கொரோனா கற்றுத்தந்த பாடங்கள்

Tamil Literary Association
தழலி
Published in
4 min readSep 23, 2020

“அம்மா ஏதாவது சாப்பாடு இருந்தாத் தாங்கம்மா….. பசி தாங்கேலாம இருக்கு …” அழுதவறே தன் தாயாரான மாலதியைக் கேட்டாள் நான்கு வயது நிரம்பிய அஸ்வினி. “ கொஞ்ச நேரம் பொருத்திரடா செல்லம். இன்னும் கொஞ்ச நேரத்துக்குள்ள அப்பா அரிசி சாமானோட வந்திருவார். வந்தவுடன் என்ர செல்லக்குட்டிக்கு சமைசசுத் தந்திடுவன்….” கண்களில் நீர் ததும்பக் கூறினாள் மாலதி. “என்னம்மா நீங்க…. எவ்வளவு நேரமா இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறிங்க. ஆனா இன்னுமே எங்கட அப்பா வாற மாதிரித் தெரியேல்ல… “ பசி அடி வயிற்றில் பற்றியெறிய வார்த்தை அக்கினியாக வெளிவந்தது அஸ்வினிக்கு தங்களது வாழ்க்கையின் இயலாமையை எண்ணி வருந்தியவளாய் மாலதி தன் மகன் அஸ்வினியின் கேள்விக்கு மறு பதில் எதுவும் கூறாதுகண்ணீர் சொரிந்த படி கீழே விழுவதற்கு திகதியை எண்ணியபடி காத்திருந்த வீட்டுசசுவரிலே சாய்ந்தபடியிருந்தான்.

“அம்மா அப்பா எங்க போனவர்….” தண்ணீரால் நனைத்த துணியை வயிற்றில் வைத்த படி கேட்டான் மகன் தருண். “உங்கட அப்பான்ர முதலாளி கணேசண்ணேட்டத்தான் போனவர். ஏதோ நேற்று வேலை செஞ்ச மேசன் வேலைக்கான கூலிய இண்டைக்குக் காலம் வந்து வாங்கச சொன்னவராமெண்டு போனவரடா….. இந்த மனுசன் இன்னுமே காணேல்ல…” பசி ஒருபுறம் உடலை வாட்ட பிள்ளைகளின் தவிப்பிற்கு ஈடு கட்ட முடியாதவளாய் உள்ள நிலை மறுபுறம் அவள் பதட்டத்தை மேலும் அதிகரித்தது.

“மாலதி…” தந்தையின் குரலைக் கேட்டதும் இரு பிள்ளைகளும் வெளியில் ஓடிவந்து தந்தையின் காலைப்பற்றிப் பிடித்தனர். அவர்களிருவரையும் வாரியணைத்த தந்தை சிவநேசன் கையில் வைத்திருந்த பையிலிருந்து பிஸ்கட் பைக்கற் ஒன்றை எடுத்து இருவரிடமும் கொடுத்தான். தற்காலிக உணவு கிடைத்த சந்தோசத்தில் அவர்களது முகம் சூரியனைக் கண்ட மலர்கள் போல் புதுப்பொலிவு பெற்றது. பிஸ்கட்டினை தன் இரு பிள்ளைகளும் சாப்பிடும் விதத்தினைப் பார்த்த சிவநேசனுக்கு முகத்தினுடாக கண்ணீர்த்துளிகள் வழிந்தோடியது. “ஏனப்பா இவ்வளவு நேரமா எங்க போன்னீங்க….? நான் துடிசசுப் போட்டன்….” சிவநேசனைப் பார்த்துக் கேட்ட படியே அவ்விடத்திற்கு வந்தாள். மாலதி. “ஏதோ உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவுதாம். சனம் முண்டியடிசசுக் கொண்டு சாமானுகள் வேண்டுதுகள். இண்டைக்கு இரவில இருந்து மறுஅறிவித்தல் வரை ஊரடங்குச சட்டமாம். அதுதான் கணேசணணேற்ற என்ர கூலிக்காசோட 500 ரூபாவ அதிகமா வாங்கி அரிசி சாமனுகள் வேண்டிக்கொண்டு வந்திருக்கிறன். இந்தப்பிடி மாலிதி….” கூறிய படி கையிலிருந்த பையைக் கொடுத்தான் சிவநேசன் . “என்னப்பா இந்த சாமனுக்கள் எத்தின நாளைக்குப் போதுமெண்டு வேண்டிக் கொண்டு வந்தனீங்க. உங்கட சம்பளக்காசுக்கும் சாமனுக்கள் வேண்டிக் கொண்டு வந்திருக்கலாமே…..” மாலிதி கூறி முடிப்பதற்குள் “எடியப்ப… இவ்வளவு சாமானும் 1500 ரூபா முழுக்காசுக்கும் இவ்வளவு தான் சாமான்…” சிவநேசன் கூற “என்னப்பா சொல்லுறியன்…” தலையில் கை வைத்தான் மாலிதி. “ இப்ப கடைக்காரன் தீர்மானிக்கிறது தான் விலை விரும்பினா வாங்கிக் கொண்டுபோ இல்லயெண்டா வெளிலபோ எண்டு கலைக்கிறானுகளடி. 10000 ரூபாவிற்கு 1கிலோ அரிசி வித்தாலும் அத வேண்டிச சாப்பிடுறத்துக்கு

எங்கட நாட்டில சில சனங்கள் இருக்கு அப்படிப்பார்க்கேக்க நாங்களெல்லாம் எப்படி வாழுறது. எங்களப் போல ஏழைகளெல்லாம் பிறந்திருக்கவா கூடாது…” வாழ்க்கையின் வலிகள் சிவநேசனிடமிருந்து வார்த்தைகளாக வெளிவந்தது. “அது சரியப்ப மரக்கறியொண்டும் வாங்கிக் கொண்டு வரேல்லயோ…?” என மாலதி வினவ, “அத…. ஏனப்பா கேக்குற…. கொஞ்சம் அழுகின மரக்கறிக்கூட குறைஞ்ச விலைக்குத் தரமாட்டாங்களாம். அதுதான் வாற வழியில வள்ளியாசசியினரின் வளவுக்குள்ள முருக்கமிலை கொஞ்சம் பிடுங்கிக் கொண்டு வந்தனான். இருக்க எண்டு பார் மாலதி…” சிவநேசன் கூற மாலதி பையினுள் மரக்கறி தென்பட “என்னப்பா இப்ப சொன்னியள் மரக்கறி வாங்கேல்லயெண்டு பிறகு எப்படி இதுக்குள்ள மரக்கறி வேண்டேல்லத் தான் ஆனா இவன் ராசன் மசசன் இருக்கிறானெல்லோ அவன் தான் வேண்டித் தந்தான்…..” சிவநேசன் கூறி முடிப்பதற்குள் “அவரோட நீங்க கதைக்காம விட்டே இப்ப ஒருவருஷமாகப் போகுது போல….. பிறகு எப்பிடி வேண்டித் தந்தவர்……” என வியப்போடு கேட்டாள் மாலதி . “நான் சந்தையில் மரக்கறி விலையைக் கேட்டிட்டு வாங்காம வாறத அவன் கண்டிக்கிறான். பிறகு அவன் தனக்கு மரக்கறி வாங்கேக்க எனக்கும் சேர்த்து வாங்கியிருக்கிறான். நான் சைக்கிள்ள வரேக்க எனக்கு முன்னுக்கு அவன் தன்ர மோட்டசைக்கிள நிப்பாட்டிப் போட்டு தந்தவன். நான் வேண்டாமெண்டுதான் சொன்னான். ஆனா…அவன் தன்னில இருக்கிற கோவத்துல இந்த மரக்கறிய வேண்டாமெண்டு சொல்லாதீங்களேண்டும், காசு உதவி வேணுமெண்டா கேளுங்க. பிள்ளயள் பட்டினி போட்டிராதிங்க, வேணுமெண்டா கொரோன பிரசசனை முடிய நீங்க வழம போல வேலைக்குப் போகேக்க நான் தாற காச திரும்ப தங்க எண்டும் சொன்னவான்டி…” கண்கள் பனிக்கக் கூறி முடித்தான் சிவநேசன். “சில ….. சில…. நல்ல மனிதர்களையும் இனம் காட்டித்தான் இருக்கு இந்தக் கொரோன வைரஸ்….” என்று மாலதி கூற “சரியாத்தான் சொல்லியிருக்கிற மாலதி ஊரிலயே கஞ்சத்தனத்துக்குப் பெயர் போன கண்மணியக்காவ நான் வாற வழியில் கண்டனான். அவா சொன்னவா தங்கட பசு மாட்டில் பால் கறந்து வைக்கிறாவாம். பின்னேரம் வந்து எடுத்துக் கொண்டு போய் பிள்ளைகளுக்குக் காய்சசிக்குடுக்கட்டாம். காசொண்டும் வேண்டாமாம். திண்ட கையால காகம் கலைக்காத மனிசி இப்ப இப்படி சொல்லுது பாத்தியா மாலதி. இந்த பெருமையெல்லாம் அந்த கொரோன வைரசையே சாரும். அட இன்னுமொரு பகிடிய சொல்ல மறந்திட்டான். சனம் சாமானுக்கு அடிபட்டு வாங்க, இன்னொரு பக்கம் பெற்றோலுக்கு மெல்லேப்பா சனம் அடிபட்டு வாங்குது….” சிவநேசன் சிரித்தபடி கூற, “ஊரடங்கு எல்லேப்பா… பிறகு எப்பிடி இவேயன் வெளில போவீனம்…. வீட்டு முற்றத்தில் தான் இவே அடிசச பெற்றோலுக்கு வாகனம் ஓடிப்பாக்கோணும்….” மாலதியின் பதிலை கேட்ட சிவநேசன் “எட்டாம் வகுப்பு மட்டும் படிசச உனக்கு இது விளங்குது.. ஆனா பெரியபட்டப்படிப்புகள் எல்லாம் படிசச எங்கட சில சனங்களுக்கு விளங்கேல்லப் பாத்தியோ…. இதுதான் சொல்லுறது புத்தகப்படிப்போடு மட்டும் இருக்கமா கொஞ்சமாவது வாழ்க்கை பற்றிய அனுபவப்படிப்பும் தேவையெண்டு…..” சிவநேசன் கூறி முடிப்பதற்குள் “இப்ப நீங்க அவங்களக் கேவலப்படுத்துறீங்களா….. இல்லயெண்டா என்னப் பெருமைப்படுத்துறீங்களா…..?” சிறு கோபத்துடன் கேட்டாள். மாலதி “உன்னப் பெருமைப்படுத்தவும் இல்ல, அவங்கள கேவலப்படுத்தவும் இல்ல… எங்கட நாட்டு நடப்பத்தான் சொல்லுறன். ரெண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில சின்னா ஒரு முறுகல் நிலை ஏற்படவே தான் கானா பெற்றோல் அடிசசு வைசச ஆக்களடி எங்கட சனங்கள் அப்பிடி இதுகளெல்லாம் என்னும் நிறையத் திருந்தக் கிடக்கு…” கூறி முடித்தான் சிவநேசன். “இனி உங்களுக்கும் மேசன் வேலை இல்ல அரிசி சாமானும் கொஞ்சம் தான் கிடக்க இதுகளெல்லாம் முடிய என்ன செய்யிற தெண்டே தெரியேல்ல…” குழப்பத்துடன் கூறினாள் மாலதி. “பட்டினி என்றொரு நிலைமை வந்தால் எங்களுக்கும் கொரோனா அறிகுறி இருக்கெண்டு ஆராவது ஒருத்தருக்கு சொன்னால் போதும் பதினான்கு நாள் தனிமைப்படுத்தல் எண்டு சொல்லி அழைசசுக் கொண்டு போய் மூன்று வேலையும் நல்ல சாப்பாடு தருவாங்கள்….” சிவநேசன் கூறி முடிப்பதற்குள்” என்ன பகிடிய விடுறியாள்…..” என்று மாலதி கேட்க, “நான் சும்மா சொன்னப்பா….. நீ போய் வேலயப் பாரு …. புள்ளி போட்டவனுக்குத் தெரியாதா கோலம் போட கடவுள் எண்ட ஒருத்தன் இருக்கிற வரைக்கும் இந்த உலகத்தில அநாதையென்டும், ஏழையென்டும் ஆருமே கிடையாது…. எல்லாம் அவன் பார்ப்பான்….” சிவநேசன் கூறி முடிக்கவும், மாலதி அவ்விடத்தை விட்டு நகரவும் சரியாக இருந்தது

இச்சிறுகதை மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய பிரம்மம் போட்டித்தொடரில் ஒன்றான எழுத்தோவியம் — 2020 சிறுகதை போட்டியில் பங்கு பெற்றி இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

--

--

Tamil Literary Association
தழலி

This medium account is to ensure the online presence of Tamil Literary Association,University of Moratuwa, Srilanka.