பிரிகேடியர் சிச்சாரிட்டோவின் கோல் கோணத்தில்…

கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு சமர்ப்பணம் செய்து எழுதும் இந்த உரையில் மெக்ஸிகோவின் பொல்லாத ஆட்டக்காரர் சிச்சாரிட்டோ வரமாட்டார். தலைப்புக்கு தகுந்த கதை வேண்டும் தான்..ம்ம்ம்..

எனக்கு பிடித்த பாடல் / ஆனால் கேட்டு வெகுநாட்கள் ஆகிவிட்டது என்று ஒரு பாடல் இருப்பதை கண்டுபிடித்துவிட்டேன்! அந்த பாடல் “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் காதல் முகம் கண்டு கொண்டேன் விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன் வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி” என்று வரையப்பட்ட பாடலால் போர்த்தப்பட்ட இசைவெள்ளம். சென்னையில் ஒரு மெக்ஸிகோ ஆசாமி இந்த பாட்டை பாடிக் கொண்டு திரிந்து கொண்டிருந்ததை நான் கண்ணுற்றேன். மெய்யாலுந்தான்!

என் குழுவில் முக்கியமான நபர் ஒருவர் இந்தியாவின் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர். மொத்த ஆட்களும் இவர் பின்னாடியே சுத்திக் கொண்டு இருப்பார்கள். இல்லையென்றால் அவரவர் வேலைகளை முடிக்க முடியாது. இவரோ நேற்று பதினைந்தாயிரம் கோல் அடித்திருப்பார். இன்று மதியத்துக்குள் என் துல்லியமான கணக்குப் படி 23,439 கோல் அடித்திருப்பார். குழு மேற்கொள்ளும் விருந்துகளில் இவர் என்ன செய்வார் என்பதைக் கேட்டால் எல்லோருக்கும் கோபம் வரும். ஒரு பெரிய கிண்ணம் முழுக்க மெதுவடைகள் — நாற்பத்தைந்து வடைகள் அடுக்கிக் கொண்டு ஓரமாக அமர்ந்து மெதுவாக சாப்பிடுவார்! என்னப்பா சாதம், பருப்பு குழம்பு, காரக் குழம்பு, ரசம், உசிலி எனக்கு வேண்டாம். எனக்கு இது தான் சாப்பாடு என்பார். சரி பா, நீ சாப்பிட்டா சரி என்று கூறிவிடுவேன். உணவு இடைவேளைக்கு அப்புறம் 45,000 கோல் அடித்து விடுவார் — அன்று! மொறுமொறுவென்று பொன்னிறமாகத் தயார் செய்யப்பட்ட லைட்டான பிடித்தமான மெதுவடைகள் வேண்டுமட்டிலும் உண்டு களைப்பாறியபின் அவருடைய உத்வேகம் இன்னும் அதிகமாக கூடியிருப்பது அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்கிறபடிக்கு இருக்கும். யாராவது எட்ட நின்று பார்ப்பவருக்கோ கண்களை உருட்டி உருட்டிப் பார்த்து சிக்குபுக்கு ஆகிப் போகும்! ஆனால் எல்லோரையும் தம் கோல்கள் கட்டிப் போட்டுவிடும். ( சாயங்காலத்துக்குள் 2,500 கோல் அடிக்க வேண்டும் — மெதுவடைப் பிரியர் உதவுவார், அப்புறமென்ன! என்று சில மனக்கணக்குகள் அசால்டாக இருந்து விடும்)

இந்த கதை எழுதுவதற்கு அடிகோலிய காட்சி நேற்று முன்னிரவு நேரத்தில் கண்டேன். எங்கள் பள்ளிவாசல் மோதினார் அவர்கள் சைக்கிளில் ரிலாக்சாக என்னைக் கடந்து சலாம் உரைத்தவாறு சென்றார். சைக்கிளை அவர் சொகுசாக மிதித்து கொண்டு நகரும் காட்சியைப் பார்த்தவுடன் இந்த எழுத்தாக்கத்துக்கான ஐடியா தோன்றிவிட்டது. எங்கள் பள்ளிவாசல் மோதினார் அவர்கள் அசாம் மாநிலத்திலிருந்து வந்து தன் இறை/சமூகப் பணியினை ஆற்றுகிறார். துருதுருவேன்று ஓடியாடி வேலை செய்யும் இவர், மார்க்கக் கல்வியில் நல்ல உயர்ந்த படிப்பில் தேர்ந்திருக்கிறார். எல்லோரும் நம்ம மோதினார் ஒரு சூப்பர் காரி எனவும், ஆமாமா இல்லையா என்று அவர் ஆமோதிக்கச் செய்கின்றனர். இப்போது அவரால் தமிழிலும் பேச முடிகிறது. இவருக்கு முன் இந்த வேலை செய்து வந்தவர் பிகார் மாநிலத்திலிருந்து வந்தவர் என்றும் அறியப் படுகிறது. இவரைப் பார்த்தவுடன் சென்னையில் என் மகளின் அரபு அலீபே படிப்புக்காக எங்களுக்கு கிடைத்த இரண்டு மௌலானாக்கள் பற்றிய வரைவு ஒன்று செய்ய தோன்றியது. இருவரும் மெத்தப் படித்த ஆலிம்கள். ஒருவர் சைக்கிள் ஓட்டிக் கொண்டு தினமும் வேளச்சேரியிலிருந்து ஆதம்பாக்கத்திலிருந்த எங்கள் வீட்டுக்கு வந்து சொல்லிக் கொடுப்பார். தன் இரண்டு சிறு குழந்தைகள் மற்றும் மனையாளுடன் வாழ்ந்து வந்த இவர் உத்தர பிரதேச மாவட்டமான சஹரன்பூர்-ரைச் சேர்ந்தவர். மிகவும் அமைதியாக இருப்பார். பேசினால் மட்டும் கொஞ்சமாக பேசுவார். இன்னொருவர் கௌரிவாக்கத்திலிருந்து ராஜகீழ்ப்பாக்கத்திலிருந்த எங்கள் வீட்டுக்கு சைக்கிளில் வருவார். சின்ன பிள்ளைகளிடம் மிகுந்த பிரியத்துடன் சொல்லித் தருவார். இலங்கையிலிருந்து வந்திருப்பதாக கூறினார். டேபு கணினி கூட வைத்திருந்தார். கேட்பரிஸ் மிட்டாய் கொண்டுவந்து என் பிள்ளையிடம் கொடுப்பார். நல்ல வசதியான மௌலானா தான் போலும் என்று நாங்கள் பேசிக் கொள்வோம். இவர் பிள்ளைகளிடம் நடக்கும் பிரியமான முறையைப் பார்த்து பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன், மனிதர் மிகவும் அசலாகத் தான் தெரிந்தார். இப்ப மெக்ஸிகோ பாடல் ஒன்று இங்கு குளமாகத் தேங்க வைக்க முயல்கிறேன் கீழே!

நான் படிக்கும் காலகட்டத்தில் பரீட்சை என்றால் ஒரு இன்னல் மிகுந்த விசயம்! இப்ப எளிது ஆகிவிட்டதாகத் தெரிகிறது! அந்த காலத்தில் கோணப்புளியங்காய் நிறைய சாப்பிட்டிருக்கேன் என்றாலும் இப்போது எளிதான யோகாசனங்கள் தான் பண்ண முடிகிறது! இதைக் கேட்டால் பெரும் யோகாச்சாரியார்கள் கோணப்புளியங்காய் உண்பதற்கும் நன்றாக யோகா செய்வதற்கும் என்ன சம்பந்தம் இருந்துவிடப் போகிறது என்கின்றனர் — ஆயினும் நிறைய கோணப்புளியங்காய் உண்டவர்கள் சிலர் நன்றாக யோகா செய்து வருவது குறித்து பெருமிதம் அடைகின்றனர்! ஒரு ஆச்சாரியார் சொல்கிறார் எல்லாமே உருளைக்கிழங்கில் அடங்கி இருக்கிறதாம், நான் சொன்னேன் அவரிடம்: என்ன பிளேட்டை மாத்தறீங்க, உங்களை பிரதமர் பி.டெக்(தமிழ் இலக்கியம்) பாடம் நிறுவனம் செய்யச் சொன்னதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? அவர்: அதுக்கு இன்னும் ஐந்து வருடம் ஆகும், நீங்க செயிச்சு வந்தீங்கன்னா வேலை ஆரம்பிக்கலாமென்று சொல்லிட்டேன் என்கிறார். நான்:அது சரி! என் பங்குக்கு நான் இந்த வீடியோவை இப்பவே கொடுத்துட்டேன்! பிரிகேடியர் சிச்சாரிட்டோ தன் பரீட்சையில் நான்கு அடி உசரத்துக்கு குதித்துக் காட்டி தான் தேர்ச்சி பெறுகிறார்.

நிதானமாக படித்தால் தெரிகிற விசயமொன்று இங்கு தருகிறேன். ஒரு முறை எங்கள் பெரிய குழுவில் மொபைல் போன் உருவாகிக் கொண்டிருந்தது. அரக்கப் பரக்க வேலையில் முணுமுணுப்பு. எட்டிப் பார்த்தால் எல்லாம் அரக்கப் பரக்க வேலை செய்து கொண்டிருந்தார்கள். சரி சாந்தமாக இருப்போம் என்று இருந்தால், மீண்டும் அரக்கப் பரக்க வேலையில் முணுமுணுப்பு. இருக்கையிலிருந்து எழுந்து மென்பொருளை ஒருங்கு செய்யும் குழு அமர்ந்திருந்த இடத்துக்கு சென்று பார்த்தேன். எல்லோரும் சிரித்து அரக்கப் பரக்க வேலை செய்யலானார்கள். என்ன முருகா, கமலேசன் எங்கே? அவர் கல்யாணத்துக்கு மதுரை சென்றுள்ளதாகவும் நல்லதாகப் போயிற்று என்று முருகா கூறுகிறார் — ஒரு விதமாக சிரித்துக் கொண்டே! சையது நீங்க ஆர்டர் செய்த பீட்சா வந்தது. இது தான் உங்களுக்கு பிடித்த பீட்சாவா? தோசை மாதிரி இருந்தது, ஆனாக்க அதுலயும் நீங்க மீடியம் பீட்சா வேற ஆர்டர் செய்த படியால்… நான்: காத்துக்கு ஏது வேலி! அங்கே பாருங்க அமெரிக்கா காரத் தம்பி ஹோசே. ஹோசேவைப் பாருங்க, எப்படி வேலை செய்கிறார்! எட்ட அமர்ந்து எங்கள் குழுவில் ஏதோ ஒரு சார்பு குழுவுக்கு இவர் பறந்து வந்து மொபைல் போனை உருவாக்கிக் கொண்டிருந்தார். அங்கேயும் முருகா என்னை மடக்கிவிட்டார்!

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்

முருகா துணுக்குற்றவாறு இங்க எங்கயோ வாத்தியார் பாட்டு கேட்டாப்பல இருந்தது! நான் கண்டுபிடிச்சிட்டேன் நீங்க தான் பாடினீங்க, சையது, நீங்க தான் பாடினிங்க!! போன முறை ஓட்டலுக்கு உங்க காரில் முன்னே அமர்ந்து வரும் போதும் இந்த பாட்டு பாடினீங்க.. அதுல வச்சி தான் கண்டுபிடிச்சேன்! தம்பி முருகா நான் எங்கப்பா பாடினேன். நான் பாடவில்லையப்பா! அங்கே பாரு ஹோசேவை. அவர் பக்கத்திலிருந்து தான் பாட்டு சத்தம் கேக்குது! அந்த அமெரிக்க தம்பியைப் பாரு முருகா என்றேன். காசுக்கு தானப்பா முருகா ஹோசேயும் வேலை செய்யுது, ஆனாப் பாட்டோட, பாரு முருகா! ஹோசே திரும்பிப் பார்க்காமல் வேலை செய்து கொண்டிருந்தார். முருகா என்னைப் பார்த்து, சையது, ஹோசே ஒண்ணும் அமெரிக்கா காரர் இல்லை! என்றார். நான் அப்புறம் என்று புருவத்தை உயர்த்தினேன். மெக்ஸிகோகாரனா ஹோசே, எப்படி நம்ம டீம்-ல, சென்னை-ல என்றேன். அது எனக்கும் தெரில — ஒருவேளை மான்டி கார்லோ மெத்தட் ஆஃப் ஆப்டிமைஸேஷன் தெரிந்தவர் இவர் தான் நமக்கு கிடைத்துள்ளார் போலும், என்றார் முருகா. எனக்கு ஒரே கால்பந்து நினைவுகளாகத் தாக்க — மெக்ஸிகோவுக்காக, ஹியுகோ சான்சஸுக்காக நான் அழுதிருக்கிறேன் — ஹோசே ஹோசே என்று முணுமுணுத்த வாறு அங்கிருந்து நகர்ந்து விட்டேன். ஏதோ ஒரு உலகக் கோப்பையில் ஹியுகோ சான்சஸ் கோப்பையின்றி வெளிநடப்பு செய்த போது அன்றைக்கு அன்று மதியம் அறையில் எனக்கே தெரியாத படிக்கு ஜெய் ஜெயஹே பகவவதி சுரபாரதி என்று சாயங்காலம் வரை சுரம் பிடித்து சத்தமாக பாடிக் கொண்டே இருந்திருக்கிறேன். ஒண்ணுமே தெரியாதவாறு காமாசோமாவென்று வீட்டின் வெளியே வந்தால் பக்கத்து வீட்டில் எல்லாம் திவ்யமாக விளக்கேற்றி மெல்லிய லைட்டிங்க் செய்து கொய்த மலர்கள் கொண்டு நீரலங்காரம் எல்லாம் செய்திருந்தார்கள். அதுக்கப்புறம் என்னை டேக் அதிரசம் டேக் மிக்சர் என்று டைவர்ட் பண்ணி விட்டார்கள். அதுக்கு தான் மனசு விட்டு பாடணும் என்பது! இப்ப ஹோசே மட்டும் தமிழ் பாட்டு பாடாது வேலை செய்து விட்டு போயிருந்தால் என் மனது இவ்வளவு பொங்கியிருக்காதோ என்னவோ. இப்ப பிரிகேடியர் சிச்சாரிட்டோ ஃபிஃபா உலகக் கோப்பை 2018 — க்காக ஆடும் போது நான் அவ்வையாருக்கு அதியமான் ஈந்தளித்த நெல்லிக்கனியின் மிச்சம் — அதைத் திரட்டி பிரிகேடியர் சிச்சாரிட்டோவுக்கு கொடுத்தனுப்ப ஏதாவது ரோசனை செய்வேன். சங்ககால ஔவையார் நம் கற்பனையில் உள்ளவர் போல முதுமைக் கோலத்தவர் அல்லர். இளமை ததும்பும் விறலி என்கிறாள் என் பெயர் அலெக்ஸா. யாரும் நம்பத்தான் போவதில்லை! அதாவது, நான் நேற்று தான் அலெக்ஸாவிடம் பத்து ரூபாய்க்கு பருத்திப் பால் வாங்கி சாப்பிட்டேன். அவள் காகிதக் கப்பில் ஊற்றிக் கொடுத்தாள். நான் உள்ளே இருந்த சாறையே மிக்க ஆராய்ச்சி செய்து குடித்தும் குடிக்காமலும் இருந்துவிட்டு இப்போது அந்த காகிதக் கப்பை கெட்டியாக பற்றிக் கொண்டேன். திடீரென்று அலெக்ஸா ஹாரனை ஒலிக்கச் செய்ய, காகிதக் கப் என் கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது. மட்டுமல்லாமல் காகிதக் கப் பந்து மாதிரி எகிறி என் கையருகே மீண்டும் வந்தது! இப்ப அலெக்ஸா மீண்டும் ஒரு ஹாரன் சத்தம் செய்ய, காகிதக் கப்பு விருட்டென்று எகிறி என் தலைக்கு மேலே எகிறிப் பறந்தது. இப்ப அலெக்ஸா இன்னொறு ஹாரன் சத்தம் கொடுக்க காகிதக் கப் மூன்று மாடிக் கட்டடங்களுக்கும் மேலே வெட்டவெளி பக்கம் உயர்ந்து விட்டது. அடுத்த ஹாரன் சத்தம் அலெக்ஸா கொடுக்க உயரத்தில் இருந்த காகிதக் கப் காற்றில் கரைந்து காணாமல் போயிற்று. இந்த ஹாரன் எவ்வளவுக்கு கிடைக்கும் என்று அலெக்ஸாவிடம் கேட்டேன். அலெக்ஸா இரண்டு பெரிய நோட்டு வேண்டும் என்றாள். ஓங்கி அடிச்சா ஒன்ற டன் கப் பறக்குமாம்! பஞ்சாமிருதமா இருந்தாலுமா? என நான் கேட்கும் அதே நேரத்தில், இரண்டு மெசேஜ் வந்தது. ஒன்று கமலேசனது, இன்னொன்று முருகா அனுப்பியிருந்தார். முருகா தான் நாளையிலிருந்து செந்தில் என்று அறியப்படப் போவதாகவும் இப்படிக்கு முருகா என அனுப்பியிருந்தார். கமலேசனும் முருகா/செந்தில் செய்தியையே அனுப்பியிருந்தார். நான் இருவருக்கும் பொதுவான மெசேஜ் தட்டினேன். மிக்க சந்தோசம்! இந்த நேரத்தில் என் மனதில் உங்களிடம் பகிராது பூட்டி வைத்திருந்த சுவாரசியம் ஒன்று — கமலேசன் என் மனதில் லியோனார்டோ டிகேப்ரியோ-வாகவும், முருகா, டோபி மேக்வயராகவும் தான் இருந்திருக்கின்றனர் என்று ஹாரன் சத்ததினூடே அனுப்பினேன் மெசேஜினை. மெசேஜ் படித்தாகி விட்டதற்கான குறி சட்டென்று வந்துவிட்டது.

நாம் சாப்பிடாத வடைகள் சீஸ்பர்கரை நெட்டித் தள்ளி நம் உணவுத்தட்டில் வந்தமற ஆசைப் படுகின்றன. கான்யே வெஸ்ட், ஜே ஸீ, ஜஸ்டின் டிம்பர்லேக், ஜஸ்டின் பீபர் யாராகிலும் டமால் டமால் டுமீல் டுமீல்!! நான்கு வடைகள் வைட்சட்னியோடு ஓடிப் போய் விட்டன. எல்லாரும் எங்கபா எங்க என்று கீழே பார்த்தவாறு வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கிறார்கள்.

அன்று இரவு செந்தில் மற்றும் கமலேசன் சொன்னார்கள். நன்றி சையத். நீங்க அன்னிக்கு சொன்னீங்க ஷ்ரேயா கோஷல்-ல மதிங்க பா அப்படின்னு சொன்னீங்க. நாங்க அப்ப உங்க முன்னாடி இளையராஜா ஹூஹா ஹூஹா என்று பென்சு மேலே ஏறி கும்மியாட்டம் போட்டோம். இன்னிக்கு நாங்க ரெண்டு பேரும் ஷ்ரேயா கோஷல் கச்சேரிக்கு தான் போயிட்டு வாறோம். எனக்கு திடுக்கென்றது. ஏய் ஏய் வெயிட்! இந்தா செந்தில், முருகா, நான் எப்ப சொன்னேன் ஷ்ரேயா கோஷல்-ல மதிங்கன்னு. ஏய் முருகா முருகா, நான் சொல்லாத விசயத்த நீயா இட்டுக் கட்டி என்னை வம்புல மாட்டி விட பாக்குறீங்க. அவன் எங்கே கமலேசன்? கமலேசா! நீ இவன் கூட சேராதே. இவன் பேச்சே ஒரு மார்க்கமா இருக்கு. ஏய் தயவு செய்து என்னை நம்புப்பா, ஷ்ரேயா கோஷல் யாருன்னே எனக்குத் தெரியாது!! இதோ பாருங்க, என்னோட முழுகவனமும் இப்ப பிரிகேடியர் சிச்சாரிட்டோ மேல தான் இருக்கு. இப்ப நீங்க முடிந்த அளவுக்கு ஷக்கீரா, சல்மா ஹயக் இவங்களை மதியுங்க! எடுத்தவுடன் செந்தில், கமலேசன் இருவருக்கும் இந்த வேண்டுகோள் புதிதாக இருந்ததை நான் கண்டு கொண்டேன். நீங்கள் வேண்டுமானால் கண்ணதாசன், பாரதியார், வாலி — இவர்கள் முகம் அச்சிட்ட டீசர்ட்களை அணிந்து உலா வரலாமே என்று அவர்களுக்கு சொன்னேன். கமலேசன் உடனே, எங்கே அப்படி டீசர்ட் செய்து கொடுக்கிறார்கள் என்று கேட்டார். வடபழநி முருகன் கோவிலுக்குள் நுழையும் போது சரவணபவன் ஓட்டல் இருக்கும், அதன் எதிர் வரிசைக் கடைகளில், பத்தடி தள்ளி இருக்கும் மஞ்சள்நிறக் கடையில் இந்த மாதிரி டீசர்ட் செய்யக் கிடைக்கிறது என்றதும் செந்தில் முகத்தில் பிரியம் கலந்த பிரகாசம். பாஸ்-ன்னா பாஸ் தான் என்றார். அப்புறம் தமிழ், ஆங்கிலம் கலந்த எழுத்துக்கள் இருக்குமாறு டீசர்ட் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அப்படித்தானே எப்பவுமே என்றனர் இருவரும். அப்படியா, இல்லை புஷ்பேக் செய்ய மறந்து விடுவீர்களோ என்று நினைத்தேன்.

பிரிகேடியர் சிச்சாரிட்டோ என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு என்று செந்தில் கேட்டார். நான் மணி பார்த்தேன். ஆகா, இன்னும் நேரம் இருக்கிறது என்று உணர்ந்தவனாய் செந்திலையும் கமலேசனையும் பார்த்து முறுவலித்தேன். இப்ப என் மனசுல என்ன ஓடிக்கிட்டு இருக்கு என்று சொல்கிறேன். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் — அதை கருப்பு சட்டையும் கருப்பு நிஜாரும் கருப்பு கால்பந்து பூடிசும் அணிந்த சாட்டை விசில் வைத்திருக்கும் கால்பந்து ரெஃபரீயாக நான் மாற்றிவிட்டேன். இந்த ரெஃபரீ அங்கிட்டும் இங்கிட்டுமாக ஓடிக் கொண்டிருக்கிறார். ஒரே விசில் சத்தமாக கேட்கிறது. கொஞ்சம் உன்னிப்பாக கேட்டால் — நான் செந்தில், கமலேசனிடன் சொல்லலானேன். நல்ல உன்னிப்பாகக் கேட்டுப் பார்த்தால் ரெஃபரீ ஹாயாக பாட்டு பாடிக் கொண்டிருப்பது கேட்கிறது!

நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
நல்ல வாழ்வை நான் அமைத்து கொண்டேன்
அந்த வாழ்விலே உன்னையும் அணைத்து கொண்டேன்

இப்ப நான் ரெஃபரீயிடம் பகிர்ந்து கொண்டதை அறிய செந்தில், கமலேசன் இருவரும் ஆவலாக இருந்தார்கள். அது இதுதான்: இப்ப நாளிதழ் மொத்தமுமே கால்பந்து ஆட்டம் மட்டுமே இருக்கும் கால்பந்து இதழாகிப் போனது. முற்றிலும் டைனமிக் விறுவிறு ஆட்டம் நிறைந்த நாளிதழில் பழகி, இப்போது டைவ் அடிக்கும் ஆட்ட மாந்தரைப் பற்றி கேட்டபோது ரெஃபரீ ஆட்டத்துல ஆயிரம் இருக்கும் போவியா என்பது போல் பாவித்துக் கொண்டே தன் சட்டைப் பையில் நோட்புக்கில் எழுதிவைத்துள்ளதாக சைகை காண்பித்து உஸ்ஸ் என்று மூக்கின் மேல் விரல் வைத்து, இல்லையென்றால் எல்லாம் எஸ்ஸ் ஆகிவிடுவார்கள் என்று சிரித்தார். ஃபிஃபா போல உங்க பாஸ் யாரு என்று கேட்டேன். ஒரு உதறலும் இல்லாமல் வாராவாரம் இதே கிழமை சாயங்காலம் ஆறு மணிக்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து இரண்டு இட்லி கெட்டி சட்டினி சாப்பிட்டு விட்டு எட்டரை மணி வரையில் பேசிக் கொண்டிருப்போம். எட்டரை மணிக்கு காபி ஆர்டர் செய்து குடித்துவிட்டு பிரிந்து சென்று விடுவோம். காபி சாப்பிட்டு நாக்கை சப்பு கட்டிக்கொண்டே அவர் செல்வார். இன்னிக்கு நீ அவரை மீட் பண்ணு. இப்ப வந்துருவார் என்றார் ரெஃபரீ.

செந்தில், கமலேசன் இருவருடைய வாய்கள் ஓ வடிவில் இருக்க, கண்கள் நல்ல விரிந்து ( டைலேட் ஆகி) எங்கேயோ தொலைவு பிரதேசத்தை ஃபோகஸ் செய்து கொண்டிருந்தன. எனக்கு தண்ணீர் தேவை பட்டிருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்தும் விதமாக அவர்கள் கண் முன்னே மேஜிக் செய்து ஒரு தண்ணீர் பாட்டிலை வரவைத்ததும், சையத் எனக்கு சையத் எனக்கு என்றார்கள் இருவரும். நான் இரண்டு மடக்கு குடித்து விட்டு பாட்டிலை அவர்களிடம் நீட்டினேன். இரண்டு நிமிடம் கழித்து கமலேசன், நாம பிரிகேடியர் சிச்சாரிட்டோ பற்றியே நாம் பேசுவோம் சையத், ரெஃபரீ பத்தி இதுவரைக்கும் சொன்னதே போதும். பிரிகேடியர் சிச்சாரிட்டோ தானே கோல் எல்லாம் போடறார் என்றார். செந்தில், இல்ல ரெஃபரீ பத்தி நான் அதிகமா யோசிக்கலை. எனக்கென்னமோ அவர் தான் ஹீரோ மாதிரி தெரிகிறார். நான் செந்திலைப் பார்த்து, செந்தில், நம்மோட வேலை செய்த ஊர்மி மேடம் எப்படி இருக்கிறாங்க என்றதும், சையத் அவிங்க ஊர்மி இல்லை சார்மி மேடம் என்றனர் சிரிப்பு குலுங்க. போன வாரம் தான் அவங்க டாக் கென்னல் ஆரம்பிச்சிருக்காங்க! நாய் பண்ணை!! மிலிட்டரி-லருந்து அவங்களுக்கு நாய்க்குட்டிகள் சப்ளை செய்ய மூணு வருச ஆர்டர் கிடைச்சிருக்கு. நல்லா இருக்காங்க!! மேலும் தேர்தல் ஆணையத்துடைய ஆர்டரைக் கூட சார்மி மேடம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தேர்தல் ஆணையத்துக்கு 2024-ல் தான் சார்மி மேடம்-மினால் ஆர்டர் ஏற்றுக் கொள்ள முடியும். கேட்பதற்கு நன்றாக இருக்கும் செய்தி கண்டிப்பாக நல்ல செய்தி பட்டியலில் தான் ஊறப் போட வேண்டும். எல்லாவற்றிற்கும் நாம் தான் காரணம் என்பது போல செந்தில், கமலேசன் மற்றும் நான் — மூவரும் திருப்தியாக சிரித்துக் கொண்டிருந்தோம்.

நான் மீண்டும் தொடர்ந்தேன். பிரிகேடியர் சிச்சாரிட்டோ எப்படி இருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். ரெஃபரீ-யையும் நாம் பார்த்துத் தான் இருக்கிறோம். இப்ப ரெஃபரீயுடைய ஃபிஃபா போன்ற பாஸ் எப்படி இருக்கிறார் என்பதையும் நான் அன்று பார்த்தேன் என்று கூற, செந்தில், இருங்க சையத் அவர் எப்படி இருப்பார் என்று நான் சொல்கிறேன். அவர் சார்மி மேடம் உடைய புருசன் மாதிரி இருப்பார். இளவட்ட ஆசாமி, லேசான தாடி, நெட்டை. கமலேசன் தொடர்ந்தார்: எப்போதும் பகவத் கீதா ஸ்லோகன் உள்ள டீசர்ட் தான் அணிவார். எப்பயாச்சும் குரான், பைபிள், குருபானி, தம்மா வாசகங்கள் தாங்கிய அங்கி அணிந்திருப்பார். அவருக்கு என்ன பூ பிடிக்கும் என்றால்…. போதும் போதும்..அது சீக்ரெட், சொல்லக் கூடாது என்று முடித்து வைத்தேன்.

--

--