விகடன்ல பஞ்சு அருணாசலத்தோட திரைத்தொண்டர் படிக்க ஆரம்பிச்சதிலேர்ந்து பழைய படங்கள் / பாடல்களின் மேல் உள்ள ஈர்ப்பு அதிகமானது. அந்த ஈர்ப்பில் சில பழைய பாடல்களை நேற்று பார்க்கக்கேட்டேன்.

மீண்டும் கோகிலா படத்தில் வரும் ஒரு பாடல். பெண் & மாப்பிள்ளை பார்க்கும் சம்பிரதாயத்தை ஜாலியா ஜோவியலா சொல்றதுக்கு இந்தப்பாட்ட அடிச்சிக்க முடியாது. இந்தப்பாடலில் ஒரு வரி வரும்

🎶

வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போல் இருந்தேன்

🎶

பாடல் வரிக்கு ஏற்றதுபோல கமல் தன் மடியில் தூக்கி வைக்கும் குழந்தை உச்சா போய்விடும்.. 😂😀. காட்சி அமைப்பு சிறப்பாக — சிரிப்பாக இருக்கும்.

ஶ்ரீதேவி அப்படியே புதுப்பெண்ணா மாறியிருப்பாங்க, அதேமாதிரி பாடகி சுசீலாவும் ஒரு பெண் முதன்முதலாக நாலு பேர் முன் எப்படி பயந்து பாடுவாளோ அதே ஏற்ற இறக்கக் குரல் நடுக்கத்துடன் பாடியிருப்பார்கள்👌😀

மாப்பிள்ளை கமலும் பாட்டின் நடுவே வரிகள் மறந்துபோன பெண் ஶ்ரீதேவிக்கு வரிகளை எடுத்துக்கொடுத்து ஹெல்ப் பண்ணி பொண்ணு பிடிச்சிருக்குங்கிறத குறிப்பால உணர்த்தி தனக்கும் இசையில் ஞானம் உண்டு என்று புரியவைத்து பெண் ஶ்ரீதேவி மனசுல இடம்பிடிச்சிடுவார் ☺️😀

இந்தமாதிரி பாடல்களைக் கேட்கும்போது அந்த 80sக்கே திரும்பப்போயிடக்கூடாதான்னு தோனுது ☺️😊

இந்தக்காட்சி மற்றும் பாடலுக்கு. டைரக்டரும் கவிஞர் கண்ணதாசனும் எவ்வளவு மெனக்கெட்டிருப்பார்கள்.

இந்தப்படம் திருச்சி கலையரங்கத்தில பார்த்ததாக ஞாபகம் 😀

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.