இதற்காகவா ஆசைப்பட்டாய் சரவணா 😀

நான் இன்ஜினியரிங் டிகிரி வாங்கி சரியாக 20வருடம் பூர்த்தியாகிவிட்டது. ஆனால் அப்ப அந்த டிகிரி கையில் வாங்கும் வரை மனதில் ஒரே படபடப்பு. ஏனெனில் 8வது செமஸ்டர் எழுதும் முன் இந்தச்சம்பவம் நடந்தது. மேலும் நான் கல்லூரி படிக்கும்போது ஜெயலலிதா ஆட்சி. எங்கள் கல்லூரி was affiliated to University of Madras. இப்பொழுது எல்லாவற்றையும் ‘அம்மா’ என்று பெயர்மாற்றம் செய்வதுபோல் அப்பொழுது JJ என்று பெயர்மாற்றம் செய்து கொண்டிருந்தார்கள். அச்சமயம் கல்லூரி வட்டாரத்தில் ஒரு செய்தி மெட்ராஸ் யுனிவர்சிடியையும் அதுபோல பெயர்மாற்றம் செய்யப்போகிறார்கள் என்று, அப்படி டிகிரியில பெயர் இருந்தால் நன்றாக இருக்காதே, University of Madrasன்னா ஒரு கெத்து இருக்குமே.. அப்படின்னு டிகிரி கையில் வாங்கிறவரை டென்சன். ஒருவழியாக University of Madrasன்னு பெயர் போட்டே டிகிரி வாங்கியாச்சு. ஆனால் அப்படி வாங்கிய அந்த டிகிரியை இதுவரைக்கும் எங்கேயும் எந்த இண்டர்வியூவிலும் கேட்டதேயில்லை. இதற்காகவா ஆசைப்பட்டாய் சரவணா 😀

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.