கண்ணாடியற்ற கேமரா மாடல்களை வெளியிட்டது நிக்கான் நிறுவனம்

NeoTamil TV
Sep 3, 2018 · 1 min read

கேமரா சந்தையில் தனது போட்டியாளரான சோனி (Sony) நிறுவனத்திற்கு சவால் விடும் வகையில் புதிய கண்ணாடியற்ற கேமராக்களை நிக்கான் (Nikon) நிறுவனம் களமிறக்கியுள்ளது.

பல தொழிற்துறை நிபுணர்கள், ஒரு ஜப்பானிய நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு இந்த நகர்வு முக்கியம் என்று கருதுகின்றனர். ஒரே நேரத்தில் ஒரு கேமரா, லென்ஸ் டிஜிட்டல் கேமராக்களுக்கான மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான தேவையைக் குறைக்கின்றது.

கண்ணாடி அடிப்படையிலான டி.எஸ்.எல்.ஆர் (Digital Single Lens Reflex) கேமராக்களின் விற்பனை சமீபமாக பலவீனமடைந்துள்ளது.

“கண்ணாடியற்ற கேமராக்களின் வர்த்தகத்தில் போட்டியானது, அதிக நுகர்வோர் விழிப்புணர்வு காரணமாக அதிகரித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் நுட்பப் பயனர்களுக்குப் பயனளிக்கும்.” என ஆய்வாளர் அருண் கில் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் காட்சிகள்

வ்யூஃபைண்டருக்குள் (View Finder) ஒளிரச் செய்யும் பொருட்டு உயர்தரக் கேமராக்கள் பாரம்பரியமாக ஒரு கண்ணாடியைக் கொண்டுள்ளன. ஒரு புகைப்படத்தை எடுக்கும் போது, ​​பயனாளர் லென்ஸ் மூலம் பார்க்க இது அனுமதிக்கிறது.

மாறாக, கண்ணாடியற்ற கேமராக்கள் டிஜிட்டல் வ்யூஃபைண்டரை பயன்படுத்துகின்றன. இது கேமரா உட்புறத்தில் அதிக இட வசதியை அளிக்கிறது. இது மிகவும் கச்சிதமாக சென்சார்- நிலையான தொழில்நுட்பத்திற்கும், பிற மின்னணுச் சாதனங்களுக்கும் மேலதிக இடத்தை வழங்க அனுமதிக்கிறது.

இங்கே நீங்கள் படித்தது கட்டுரையின் சிறு பகுதி மட்டுமே. படங்களுடன் மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ள முழு கட்டுரையை இங்கே படிக்கலாம்.

https://ezhuthaani.com/technology/nikon-introduced-mirrorless-camera-models/

இது போன்ற பயனுள்ள பல கட்டுரைகளையும், தகவல்களையும் தெரிந்துகொள்ள எழுத்தாணியின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்


Originally published at ezhuthaani.com on September 5, 2018.

Written by

தமிழின் முழு முதல் தகவல் தளம்

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade