பொறியியல் வரைபடம் (Engineering Drawing) — பாகம் 2

பாகத்தை வெட்டி உள் விவரம் காட்டுதல் (Sectioning)

ஒரு பொருளின் உள் விவரங்களை வெளிப்புறத்திலிருந்து (படம் 8) காட்டமுடியாது. சில நேரங்களில் புள்ளிக் கோட்டினால் (dotted lines) காட்டலாம். அப்படியும் சரியாகக் காட்ட இயலாவிட்டால் வேறு ஒரு வழி தேவை.

படம் 8 — அனைத்து விவரங்களையும் காட்டாத சம அளவு வரைபடம்

உள் விவரங்கள் தெரியுமாறு அந்தப் பொருளைக் குறுக்கே வெட்டினால் எப்படித் தெரியுமோ அதைப் படமாக வரையலாம். அதுதான் வெட்டுமுக வரைபடம். பொறி அடிப்பகுதி (engine block) போன்ற பாகங்களில் அதிநுணுக்கமான உள் விவரங்கள் பல காட்ட வேண்டும். சம அளவு அல்லது வரித்தோற்ற வரைபடத்தில் புள்ளிக்கோடிட்டுக் காட்டினால் புரிந்து கொள்வது மிகவும் கடினம். இம்மாதிரி வேலைக்கு இந்த வெட்டுமுகம் இன்றியமையாதது.

ஒரு பொருளைக் குறுக்கே வெட்டுவது போன்று கற்பனை செய்து பாருங்கள் (படம் 9).

படம் 9 — ஒரு பொருளைக் குறுக்கே வெட்டுவதை உருவகப்படுத்தல்
படம் 10 — படம் 8 ல் உள்ள பொருளைக் குறுக்கே வெட்டுதல்

முன் பகுதியை வெட்டி எடுத்துவிட்டால் (படம் 10) மீதம் உள்ளதுதான் முழு வெட்டுமுகத் தோற்றம் (படம் 11).

படம் 11 — சம அளவு மற்றும் வரித்தோற்றத்தில் வெட்டுமுகம்

குறுக்கு வெட்டை நேராகப் பார்த்தால் படம் 11 போலத் தோற்றமளிக்கும்.

தொகுப்பு வரைபடங்கள் (Assembly Drawings)

ஒரு தலையணைத் தாங்கி (pillow or plummer block bearing) தொகுதியின் சம அளவுத் தோற்றம் படம் 13 ல் காட்டப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருந்து நீங்கள் உண்மையில் பார்க்கும் பொருளை நெருக்கமாக ஒத்துள்ளது.

படம் 13 தலையணைத் தாங்கியின் உத்தேசப் படம்

மேலும் சம அளவுத் தோற்றத்தில் தலையணைத் தாங்கியைக் கழட்டியும் காட்ட முடியும் (படம் 14). இதில் தாங்கி அமைப்பின் உள் பாகங்களைப் பார்க்க முடியும். சம அளவுத் தோற்றங்கள் ஒட்டுமொத்தத் தொகுதியைத் தெளிவாகக் காட்ட முடியும். ஆனால் விவரங்கள் மற்றும் அளவுகளை முழுவதும் காட்டுவது கடினம்.

Figure 14 — தலையணைத் தாங்கியைக் கழட்டிக் காட்டும் படம்

வெட்டு முகத் தோற்றங்கள் (Cross-Sectional Views)

குறுக்குவெட்டுத் தோற்றம் பாகத்தின் வெட்டுப்பகுதியை சித்தரிக்கிறது. இது சாதனத்தில் மறைந்திருக்கும் கூறுகளைக் காட்ட மற்றொரு வழி.

தலையணைத் தாங்கி தொகுதி மையத்தின் ஊடாக செங்குத்தாக வெட்டும் ஒரு தளத்தைக் கற்பனை செய்து பாருங்கள். படம் 15 ல் காட்டப்பட்டுள்ளபடி, இந்த தளத்தின் முன் உள்ள வெட்டு பாகத்தை அகற்றிவிடுவது போலக் கற்பனை செய்து பாருங்கள்.

படம் 16 — தலையணைத் தாங்கியும் வெட்டுத் தளமும்

குறுக்கு வெட்டுத் தளம் பார்க்கும் கோணத்துக்குச் செங்குத்தாக இருப்பதால் நீளத்துக்கும் விட்டத்துக்கும் உள்ள விகிதத்தைத் தெளிவாகக் காட்டும். மீதமிருக்கும் பின்பக்கம் இப்படித்தான் தோற்றமளிக்கும். வெட்டு முகத்தைக் குறுக்குக் கோடிட்டுக் காட்டுகிறோம்.

படம் 16 — தலையணைத் தாங்கியின் வெட்டிய பகுதியை நீக்கியபின்

சம அளவு வரைபடங்களை விட இம்மாதிரி வரைபடங்களை வரைவது எளிது. அனுபவம் மிக்க பொறியாளர்கள் இம்மாதிரி வரித்தோற்றங்களை வைத்து பாகங்களையும் தொகுப்புகளையும் புரிந்து கொள்வார்கள். மற்றவர்களுக்குக் கொஞ்சம் பயிற்சி தேவை.

படம் 17 — “A-A” வெட்டுத் தளம்

படம் 18 இல் மேற்புற வெளித்தோற்றம் காட்டுகிறோம். இது வரித்தோற்றம். அம்புக்குறிகள் “A-A” வெட்டுத் தளத்தை நாம் பார்க்கும் திசையைக் காட்டுகின்றன.

படம் 18 — தாங்கியின் மேற்புற வெளித்தோற்றம்

அரை வெட்டு முகம் (Half-Sections)

படம் 19 மற்றும் 20 இல் காட்டியிருப்பது போல ஒரு பாகத்தின் தோற்றத்தில் பாதியை மட்டும் வெட்டிக் காட்டுவது அரை வெட்டு முகம்.

படம் 19 முழு மற்றும் அரை வெட்டு முக சம அளவு வரைபடம்
படம் 20 முன் தோற்றமும் அரை வெட்டு முகமும்.

குறுக்குக் கோடுகள் (cross-hatching) கருத்தியல்படி வெட்டுப்பட்ட முகங்களைக் காட்டுகின்றன. இக்கோடுகளை 45 பாகையில் மெல்லியதாக வரைவது வழக்கம். கோடுகளின் இடைவெளி சமமாக இருக்க வேண்டும்.

படம் 21 மறைந்த கோடுகள் இல்லாத அரை வெட்டு முகம்

குறுக்குக் கோடிட்ட வெட்டு முகத்தில் புள்ளிக் கோடுகள் போடுவது வழக்கமில்லை. அளவுக்கோடுகள் மட்டும் தேவைப்பட்டால் போடலாம்.

மேலும் தேவையற்ற கோடுகளைப் போட்டு வரைபடத்தில் நெரிசல் உண்டாக்க வேண்டாம்.

துளைகள், விலாக்கள் (ribs) உள்ள பாகங்களின் வெட்டு முகம் காட்டுதல்

வலது பக்கத்திலுள்ள வெட்டு முகம் முறைப்படி சரியானதுதான். எனினும் இடது பக்கத்திலுள்ள வெட்டு முகம் போல காட்டுவதுதான் இம்மாதிரி பாகங்களுக்கு வழக்கம்.

படம் 22 வெட்டு முகம்

இது படைப்பாக்கப் பொதுமங்கள் (Creative Commons Attribution-NonCommercial-ShareAlike CC BY-NC-SA) அனுமதிபடி பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

These MIT OpenCourseWare course materials have been translated into Tamil by R. Asokan. Neither the MIT Faculty Authors, MIT, nor MIT OpenCourseWare warrant the accuracy or completeness of the translations. Any inaccuracies or other defects contained in this material, due to inaccuracies in language translation, are the sole responsibility of R. Asokan and not MIT OpenCourseWare.

இயந்திரவியல் கட்டுரைகள்:

இரா. அசோகன்

Written by

எளிய தமிழில் CNC https://freetamilebooks.com/ebooks/cnc/ எளிய தமிழில் Robotics http://www.kaniyam.com/category/robotics/

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade