ஏதோ எழுதனும்னு தோணிச்சு -டேய்

O/L எக்ஸாம் வரைக்கும் கட்டாயப்படுத்தி எழுதவச்ச கட்டுரைகளுக்கு பிறகு இன்னைக்குத்தான் ஏதாச்சும் எழுதலாம்னு தோணிச்சு.அதற்கான வரலாற்று காரணம் — “வெட்டியா” இருக்கேன் அவ்வளவுதான்.

ஊர்ல மூணு நாளா விட்டுவிட்டு மழை.சூரியன் மறைய அரைமணி இருந்ததாலயும் மெல்லிய குளிர் ரெண்டு மாசமா போராடி நிறுத்தி வச்சிருந்த தம்ம அடின்னு உசுப்பேத்தினதாலயும் மெயின் ரோடுல இருக்க குட்டிக்கடைக்கு நடந்துகிட்டு இருந்தேன்.திடீர்னு எதிர்திசைல ஒரு பைக்குக்கு பின்னுக்கு இருந்து “டேய்” னு ஒரு சத்தம் -பள்ளி நண்பன்

ஸ்கூல் முடிச்சு எட்டு வருஷம்.அவன் கூப்பிட்டதுக்கு நான் டேய் சொல்லி அவன் சிரிச்சு நான் சிரிச்சு முடிக்குறத்துக்குள்ள பைக் போயிடிச்சு.எப்பிடியும் நாளைக்கு சந்திக்கத்தான் போறோம்.ஆனாலும் நாங்க சந்திக்கும்போது…… இல்ல பாக்கும்போது இருந்த அந்த உற்சாகம், மகிழ்ச்சி — தட் எதையும் எதிர்பாக்காத நட்பு

Campusல , வேலைசெஞ்சப்போ இடையிடையே நண்பன்னு வந்துட்டு போன நபர்கள் எவ்வளவு பொய்யா நடிச்சாங்கன்னு நிறைய யோசிக்க வச்சுது அந்த அஞ்சு செகண்ட் டேய் டேய்.

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.