சூரியனை நோக்கிச் செல்கிறது நாசாவின் பார்கர் சூரிய விண்கலம்..!! அடுத்தது என்ன?
நாசாவின் பார்கர் சூரிய விண்கலம் (Parkar Solar Probe) பல ஆண்டுகளுக்குப் பிறகு கட்டுமானப் பணிகளை முடித்து சூரியனை அடைய இருக்கிறது . இது மற்ற விண்கலங்களை விட ஏழு மடங்கு சூரியனுக்கு அருகில் வேகமாகப் பறக்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தரவுகளை நாசா விஞ்ஞானிகள் சேகரித்து வருகின்றனர். இதன் தரவுகள் ஏழு ஆண்டுகளுக்கு வரும் எனவும் கூறுகின்றனர்.

$1.5 பில்லியன் மதிப்பிலான இந்த பார்கர் விண்கலம் (Parker Solar Probe) பூமியின் சுற்றுப் பாதையில் இருந்து விலகிச் செல்ல ஒரு பெருமளவு (ton) வேகம் தேவைப்பட்டது. எனவே, இந்த விண்கலம் விண்வெளியில் உள்ள வெள்ளி கிரகம் (Venus) அருகாமையில் செல்லும் வரை, விண்வெளிக்கலனை மூன்று நிலைகளாகப் (3-Stage Separation) பிரித்து அனுப்பப்பட்டது. இது 6 வாரங்களுக்குப் பிறகு செப்டம்பர் கடைசியில் அங்கு போய்ச் சேரும் என்று கூறுகின்றனர்.
செப்டம்பர் 28-ஆம் தேதி அன்று, விண்கலம் தனது ஈர்ப்பு விசை எனப்படும் சூழ்ச்சியைப் பயன்படுத்தி சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆராயும். பிறகு நெருக்கமான அணுகுமுறையுடன் சூரியனுக்கு அருகில் உள்ள 24 கிரகத்தின் சுற்றுப்பாதையின் தரவு (Data) நவம்பர்-1 ம் தேதி வரும் எனவும் கூறியுள்ளனர்.
குறிப்பிட்ட காலத்தில் எப்படி இது இலக்கை அடையும் என்பதை மக்கள் சந்தேகிக்கின்றனர். அதனால் தான் இக்கருவியின் ஆராய்ச்சியாளர் ஜஸ்டின் காஸ்பர்(Justin Kasper), மற்ற கிரகங்களின் சுற்றுப்பாதை சூரியனுக்குத் தொலைவில் இருக்கும் போது இந்த விண்கலமானது அதன் நேரத்தை பயன்படுத்தி சூரியனுக்கு நெருக்கமாகவும், பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு சமமாகவும் இருக்கும் என்று கூறுகிறார்.
இதைத் தான் விஞ்ஞானிகள் வேகமான ரேடியல் ஸ்கேன்கள் (fast radial scans) என்று சொல்கின்றனர். இச்சமயங்களில் தான் விண்கலத்தின் சுழற்சி சூரியனின் சுழற்சியை ஒத்திருக்கும். அதே நேரத்தில் அப்பகுதியில் விண்கலம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை 10 நாட்களுக்கு நாம் காணமுடியும்.

சூரியனின் ஒரு பகுதி எவ்வாறு மாறும் அல்லது மாறாது என்பதைப் பற்றியும் அறிய முடிகிறது என்று திட்ட விஞ்ஞானி நிக்கோலா ஃபாக்ஸ் கூறியுள்ளார். பார்கர் விண்கலம்
இங்கே நீங்கள் படித்தது கட்டுரையின் சிறு பகுதி மட்டுமே. படங்களுடன் மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ள முழு கட்டுரையை இங்கே படிக்கலாம்.
இது போன்ற பயனுள்ள பல கட்டுரைகளையும், தகவல்களையும் தெரிந்துகொள்ள எழுத்தாணியின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்
Originally published at ezhuthaani.com on September 2, 2018.
