இந்திய அஞ்சல் துறையின் பேமெண்ட்ஸ் வங்கி அறிமுகம் — உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய 10 விஷயங்கள்
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சனிக்கிழமை டெல்லி தால்கடோரா மைதானத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (India Post Payments Bank, IPPB) சேவையினைத் துவக்கி வைத்துள்ளார். இந்தத் திட்டமானது தபால் துறையினை நிதிச் சேவைகளின் துறையில் மேலும் மெருகேற்றும். இந்தியாவின் மிகப் பெரிய வங்கிச் சேவையினை இது அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிச் சேவையானது கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களில் இருந்தும், வங்கிச் சேவைகளை வீட்டின் கதவு வரை வந்து அளிக்க உள்ளது. இதற்காகத் தபால் டெலிவரி ஊழியர்களையும் பயன்படுத்த உள்ளனர்.
இந்தியா போஸ்ட் வங்கி சேவையானது ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, ஜியோ பேமெண்ட்ஸ் வங்கிகளுக்கு மிகப் பெரிய போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தபால் மற்றும் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் இந்த பொதுத்துறை நிறுவனம், இந்திய அரசின் 100 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியால் நிர்வகிக்கப்படுகிறது. ஐபிபிபி 2018 ஆம் ஆண்டின் இறுதியில் பேமென்ட்ஸ் சேவைகளை நாட்டின் 1.55 லட்சம் தபால் அலுவலகக் கிளைகளுடன் இணைத்து, கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு வங்கி மற்றும் நிதி சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கே ஐபிபிபி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள 10 முக்கியமான விஷயங்கள்:
1. ஐபிபிபி, Airtel Money மற்றும் Paytm ஆகியவற்றின் பின்னர், வங்கி மூலம் பணம் செலுத்தும் அனுமதி பெற்ற மூன்றாவது நிறுவனம் ஆகும்.
2. தனிநபர்களிடமிருந்தும் சிறிய வியாபாரிகளிடமிருந்தும், ஒரு சேமிப்புக் கணக்குக்கு ரூபாய் 1 லட்சம் வரை வைப்புத் தொகையை இந்த வங்கிகள் ஏற்கும்..
3. ஐபிபிபி நாடு முழுவதும் 650 கிளைகளுடன் மட்டுமன்றி துணை தபால் நிலையங்களில் 3,250 அணுகல் மையங்களுடன் இயங்கும். அது போக கிராமப்புறங்களில் 11,000 கிராம சேவை மையங்கள் மூலமும், மற்றும் நகர்ப்புறங்களில் அஞ்சல் துறை ஊழியர்கள் மூலமும் சேவை வழங்கப்படும்..
இங்கே நீங்கள் படித்தது கட்டுரையின் சிறு பகுதி மட்டுமே. படங்களுடன் மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ள முழு கட்டுரையை இங்கே படிக்கலாம்.
இது போன்ற பயனுள்ள பல கட்டுரைகளையும், தகவல்களையும் தெரிந்துகொள்ள எழுத்தாணியின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்
Originally published at ezhuthaani.com on September 5, 2018.
