வழியில் பசிக்கும்..

எனக்கு உணவு போல வழித்துணை இல்லை.

பனங்காடு இதல்ல என்று சொல்லலாம். மற்றொரு முறை பனங்காடு போட்டோ பிடிக்க முயலவேண்டும். ஆனால் ஒரு ஐடியாவுக்கு இது பனங்காடு என்று வைத்துக் கொள்ளலாம்!

இப்போது இன்றைய தேதியில் எனக்கு சுவாரசியம் தருகின்ற ஒரு பதிவு — அதனை நான் இங்கு எம்பெட் செய்கிறேன், இதோ!

இந்த பதிவில் பேக்கரி அல்லது அடுமனை ஒரு கதையம்சமாக இடம் பெறுகிறது. அம்மாஜி என்று நாங்கள் அழைத்த எங்கள் மூத்த பெரியம்மா குடும்பத்தார் ஒரு பெரிய அடுமனை வைத்து பிரசித்தியும் செல்வமும் பெற்றிருந்தனர் என்று சொந்தக்கார வகையறாக்களில் பேசுவார்கள். என் மனைவியின் சொந்தக்காரர்களும் பேக்கரி தொழிலில் கொடி கட்டிப் பறந்தனராம். அதனால் என்னவா! இப்ப தான் மாவை உருட்டி வைத்திருக்கிறோம். கடைசியில் முடிக்கும் போது ரொட்டி போன்று கிடைக்காவிட்டால் இன்னொரு முறை முயலலாம்! அதுக்கு முன் யாருக்காவது எனக்கு பேக்கரி சமாச்சார் பிடிக்காது என்பவர்களுக்கு என்று சிறு மலர் பந்து கொடுக்கிறேன்.

பேக்கரியுடன் நாம் இணைத்துப் பார்ப்பது
ஃப்ரெஷ்
நவீனம்
டிசைன்
அழகு
நேர்த்தி (அ) ஒழுங்கு
வீட்டில் கிடைக்காத விசயம்
நல்ல வாசனை
ருசி ( இனிப்பு சுவை உள்பட )
மியாவ் மியாவ் பூனை
பள பள நீள கத்தி ( செல்லமான உபகரணம் )
பெரிய ட்ரே தட்டு மற்றும் முட்டைகள் ( ##)
கண்ணாடி ஜாடிகள் ( அடுக்கு அழகு )
காலையில் கூட்டி விடும் அம்மாள்
நேயர்களின் ஆர்வம் போற்றும் பஃப்ஸ்கள்

இப்போது நமக்கு இரண்டு பேக்கரிகள் வேண்டி இருக்கிறது. இரண்டும் எளிய மாந்தர்களைக் கொண்டு நடத்தப் படுவது என்று கூறலாம். ஒரு பேக்கரி தருமபுரியில் உள்ளது. இன்னொன்று கோபெ (KOBE) எனும் பெயர் கொண்ட பெரிய ஊரில் உள்ளது. மரினேட் செய்வது தமிழ் விக்சனரியில் ஊறவைப்பது என்று கொடுத்துள்ளார்கள். நாமும் இந்த பேக்கரி சந்தம் கொண்ட பத்திகளை கொஞ்சம் மரினேட் செய்தால் என்ன?

ரொட்டி செய் ரொட்டி ஆக்கு ரொட்டி சுடு — ஒரு பேக்கரி தருமபுரியில், ஒரு பேக்கரி கோபெ-யில் — இரண்டும் தாமே பேக்கிங்க் செய்யும் நிறுவனங்கள் — கோபெ பேக்கரி இந்த வீடியோவிலுள்ள இசுஸு பேக்கரி போன்றது எனலாம்

இப்ப எப்படி இந்த எழுத்துச் சரத்தை எப்படி மேலும் சுவாரசியமாக வளர்த்துவது என்று மனம் கோளாறு சொல்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் இது ஒரு வெள்ளையான சூடு ஐடியாகவாகத் தோன்றியது. அப்ப என்ன, அவ்வளவு சூப்பரான ஐடியா இந்த பேக்கரி விசயம் வைத்துப் புனைய முடியுமா! ஒரு விசயம் எனக்கு தோன்றியது ஒரு ஆறு வருடங்கள் முன்பே! பத்து லட்க ரூபாய் தோற்பதற்கு என்று உங்களிடம் இருந்தால் என்ன பண்ணலாம்? என்னுடைய பதில் அன்று — ஒரு பேக்கரி நடத்தலாம் என்று தோன்றவே, சடுதியில் தெருவில் இறங்கி ஒரு ஸ்டடி செய்தேன். எனக்குப் பிடித்திருந்த இத்தாலி நாட்டு காபி மிசின் ஒன்றுக்கு மட்டும் மூன்றில் ஒரு பாகம் பட்ஜெட் காட்டியது. என்னுடைய மனதில் இருந்த பேக்கரி கடைக்கு அந்த காபி மிசின் இருந்தே ஆக வேண்டி இருந்தது. நான் தினமும் காபி அருந்தும் கடையில் இந்த காபி மிசின் இருந்தது. தினமும் காபி அருந்தி வந்து கொண்டிடுருக்கும் போது அந்த மிசினை கண்ணால் வருடிக்கொண்டே இருப்பேன்.

--

--