மேய்ச்சலுக்கு மாடுண்டு..புல்? ம்ம்.. ஆமாங்க உண்டு!

என் பிள்ளையுடன் சாலையில் செல்லும் போது நின்று அவளுக்கு இந்த இடத்தை சுட்டி, பார்க்கச் செய்தேன்! இங்கு உள்ளதை விடவும் இன்னும் சற்று கண் கொள்ளாததாக இருந்தது… குறிச்சி குளம் என்பர்..முன்னர் எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால் இந்த சாலையும் அதன் நெடுகிலும் ஊறும் வண்டிகளும் தெரியும்.. இப்பொழுது நிறைய வீடுகள் அடர்ந்து விட்டன.. புல் கெண்டை? பசங்க லைன் போட்டு காத்து…இந்த காட்சி அவர்கள் முன்னால்.. நானிருந்த இடத்தில் மெத்தென்ற புல்.. பசங்களுடைய பழைய TVS 50 வண்டி சாய்வாக நின்றிருந்தது… கொஞ்சம் எட்ட சிறு கோவிலில் மக்கள் வந்து போய்க் கொண்டும்..தூர தெரிந்த மலைகளைக் காட்டி சில விசயங்களைப் பகிர்ந்து கொண்டேன்!!

இந்த பதிவுக்கு மீன் முக்கியமென்று கருதவில்லை என்றாலும் பெரும் வெளிச் சித்திரத்தில் அது ஒரு அழியா பங்கு கொண்டுள்ளது..மேலே உள்ள மீன் பற்றி.. பக்கம் பற்றி நன்றாக இருக்கிறது என்று தயமிக்கிமின்றி சொல்வேன்.. நான் இதுவரையில் என் நேரத்தில் 0.2 நாள் கூட மீன் பிடித்ததில்லை.. ஆனாலும் 3 குட்டை மீன்களை வாங்கி இருப்பேன்… கேட்ட மீன்பிடி கதைகளில் மிகவும் ரசித்தது… ஒரு ஓய்வு பெற்ற வான்படை அய்யாவினுடையது.. அவர்கள் ஆற்றுக் கால்வாயில் மீன் பிடித்தார்களாம்…இரண்டு லாரிகள் வேண்டியிருந்ததாம்..சரியான கதை! இன்னொரு கதையும் உண்டு! அதை நான் சரி பார்க்கப் போவதே இல்லை, பகிரப் போவதும் இல்லை! அது அப்பிடித்தான்!ஃ!

அப்பாவோடு நட்பு சிறு வயதில் கிட்டிற்று! வெளியூரிலும் உள்ளூரிலுமாக நிறைய சுற்றியிருக்கிறோம்! இவருடைய கருத்துக்கு ஒத்து இருக்கவும் படிப்பில் முயன்றேன்! அடுத்த டூர் செல்ல அடி போட்டிருக்கிறேன்! என்னை இதுவரை தாஜ் மகாலுக்கு இருமுறை கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார்!! பள்ளி நண்பர்களோடு சுற்றிக் கொண்டு யாருக்கும் சொல்லாமல் இவரோடும் திரிந்து கொண்டிருந்த காலம் இருந்தது… பள்ளி நண்பர்களுக்கு இவரோடு சுற்றியது தெரியாது… இவருக்கு நான் பள்ளி நண்பர்களோடு வேற ஒரு டியூனிங்கில் இருப்பது பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமிருந்ததில்லை.. நல்ல விசயங்களுக்கு சுபோன்சர் செய்திருந்தார்.. எங்கள் படிப்புக்காகவோ சிறிது அதிகமாக குஷன் வைத்து திட்டம் போட்டு செலவு செய்தார்… எந்த புத்தகம் வேண்டுமானாலும் சுணங்காமல் பணம் கொடுத்து விடுவார்.. நானும் புத்தகம் வாங்கி ரசீதுடன் காட்டிவிடுவேன்… நானே சம்பாதித்த பின்னர் தான் எனக்கென்ற விசயங்களுக்கு செலவு செய்தேன்…பின்னாடி நிற்கும் காரில் படம் பார்க்க DVD பொருத்தியிருந்தது!!

ஐவர் செல்லும் சொகுசு படகே! கட்டுப்பாடே!

அதிசய மெது வேகத்தில் தாழ்ந்து சென்று

நடு எலும்புக்கு தோதாக சாய்ந்து கொடுக்கும்

அமரும் வடிவில் தூக்கம் பெற்றாலும் அருமை

அரட்டை அடித்து கொரித்து குளிர்பானம் தேனீர்

அருந்துவதும், வேடிக்கையை கண்கொட்டாமல்

பார்க்கும் சின்னவர்கள் கவனத்தில் நாமிருவர்

சளைக்காமல் முறைக்காமல் என்னதான் செய்வதோ?!

கூட்டுத் தொகையுடன் ஆபிசு சென்று வருவது

பெற்றோரை உற்றார் உறவு பய புள்ளைகளை

இட்டுச் சென்று கையேந்தியில் இஷ்டம் போல பொடி தோசை

அவ்வப்போது பிரன்ச் எனும் பிக்னிக் — சோலா பூரி வைட் சட்னி!

ஐசுகிரீமு சிந்தி கடுப்பேற்ற பிள்ளைக்கு வரவில்லை! செல்லமன்றோ!

இருந்தாலும் பின்னால் அமர ஏசி உள்ள வண்டிக்கு இலக்கு வேண்டி

வண்டி நன்றாகவே ஓடிக்கொண்டிருக்கிறது! என் கானப் பெட்டி!

ஒரு முறை அம்மா என்ன குளிருல்ல என்று சொன்ன மாயம்! நினைவிலிருந்து!!

ஓ! அப்போது! என்று யாரும் கேட்காதவாறு வளரும் வேட்கை!

தடவிக் கொடுக்கும் குடும்ப பேர்வழிகள் இருப்பவர்கள் போத!

காலைக் கனவு! எப்போதாவது நினைவு வருபவள் ஒருத்தி வந்தாள்!

வகுப்பு தோழி ரோஜா நிற பேனாவை நீட்ட, நான் பெற்று சொன்னேன்!

நீ எப்போதும் பேனாக்களை பரிசளிப்பவள்! அப்பிடியே இருக்கிறாய்!

என் மேல் காதல் என்று சொல்லிவிடுவாள் இப்போது என்று நான் பார்க்க!

என் மகனுக்கு கல்யாணம் வைத்திருக்கிறேன் எனும் போது?

ஐயும் மெய்யும் எச்சாகி நான் கனவிலேயே சுதாரித்து மீண்டும் _______ ! ஆகா!!

யாருக்கும் அவள் யாரென்று சொல்லப் போவதில்லை! ஊகும்!!

எல்லோரும் நானில்லை நானில்லை ஆள விடப்பா சாமி! ஓடிக்க!

பொங்கலும் அதுவுமா கிண்டறியே! என்ன சொல்லி ஆரம்பிச்சே! என்ன? உங்கோட டூ!

என் ஆசிரியர்களுள் ஒருவர் பெயர் முத்தன் — முனைவர் முத்தன் — Dr.முத்தன் என்றால் வியப்போ விளக்கமோ ஏதோவொன்று கிடைக்கும்…விடுதியில் மேசைப்பந்து விசயம் சும்மா கெடந்து கெடக்கு என்று இவரிடம் சொல்லப் போய் அடுத்த நாள் தன் வீட்டிலிருந்து பட்டர்ஃப்ளை மட்டையை எடுத்துக் கொண்டு என்னையும் என் நெட்டை நண்பனையும் புரட்டி எடுத்துவிட்டார்..மனுசன்! புஜங்களைப் பார்த்தால் கர்லாக்கட்டை செதுக்காமல் வைத்தது போல் இருப்பார்.. இதில் வேடிக்கை என்னவென்றால் எங்கள் வகுப்பில் இருந்த மற்ற 9 பேருக்கு இந்த மேசைப் பந்து சம்பவம் தெரியாததாக இருந்தது… அந்த நல்ல விசயத்தை என் அரசாணையின் பொருட்டு மற்ற மாணவ நண்பர்களிடமிருந்து நான் மறைத்து விட்டேன்! புது டில்லி பள்ளிக் கூடங்களில் இந்த விசயம் பெருவிமரிசையாக இருக்கிறதாம்! பெயர் சொன்னால் என்னவாம்! என்னுடைய அபிமான ஆட்டக்காரியின் பெயர் கன்சன் தவான்! இந்து பேப்பரில் கருப்பு எழுத்தாக மாத்திரம் பார்த்த இவளை — கன்சன் தவானை — ஒரு முறை மணி ஐசுகூலுக்கு ஒரு தேசிய அளவிலான போட்டி நடைபெறுகிறது என்று மானாவாரி சிந்திப்போடு சென்றால்… தூரத்தில் பளீர் பளீர் என்று குட்டிப் பந்தை அணைத்து அடித்தவாறு கன்சன் தெரிந்தாள்… நான் அப்போதே இது இங்குள்ள சுந்தரத்துவம் என்று கண்டு கொண்டுவிட்டேன்! அப்புறம் சீக்கிரம் வந்து விட்டேன்!!

நான் பார்த்ததில் மிகவும் ரசித்த பெண் புது டில்லியைச் சேர்ந்தவர்… கல்லூரி முடித்து வேலையில் அமர்ந்த என்னை எங்கள் கம்பெனி வருட ஓய்வு மற்றும் பயிற்சி என்று 15 நாட்களுக்கு கோவா ( பேரக் கேட்டாலே சும்மா…) அனுப்பியது.. சென்னையிலிருந்து நாங்கள் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்னாடகா, கேரளா என்று மொத்தமான பெருங்கூட்டமாக ரயிலில் சென்றோம். மங்களூரில் ஓய்வெடுத்து உடுபியில் தாமதித்து கோவாவில் சற்று தொலைவிலிருந்த மங்கேஷிநாத் கோவிலுக்கு சென்று வந்தோம்… கதைகள் கேட்க செவியிருந்தால் நல்ல ஊர்க் காதலன்கள் காதலிகள் இருப்பார்கள்… அவர்களிடம் சிக்கிக் கொள்ளலாம்… உங்கள் கூட்டத்தில் ஒரு நல்ல மணி பார்ப்பவர் இருந்தால் போதும்.. எப்பிடியோ உங்கள் கிறுக்கிலிருந்து காப்பாற்றி பிரட் ஆம்லெட்-லாம் உங்கள் வாயில் திணித்து ஊருக்கு வாபசு செய்து உங்கள் அம்மாவிடம், உங்கள் பேராசிரியரிடம், உங்கள் பாசு-இடம் என்று மூன்று பேரிடமும் பத்திரமாக ஒப்படைத்து விடுவார்..

அந்த நன்றாக மணி பார்க்கக் கூடிய நெருங்கிய நண்பன் நான் மிகவும் ரசித்த அந்த புது டில்லி பெண் பற்றி மேலே சொன்ன மூன்று பேர்களிடம் சொல்லவில்லை! இவன் என்னை காப்பாற்றுபவன் ஆதலால், பேசினாலும், உனக்கு தெரியாது.. இதெல்லாம் அவர்கள் ரசிப்பவர்கள் தாம்… ஆனால் நீ சொன்னால் என்னமோ போ! புரோடொகால் விசயம்! ஒண்ணும் பண்ண முடியாதபடிக்கு மாட்டை விரட்டித் தான் சிங்கபூரு போகணும்… கப்பலா.. அது நிறுத்தி நாளாச்சி… ஏர்போர்ட்டா…பாக்கலாம்…போ இந்தா 50 பைசாக்கு பாக்கும் 50 பைசாக்கு வெள்ளை வெத்தலையும்.. நில்லு! தா வாரானே அவனுக்கு ரெண்டு ரூவா குடுத்து அனுப்பு!! சரி இந்தா அஞ்சு ரூவா கொடு! ரேசன் கடையில என்ன போடறாங்கன்னு பாத்திட்டு வந்துடு! என்னவாம்?! ரெண்டு பை ஓட்ட இல்லாம எடுத்துட்டு போய் வாங்கிட்டு வந்துடு! அவன் குடுத்த காபி பாக்கெட்டே இன்னும் நாலு இருக்கு வீட்டுல…தீப்பெட்டியும் வேண்டாம்..சில்லரை வேணுண்டு சொல்லி… நில்லு…நின்னு வாங்கிட்டு வா! நீ வந்து டீ போட சரியாயிருக்கும்…ஹலோ… கொஞ்சம் வெயிட் பண்ணு! நான் சீக்கிரம் வந்துடுவேன்…அதுக்குள்ள நீ புல் பிடிங்கிரு.. ஒண்ணு விடாம… நேரத்தல செய்யலன்னா உனக்கு தான் பளு அதிகமாகிரும்… கலாக்ஷெத்ராவில் ஒரு நாள் சென்று பார்த்தபோது…அங்குள்ள புல்வெளியும் ஐஐடி, அண்ணா பல்கலைக் கழக புல்வெளிகளும் ஒன்று போல் தான் இருக்கின்றன… சென்னைக்கு நான் சும்மா செய்த தண்டோராக்களில் — மற்ற எல்லா இடங்கள் காட்டிலும்…சர்தார் படேல் ரோடு, காந்தி மண்டபம், அடையார், பெசன்ட் நகர் — இந்த பெல்ட்-இல் ஒரு டிகிரி வெப்பம் குறைந்து தான் இருக்கும்… அளந்து பார்த்தால் அரை டிகிரியை விட குறைவான டெல்டா தான் இருக்கும்.. தண்டோராக்கு ஒரு டிகிரி சற்று மிகுதியாக இருந்தாலும், நன்றாக இருக்கும்… கிண்டி வனமும், நன்மங்கலம் வனமும்.. எப்போதும் மனதை நெருடச் செய்யும் இடங்கள்… என் மனம் சொல்வது — இதனுள் நாம் செல்லவே கூடாது… இதை விட்டொழிக்கவும் கூடாது…. காட்டில் சென்று வர பெரிய காடுகளும், நல்ல பயிலுதலும் தேவை… நல்ல உதாரணங்கள்… பொருந்திய சித்தரிப்புகள்… ஒரு உயரிய நோக்கம்… பழப்பூச்சி ஆராயிச்சிக்கு சித்தப் படுத்தியவர்கள் தான் இன்று கெத்தாக இருக்கிறார்கள்… இது யாருக்கும் தெரியாத விசயமாக இருந்தது தான்.. இப்போது யூடூபு வழியாக பழப்பூச்சி ஆராய்வாளர்கள் அங்குலம் விடாமல் அலச ஆரம்பித்து விட்டார்கள்… நன்றாக நோக்க… ஒரு கேண்மை உணர்வு தான் அது…இடுக்கண் களைவதாம் விசயத்திற்கும் நமக்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால்… பன்ருட்டி பழம் தான்…பழமும் இனிக்க…கொட்டையும் ருசிக்க!ஃ! ( ஒரு நல்ல சைடு டிஷ் கொண்டா! ரெண்டு தன்தூரி ரோட்டி சொல்லு.. தன்தூரி பரோட்டா எல்லாம் வேணாம்..யல.. அதுல நெய்-ருக்கும் லா..பெரவு? )

சேதல்-பிரிதல்? சொல்லணி நன்றாக உளதே! என்று விக்சனரியை புரட்டலாம்…சற்று தாமதித்து… விக்சனரிக்கு போவதற்குள்ளாக நாம் படித்துள்ள பதங்களில் அலசி பிரித்து சேர்த்து அனுமானம் செய்த பொருளை எங்கயாவது எழுதிவைத்து, அப்புறம் சொல்களஞ்சியத்தில் தேடிப் பார்த்தால்… உங்கள் அனுமான பொருளையும் ஏற்கப் பட்ட பொருளையும் அருகருகில் வைத்து மகிழ்ந்து நோக்கலாம்… இந்த மாதிரியான நுண்மையை நீங்கள் பொதுவாக தொழில் போன்ற தகைமையுடைய செயல்களால் அறிவீர்கள் தாம்! இந்த மாதிரியான நுண்ணிய செயலாற்றல் தொழில், விளையாட்டு வித்தை, வாணிபம், இசை, கூத்து, உணவு உருவாக்கல், பயிற்றுவித்தல், மக்கள் தொடர்பு சார்ந்த பணிகள் ( ஆடை, அலங்காரம், நலமருளுதல், கேளிக்கை ) இன்னும் பல வழக்குமுறைகளுள்ளும் பொதிந்து இருக்கின்றனவே!

முன்னெச்சரிக்கை முத்தண்ணாவைத் தேடினால் இப்ப ஆளே மாறிட்டாரு! காமெடி மட்டுமின்றி என்னென்னலாமோ! ஒரு வேளை இவர் தானோ அவர் என்று கிடைத்த முகவரிகளில் ஒன்றை உங்களுக்கு கொடுத்திருக்கிறேன்.. முற்றிலும் எதிர்பாராத வரவு! நல்லதே! முன்னோர் வழி வந்த முன்னெச்சரிக்கை பாணிகள் நமக்கு அரண் போன்ற வலிவைத் தருகின்றன தாம்! நாம் முன்னெச்சரிக்கையாக செய்வது நுண்செயல்களாக இருக்கின்றன… பழியிலிருந்து தப்பி இன்னொரு நாள் பிழைக்க வேண்டி சிறிது மெனக்கெடல் வேண்டும் என்கிறோம்… இப்படி செய்யப்பட்ட சேவைகளுக்கு நம் ரசனையை உரித்தாக்குகிறோம் நாம்! ஏதாவது ஒன்றோ இரண்டோ — விசயங்களுக்கு நுண்ஆராய்தல் போன்று பொருந்தி இருப்பதும் தொழில்வழமையில் சிறப்பது போன்றே இருக்கும்!

உள்ளும் வெளியும் வெள்ளிக்குள்

பொருந்த செய்வார் தங்கமே

பொறுத்த நுதலார்க்கு செப்பே

இளநீர் குடித்தோர்க்கு மெக்னீசியமே

நல்லவர்க்கெல்லாம் சாட்சி துத்தநாகமே!

யாரும் ரூட்ட மாற்றுவதுள் இதோ!

magnesium, zinc ( துத்தநாகம் ) இவையும் வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களே! அரிய குணங்கள் கொண்டவை!!

சாலையை கடப்பது நாம் தினசரி செய்யும் ஒரு நுணுக்கமான செயல்! பெரிய சந்திப்புகளில் அழகு தென்படும்.. யாருமற்ற வேளையில் பாட்டிகளுக்கு கருணை தென்படும்! பேத்தியை தாங்கிச் செல்லும் தாத்தன்களுக்கு ஏமாப்போ இறுமாப்போ கிடைக்கும்! அதனால் தான் எல்லாம் போட்டி போடுகிறார்கள்!! அப்ப நன்னூல் ஒற்றளபெடைக்கு என்னாயிற்று?! ஓசித்துப் பார்த்தால்..ஹ்ம்ம்! ;-) தொல்காப்பியன், இளம்பூரண், பவணந்தி முனி-லாம் ப்ரொஜெக்டு மிச்சம் வெச்சிட்டு ஓடிப் போயிட்டானுக வே! என்ன பண்றது வே! யல ஒனக்கு தெரியுமா! ஒனக்கு! வந்து ஒக்காந்து கொஞ்சம் முடிச்சி கொடுவே!
பிடிச்சுக்கோங்க!

--

--