த்ம்ப்ட்ட்ம் எனும் எழுத்துப் பேழை

எதிர்நோக்குதல் — திட்டமிடுதல் சொல்லித் தரும் காட்ஜெட்டின் முகப்பு ஸ்கிரீன் — Blackberry Playbook screen

இந்த பதிவு இடாவிட்டால் மேலே உள்ள படத்தில் உள்ள பெண் என்னை விடமாட்டாள். ஆனால் இந்த பதிவு என்னைப் பற்றியது! திங்கள்கிழமைகள் அழகாக சொல்லிவைத்தாற் போன்று வருவதற்கு சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா பல்கலைக்கழகத்தில் உள்ள லாபராட்டரியில் துல்லியமாக வாரக் கணக்கு சரி பார்த்துக் கொண்டு ஒரு குழு இருக்கிறது. இந்த திங்கள்கிழமை சரிபார்த்தல் என்பது ஒரு மிகப் பெரிய புரொஜெக்டாக எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது! இந்த பேருலகில் ஞாயிற்றுகிழமையிலிருந்து திங்கள்கிழமை ஒவ்வொரு வாரமும் மாறும் போது பற்பல வேலைகளில் சுளுவாக ஈடுபடுபவர்களுக்காகவென்றே நிறைய பேர்கள் கண்ணுக்கும் காதுக்கும் புலப்படாமல் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் நிறைய புரொஜெக்ட்களில் பங்காற்றியுள்ளதுக்கும் என் பேழை நிரம்பியிருந்ததற்கும் பொருத்தங்கள் நிறைந்திருந்தது. முதலில் புரொஜெக்ட் எனும் பதம், பொறியியல் படிப்பு படிக்கும் போது தான் தட்டுப் பட்டது. மிகவும் அண்மைக்கால வேலைகளில், தொழில் ரீதியாக சம்பந்தப் பட்ட புரொஜெக்ட் ஒரு பன்னாட்டு வங்கிக்காக ஈடுபட்ட ஒரு அழகிய புரொஜெக்ட். பொறியியல் படிப்பு காலத்தில் பலகாலம் பரீட்சைகளுக்கு மிகக் குறைவாகப் படிக்கும் நிலையில் இருந்தேன். பொறியியல் படிப்புக்கு கொஞ்சம் கூட ஒப்பில்லாத கோலம். என் நேரங்கள் பெரிதும் நூலகங்களிலும் மற்றும் ஓர் இடத்திலும் கழிந்து கொண்டிருந்தன. நான்காம் ஆண்டில் முழு வருடமும் புரொஜெக்ட் புரிய வேண்டும் என்பது தான் அட்டவனை சொன்ன விதி. தனி மாணவனாக புரொஜெக்ட் பண்ண முடியாது. அது புரொஜெக்ட் கணக்கில் வராது. என்னுடைய ஆப்த நண்பன் என்னிடம் நான் புரொஜெக்ட்க்காக உன்னை சொல்லி வைக்கிறேன். எக்காரணம் கொண்டும் எந்த கவர்ச்சி வார்த்தைக்கும் நீ தாவி விடாதே. என், நம்ம புரொஜெக்ட்க்கு நீ இருப்பது மிகவும் அவசியம் என்றான். இரண்டு நாள் தாக்கு பிடித்து அழைத்த மற்ற குழு நட்பாளர்களுக்கு முகமன் கூறி நாங்கள் நால்வர் ஸ்திரமான புரொஜெக்ட் குழுவாக சேர்ந்து விட்டோம். அடுத்து எங்களிடம் என்ன புரொஜெக்ட் செய்யலாம் எனும் கேள்விக்கு சீக்கிரமாக விடை காண வேண்டிய நிர்பந்தம். பேராசிரியருக்கு ( புரொஜெக்ட் நெறியாளர் ) அதை விளக்கி அவர் கேள்விகள் கேட்டு தெளிவு பெற்று கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

சிறு விவாதங்களுக்குப் பிறகு என்ன புரொஜெக்ட் செய்யலாம் என்ற கேள்விக்கு சரியான நூல் கிடைக்கவில்லை என்பதை நால்வரும் உணர்ந்தோம். அப்போது என் மனதில் சற்று நாட்களுக்கு முன் கல்லூரி நூலகத்தில் படித்து பிடித்துப் போய் ஒளித்து வைத்த ஒரு ஆய்வுக் கட்டுரை நினைவுக்கு வந்தது. அது சரி, இப்போது கிடைக்குமா — ஒளித்து வைத்த இடம் என் ஞாபத்தில் இருக்குமா என்று யோசித்தேனோ என்னவோ, அடுத்த இடைவேளைப் பொழுதில் நால்வரும் நூலகத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு அந்த ஆய்வுக் கட்டுரையை அணில்கள் போன்று தேடி எடுத்து விட்டோம். படித்துப் பார்த்த அனைவருக்கும் பிடித்திருந்தது. தண்ணீர் குறைவாக உள்ள இடமான இஸ்ரேல் நாட்டில் டெல் அவிவ் பல்கலைக் கழகத்து மாணவர்கள் ஆராய்ச்சியினை பகிர்ந்திருந்தார்கள். அந்த சமயத்தில் முடிவு பெற்றிருக்காத ஆராய்ச்சியின் பதிவுகளில் ஒரு மின்பொறி சாதனத்தின் டிசைன் கொடுக்கப் பட்டிருந்தது. அந்த சர்கிட் ( circuit ) மூலம் நிலத்தடி நீரை வழக்கத்துக்கும் அதிகமாக முறையில் தாவரங்களுக்கு கிடைக்கச் செய்யலாம் என்று உரை தந்திருந்தார்கள். ஒரு புரொஜெக்ட்டாக செய்து பார்க்க வல்லது என்று எங்களுக்கு பட்டதை பேராசிரியருக்கு சொன்னோம். ஒப்புதல் கிடைத்து விட்டது. எங்கள் ப்ரோஜெக்ட் அதிகாரபூர்வமான குழு புரொஜெக்ட் பட்டியலில் சேர்க்கப் பட்டது. அடுத்து என்ன நடவடிக்கையின் பால் நீங்கள் இருக்கிறீர்கள், மூன்றாம் வருட விடுமுறை நாட்கள் துவங்கிவிட்டன, என்றார் பேராசிரியர். நாங்கள் சொன்னோம் — எங்களை அறிமுகப் படுத்தி ஒரு கடிதம் கொடுங்கள், நாங்கள் வேளான் பல்கலைக்கழக மண்வளத்துறை பேரசிரியர்களின் துறை சார்ந்த அறிவுநுட்பங்களைத் தெரிந்து வருகிறோம். புரொஜெக்ட் பண்ண ஏதுவாக இருக்கும் என்று சொல்லி கடிதம் பெற்றோம். வேளாண் பல்கலைக்கழகத்தில் மண்வளத் துறைக்கு என்று தனி வளாகம் இருந்தது. போனதும் மண்வளத்துறைத் தலைவர் எங்களை வரவேற்று துறை சார்ந்த மற்றுமோர் பெருந்தகையிடம் பேசி வர அனுப்பினார். சில படித்துத் தெரிந்திராத தொழில்நுட்பம் பற்றி விளக்கங்கள் கிடைத்ததோடு ஒரு உபகரணம் பற்றியும் அறிந்து கொண்டு அன்றைய புரோஜெக்ட் வேலைகள் முடிந்தன. மீண்டும் விடுமுறை நாட்களுக்குப் பிறகு வருவோம் என்று சொல்லிவிட்டு விடை பெற்றோம்.

ஒருகாலத்து பால்காரர் ஒருமுறை மொபைல் போன் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். விடுமுறை நாள் விளக்கம் பெற்றுக் கொண்டு பறந்து விட்டார்!

மூன்றாம் ஆண்டு விடுமுறையில் ஒரு முக்கியமான வேலை-புரொஜெக்ட் அல்லாதது, எங்களுக்கு இருந்தது. ஏதாவது பெரும்தொழிற்சாலையில் விடுமுறை நாட்களைக் கழித்து நிஜமான சூழலில் வேலை கற்றுக் கொண்டு ஒரு உரையை சமர்ப்பிக்க வேண்டும். எங்கள் புரொஜெக்ட் குழுவில் நானும் எங்கள் குழுத்தலைவரான் ஆப்த நண்பனும் வேறு வேறு ஊர்களுக்கு தொழிற்சாலை பயிற்சிக்காக சென்றோம். நான் பாலக்காடு, கஞ்சிக்கோட்டில் அப்போது இயங்கி வந்த தொலைபேசி மற்றும் தொலைதொடர்பு சாதனம் தயாரித்து வந்த டாடா கெல்ட்ரான் நிறுவனத்துக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது ( இதுவும் குழுவாகத்தான் — வேறு நட்பாளர்கள் ). புரொஜெக்ட் குழு தலைவர் பெங்களூருவில் ADE எனும் மத்திய அரசின் விமானங்கள் மற்றும் ராக்கெட் பற்றி ஆராய்ச்சி செய்யும் லாபராட்டரியில் பயிற்சி பெற சென்றார். ஊருக்கு திரும்பியவுடன் புரொஜெக்ட்டை மும்முரமாக செய்ய வேண்டும். புரொஜெக்ட்டிற்கான இருநூறு மதிப்பெண்ணில் சுளையாக எடுத்துவிட்டு வேலைக்கான நேர்முகத்தில் அழகாக புரொஜெக்ட் பற்றி சொல்ல வேண்டும். அருமையான வேலைவாய்ப்பினை வெல்ல வேண்டும் என்ற கருத்துக்கு நாங்கள் ஆக்கம் கொடுப்பதற்கு முன் ஒரு சேர்ந்து புது படத்துக்கு சென்று வந்தோம். திரும்புகையில் வண்டியில் அமர்ந்து நானும் புரொஜெக்ட் குழு தலைவரான ஆப்த நண்பனும் படத்தைப் பற்றி சற்று நேரம் பேசிய போது அரசு செய்தித்துறை வெளியிட்ட ஆவணப் படம் பற்றி பேசலானோம். மாநில முதல்வர் சிறுகுழந்தைகளின் உடல்நலம் மேம்பாடு அடைவதற்காக தன் அரசின் செயல்பாடு மிக்க கவனம் செலுத்தி வருவதை சொல்லி பொதுமக்களை சுகாதாரம் மற்றும் நல்ல விஷயங்கள் பால் ஏகுவதை காட்டியிருந்தது அந்த ஆவணப்படம். அப்போது தான் முதல் முதலில் மெல்லிய வடிவில் எனக்கு ஒரு விஷயம் தெரிந்தது. ஒரு வேளை நாங்கள் செய்யும் புரொஜெக்ட் நன்றாக வெற்றி பெறுமானால் அது ஒரு நல்ல சமூக நோக்குள்ள ஒரு வடிவமாக இருக்கும் என்ற நினைவு வந்து போனது. நிரம்ப தடைகள் தாண்டினால் ஒருவேளை சாத்தியப் படலாம் என்று அந்த எண்ணத்தை விட்டுவிட்டு நடை போட்டு சென்று விட்டேன். கண்டிப்பாக இந்த எண்ண ஓட்டத்தை யாரிடமும் பகிரவில்லை. எங்களுடைய புரோஜெக்ட் இலக்குப் படி இது ஒரு மகா விதிவிலக்கான கற்பனையாக இருந்தது. புரொஜெக்ட் செயல் புரிய என்னவோ வேளாண் பல்கலைக்கழகம் செல்ல வேண்டி இருந்தது. விடுமுறை தினங்கள் ஆரம்பமாக, நாங்கள் முன் சொன்னது போல் பாலக்காட்டுக்கும், பெங்களூருக்குமாக தொழிற்சாலை பயிற்சி மேற்கொள்ளப் போய்விட்டோம். அப்புறம் என்ன ஆயிற்று!

எனக்கும் எங்கள் புரோஜெக்ட் குழு தலைவரான ஆப்த நண்பனுக்கும் ( ஆளுக்கு ) 196/200 மதிப்பெண் தந்தார்கள் — புரொஜெக்ட் பாடத்தில் இறுதித் தேர்வில். புரொஜெக்ட் பாடத்தில் மிக அதிக மதிப்பெண் பெற்ற பட்டியலில் எங்கள் வேலை சிறந்த ஒரு இடத்தில் இருக்கும் என்று திண்ணமாக கொள்ளலாம். ஆனால் நாங்கள் விடுமுறை முடிந்து திரும்பியவுடன் செய்த முதல் வேலை வேளாண்மை சார்ந்த புரொஜெக்ட்டை விட்டு நகர்ந்தது தான். எங்கள் தீர்மானம், அப்போது இருந்த சூழ்நிலையில் தொலைத்தொடர்பு சார்ந்த கம்பெனிகளால் தான் அதிகமான வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்ததால், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பக் கம்பெனிகள் அதிகம் விரும்பக் கூடிய தொழில்நுட்பம் எங்களது புரொஜெக்ட்டில் இருக்க வேண்டும் என்பதே. கைபேசி துறைக்கு மிகவும் பிடித்த புரொஜெக்டாக செய்வோம் என நேர்ந்து கொண்டோம். நான் அப்போது தான் டாடா கெல்ட்ரான் நிறுவனத்திலிருந்து பயிற்சி முடித்து வந்திருந்தேன். இப்போது எங்கள் புரொஜெக்ட் குழுவுடன் மீண்டும் உதவி வேண்டி பாலக்காடு சென்றோம். அங்கிருந்த பரிச்சயமான அதிகாரி எங்கள் ஐடியாவை விரைவில் ஒப்புக் கொண்டு ஒரு புது மின்னணு சிப்பை டேட்டா ஷீட்டுடன் கொடுத்து கைகுலுக்கி அனுப்பி வைத்தார். இது வேளாண்மை புரொஜெக்ட்டை விடவும் வெகு சுலபமான புரோஜெக்ட்டாக இருந்தது. வேளாண்மை புரொஜெக்ட்டில் தெரியாத விசயங்கள் ஏராளமாக இருந்தன. எங்களுடைய குறுகிய கால அவகாசத்துக்கு இந்த புது தகவல் தொடர்பு புரொஜெக்ட் ஏற்றதாக இருந்தது. இதில் தெரியாத விசயங்கள் ஒரு கட்டுக்குள் இருந்தன. ஆனால் மதிப்பெண் பெறும் வரை பேராசிரியர் குழு எங்கள் புரொஜெக்ட்டை இவ்வளவு உயர்வாக மதிப்பீடு செய்வார்கள் என்று ஊகிக்கவில்லை. நன்றாக மதிப்பெண் வரும் என்று மட்டும் தெரிந்திருந்தது. நாங்கள் புரொஜெக்ட் செய்த நோக்கம் நன்றே நிறைவேறியது. எங்கள் படிப்பும் முடிந்து எங்களின் அடுத்த கட்ட ஆயத்தங்களில் மூழ்க எங்கள் புரொஜெக்ட் குழுவினர்கள் பிரிந்து விட்டோம். இந்த விசயத்தில் என் ஊகிப்பு என்ன-வென்றால் எங்கள் பேராசிரியர் குழுவினருக்கு நாங்கள் முதலில் தேர்வு செய்திருந்த வேளாண்மை சார்ந்த புரொஜெக்ட் மிகவும் பிடித்திருந்தது என்பதுவே.

எங்கள் புரொஜெக்ட் குழு தலைவரான ஆப்த நண்பர் அமெரிக்க பல்கலைகழகத்தின் அழைப்பை ஏற்று சென்று விட்டிருந்தார். இன்னொருவர் சென்னையில் ஃபேக்ஸ் இயந்திரங்கள் விற்பனையாளாராகி, உத்தர பிரதேசத்தில் கணினி இயந்திரங்கள் விற்று அப்படியே பெங்களூரு தகவல் தொழில் நுட்ப பெருநிறுவனத்துக்கு வந்து அமெரிக்க சுவிட்சுகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். ( அந்த பலகோடி ரூபாய் பெருமானமுள்ள சுவிட்சுகளை நினைத்தாலே நாக்கில் நீர் சுரக்கும் ). இன்னொருவர் சுயதொழில் செய்ய நங்கூரம் பாய்ச்சி விட்டிருந்தார். நான் சென்னையில் பொறியியல் மேற்படிப்பு படித்துக் கொண்டு கிண்டியில் ராஜ்பவன் அருகே பேருந்து தாண்டி உருண்ட முக்கியமான சாலைகளில் நடத்துனரை விசில் ஊதச் சொல்லி இறங்கி போகும் இடத்துக்கு நடை போட்டுக் கொண்டிருந்தேன். பாரிஸ் கார்னர் — சைதாப்பேட்டை நான் மிகவும் அதிகமாக உபயோகித்த தடமாக இருந்தது.

பல்கலைக்கழகத்துக்கு கவுன்சலிங்குக்காக கூப்பிட்டனுப்பிய முதல் நாள் காலையில் பல்கலைக்கழக அலுவலகம் முன்னர் நோட்டிசு இட்டிருந்தனர். “இன்றைய கவுன்சலிங்க் ரத்து செய்யப் பட்டது. மேற்கொண்டு தகவல் தெரியப் படுத்துகிறோம், இப்படிக்கு பல்கலைக்கழக நிர்வாகம்” சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நடையைக் கட்டினோம். காவிரிப் பிரச்சினைக்காக தலைவர் உண்ணாவிரதம் இருக்க நேரிட்டது. இதனால் சில மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்கு வர முடியவில்லை என்று தகவல் அனுப்பியதால் பல்கலைக் கழக நிர்வாகிகள் அன்றைய கவுன்சலிங்கைக் ரத்து செய்ய நேர்ந்தது. பின்னர் கோவையிலுள்ள கல்லூரியில் சேர்ந்து பணம் கட்டி விட்டோம். மீண்டும் சென்னையிலிருந்து கவுன்சலிங்க் அழைப்பு வந்தவுடன் கோவை கல்லூரியிலிருந்து விடைபெற்று சென்னை பல்கலைகழகத்தில் சேர்க்கை நடந்தேறிவிட்டது.

சென்னை பல்கலைக்கழக வளாகம் மிகப் பெரியதாகவும் இருந்தது. நடக்கவும் நிறைய வேலைகள் இருந்தனவே. அப்போது ஒரு நாள் கேண்டீன் பக்கத்திலிருந்து அப்படியே நூலகத்துக்கு செல்கையில் என் கையில் புதிதாக ஒரு பொருள் இருந்தது. அமெரிக்கா சென்ற ஆப்த நண்பர் மறக்காமல் அனுப்பி இருந்த பெரிய கடிதம் அது. அவருடைய அமெரிக்க பேராசிரியருக்கு நாங்கள் செய்த புரொஜெக்ட் மிகவும் பிடித்திருந்ததாம். தங்கள் பல்கலைக்கழகத்தில் எனைச் சேரச் சொல்லி அவர் கூறியதால் என் ஆப்த நண்பன் டொலர்கள் செலவு செய்து ஒரு விண்ணப்ப படிவமும் கடிதத்துடன் சேர்த்து அனுப்பி இருந்தார். எங்கள் புரொஜெக்ட் எங்கள் கல்வி நிலைக்கு மேலே இருந்து மெச்சும் படியாக விசயங்கள் கொண்டிருந்தது உண்மை தான் என்றாலும் ஒரு மேல்நாட்டு பேராசிரியர் பெருந்தன்மையோடு எங்களுக்கு கரம் கொடுப்பது மகிழ்ச்சியாக இருந்தது. சென்னை வந்து நாட்கள் ஆகிவிட்டிருந்தபடியால், மீண்டும் ஒரு தடத்திருத்தம் செய்வது உசிதமானதல்ல என்று எண்ணி அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. சென்னையில் இருந்தால் சீக்கிரம் லைனுக்கு வந்துவிடலாம். அது தானே அப்போது முக்கியமாக இருந்தது.

சரி! இந்த உரையின் இறுதியில் ஒரு வார்த்தையை இங்கு திணிக்கிறேன். அது — momentum எனும் உந்துவிசை என்பதே. இதற்கு சார்ந்த எதிர்பதம் — inertia எனும் __________. யாருக்கோ பிடித்தமான பதம் தான் இந்த //மோமென்டம்// இன்றியமையாத இந்த பிடித்துப் போதலின் மேல் உங்களைத் தள்ளி விட ஒரு பத்து குண்டிகளை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார் அந்த மோமென்டம் பிடித்த ஆசாமி! பாத்துக்கிடுங்க!!

--

--