஞ்சம் பரவசமானது போல் தெரிந்தது. நடுசாலைராஜுக்காக விளக்கை எரியவைத்து பிரகாசத்தை படர விட்டேன். இயல்பு போல கேட்டார் நடுசாலைராஜ்: விளக்கு எப்படி எரிகிறது? சொல். ( நீ தான் என்னமெல்லாமோ தெரிந்தவனாக தெரிகிறாயே). அந்த கட்டையின் உள்ளே பாட்டரி செல் இருக்கும் என்றேன். சரி ஏன் தண்ணீர் விட்டால் வேலை செய்கிறது? அதைச் சொல் என்றார் நடுசாலைராஜ். வேறெதுவும் சுவிட்சு இல்லை என்று தெரிந்துகொள்ள வைத்தார். சொல்லுங்க நடுசாலைராஜ், தண்ணீர் பட்டால் தான் வேலை செய்யும் உத்தியை வைத்துள்ளார்கள் என்றேன். உள்ளே எப்படி அமைத்துள்ளார்கள் என்று உன்னால் ஏதாவது அனுமானம் செய்ய முடிகிறதா என்று நடுசாலைராஜ் கேட்டார். பாட்டரி செல், சார்ஜிங்க் என்ற எந்த விசயமும் தெரியவில்லை, என்றேன். ஆமாம்பா இதுக்கு அதெல்லாம் தேவையிருக்கக் கூடாது என்பது தான் விதி. அப்புறம் ஒன்று சொல்கிறேன் — உப்புத் தண்ணீரில் விளக்கு இன்னும் நன்றாக எரியும் என்றார். நான் அப்படியா, அப்ப நிறைய உப்பு போட்டால் இன்னும் நிறைய எரியுமா? என்று கேட்டேன். அதற்கு நடுசாலைராஜ் எங்கே அதிகமாக உப்பு உள்ள தண்ணீர் இருக்கும்? என்று கேட்டார். அப்ப கடலில் தான் மிக்க பிரகாசமாக எரியும்! என்றதும், நடுசாலைராஜ் சிரித்துக் கொண்டே ஆமாம் என்றார். நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? என்றேன். கப்பலில் வேலை, இரவு நேரத்தில் கடலில் விழுந்துவிட்டால் இந்த கட்டையிலுள்ள சிறுவிளக்கு நேரம் செல்லச் செல்ல ஒளிவீச்சு அதிகமாகி தேடிக் காப்பாற்ற வருபவர்களின் கவனத்தை ஈர்த்து உயிர் காக்க துணை செய்யும் என்று சொன்ன நடுசாலைராஜ் இப்ப என்ன பண்ணினோம் தெரியுமா? என கேட்டார். எனக்கு உங்க மிதக்கும் கட்டையில் விளக்கை எரியச்செய்து காட்டினீர்கள் என்றேன்… தண்ணீர் உள்ளே செல்லும்படிக்கு ஓட்டை அடைப்பு இல்லாமல் சீராக இருக்க வேண்டும் என்றேன். ஆமாப்பா இந்த ஓட்டையில் அடைப்பு ஏற்பட்டால் நமக்கு தேவையான நேரத்துல கையில இருந்தும் காணாத அடிச்சிரும். அப்பப்ப இதைச் சோதித்து பார்க்கச் சொல்லுகிறார்கள் பயிற்சி கொடுக்கும் அய்யாமார்கள். இதும் வரையிலும் தேவைப்படலை. ஆனாக்க நான் இது இல்லாமயே தப்பிச்சுருவேன் என்றவரைப் பார்த்து தூங்க வேணும் என்றேன். கட்டையை ஒப்படைத்து, இப்ப தான் எல்லாமே பேசிவிட்டீர்களே என்பது போல் பார்த்தேன். நடுசாலைராஜ், என் பையில் நிறைய வைரங்கள் பதித்த செயின்கள் வைத்திருக்கிறேன் தூங்காமல் உட்கார்ந்து வந்தால் தான் பத்திரமாக கொண்டு சேர்க்க முடியும் என்றார். அதுக்கென்ன, கொறிப்பதற்கு முறுக்கும் பெப்சியும் என் பையில் உள்ளது எடுத்துக்கோங்கோ என்று கூறிவிட்டேன். மனுஷன் இவ்வளவு நேரம் பேசியும் ஒலிம்பிக் போட்டிகள் பற்றி ஒன்றுமே பேசவில்லையே என்று நொந்தவனாக மேலே பார்த்து பெருமூச்சு விட்டேன். திடீரென்று நடுசாலைராஜ் ஏன்பா இந்த பிராங்கி பிரெட்ரிக்ஸ் — Frankie Fredricks இந்த முறை ஜெயிச்சுபுடுவான்? நீ என்னா நினைக்குற? என்றார். இப்ப தான் இந்த ட்ரெயினை வச்சி முக்கியமான ஒரு கதை கட்டணும். அதுக்கு உன் உதவி தேவை. அதுக்கு எனக்கு என்னா தேவை நடுசாலைராஜ்! என்றதும், நடுசாலைராஜ், வாப்பா முதல்ல அப்படியே நடைபோட்டு பான்ட்ரி வண்டி வரை போய் வருவோம். சும்மா உலாத்துவோம். நீ செய்ய வேண்டிய வேலை — ஊடால இருக்கற எல்லா பெட்டிளிலுள்ள ஆசாமிகளையும் நன்றாக கவனித்து பார்க்க வேண்டும். அப்புறம் இங்க மீண்டும் வருவோம்!

--

--