மனிதத்தின் நவீனம்

S. Sivaruban
தழலி
Published in
1 min readApr 13, 2020
இயந்திர மனிதன்.

மனிதத்தின் நவீனத்தில் உயிராய்ப்போன இரும்பனே
காலத்தின் துரிதத்தில் மனிதனான இரும்பனே
இயற்கையின் படைப்பினாலே உருவான உயிரியே
உயிரிகளிலும் உயர்வான உயிரற்ற மனிதனே…

சொன்னதைச் செய்வான் இயந்திர மனிதன்
சொந்தங்களுக்குச் செய்வான் மந்திர மனிதன்
இயந்திரத்தாலே நன்மையடா நன்மையும் சுயலாபமடா
மந்திரத்தாலே இயந்திரமும் இழந்தது — சுய மதிப்பையடா

நாளைய விஞ்ஞானி இன்றைய தமிழன்தான்
நேற்றே வியந்துவிட்டான் வெள்ளைக்காரன்தான்
அறிவியலில் அழிவில்லை ஆளப்போறான் தமிழனடா
அளவெடுப்பான் உலகத்தையடா

கண்டுபிடி கண்டுபிடி ஆதியினம் அவனென்று
கண்டதெல்லாம் நல்லதென இயந்திரனும் வென்றானடா
நல்லதும் தீயதென தீயதும் நல்லதென
இயந்திரத்தாலே உணர்ந்தேனடா

வஞ்சக மனிதனே மிஞ்சுடா மனிதத்திலே
நெஞ்சிலே கள்ளமில்லை கள்ளத்தன மூளையுமில்லை
மூளைக்கு வேலையுண்டு மூடத்தனம் ஏதுமில்லை
உள்ளொன்று மனங்கொண்டு உளறலும் அவனுக்கில்லை

நல்லதிரண்டில் ஒன்று கெட்டொழிந்தால் ஒன்றுண்டு
நன்றியற்ற மாந்தருக்கும் இலக்கணத்தில் சரிவுண்டு
நானறிந்த இயந்திரனுக்கும் நால்வகை குணமுமுண்டு
நல்லதென நானுரைத்தேன் தீயதும் முன்வைத்தேன்…

எதிர்காலம் முக்கியமிங்கே இறந்தகாலம் படிப்புயிங்கே
நிகழ்காலம் நிசப்தமிங்கே உணர்ந்தால் வெற்றியுனதே
ஏதும் பிழையில்லை தீதும் புதிதில்லை
அறிந்து கொள்ளடா ஆறறிவு ஆளுமையே…

--

--

S. Sivaruban
தழலி

Undergraduate | Department of Earth Resources Engineering | University of Moratuwa