ஞாபகம் வருதே…. ஞாபகம் வருதே… — தமிழர்கள் மறந்து போன பழைய விளையாட்டுகள்

NeoTamil TV
Sep 2, 2018 · 2 min read

ஓடியாடி கூடி விளையாடும் பாரம்பரிய குழு விளையாட்டுகள் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்கும்.
அத்தகைய விளையாட்டுகளில் கில்லி, பம்பரம், தாயம், பல்லாங்குழி, சிலம்பம், பச்சைக்குதிரை, நொண்டி, நாடு பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகின்றன. தற்போதுள்ள தலைமுறையினர் இந்தப் பெயர்களைக் கேட்டிருக்கக் கூட வாய்ப்பு இல்லை.

இருப்பினும் ஒரு சில கிராமங்களில் இன்றும் உயிர்ப்புடன் இருந்து வந்த பாரம்பரிய விளையாட்டுகளைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் தனிநபர் வீடியோ கேம்ஸ் இடையில் புகுந்து விட்டன.

பழந்தமிழர் விளையாட்டுகள்

பழங்காலத்தில் சிறுவர்களுக்கு மரங்கொத்தி, காயா?பழமா?, உப்பு விளையாட்டு, ஐந்து பந்து என 65 விளையாட்டுகள் இருந்தன.

இதே போல சிறுமியர்களுக்கு ஒண்ணாங்கிளி இரண்டாம்கிளி, பருப்புசட்டி, கண்கட்டி, அக்கா கிளி செத்துபோச்சு, மோருவிளையாட்டு, கரகர வண்டி, கும்மி, சோற்றுபானை என 27 விளையாட்டுகளும்,

சிறுவர் சிறுமியர் இருவரும் சேர்ந்து விளையாடும் வகையில் தொட்டுவிளையாட்டு, குரங்கு விளையாட்டு, கண்ணாமூச்சி, நொண்டி, குலைகுலையாய் முந்திரிக்காய் போன்ற 30 விளையாட்டுகளும்,

ஆண்கள் மட்டும் விளையாடும் வகையில் ஜல்லிகட்டு, வாடிவாசல், சிலம்பம், பாரிவேட்டை, சடுகுடு, புலிவேடம், பானை உடைத்தல் போன்ற 30 விளையாட்டுகளும்,

குழந்தைகளுக்கு என்று தென்னைமர விளையாட்டு, பருப்புகடைந்து, சீப்பு விக்கிறது என 5 விளையாட்டுகள் இருந்தன.

தமிழர்கள் நாம் கண்டுபிடித்த விளையாட்டுக்கள் அனைத்தும் நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாச்சாரம், பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை, விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் நம் மனதிற்கும், உடலிற்கும்
நன்மைகளை வழங்கக் கூடிய விளையாட்டாகவே இருந்து வந்தது.

நொண்டி விளையாட்டு

நாம் நம் பண்டைய விளையாட்டுக்களை முற்றிலும் மறந்து விட்டோம். அவற்றில் ஒன்று தான் நொண்டி விளையாட்டு. ஒற்றைக்காலில் தவ்வி நடப்பது நொண்டி. ஓடுபவர்களை நொண்டி அடித்துத் தொடுவது நொண்டி விளையாட்டு. இது குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சி ஆகும். நொண்டி விளையாட்டு குழந்தைகளின் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்து, அவர்களின் சோம்பேறித்தனத்தை குறைக்கிறது. இது கால்களுக்கு இடையே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.

பம்பரம் விடுதல்

இந்த பம்பர விளையாட்டிற்கு இத்தனை பேர் தான் விளையாட வேண்டும் என்று வரைமுறையில்லை. இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம். முதலில் ஒரு வட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த வட்டத்தைச் சுற்றி நின்று பம்பரத்தையும் சாட்டையையும் சுற்றுவதற்காகத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒன் டூ த்ரி சொல்லியவுடன் அனைவரும் பம்பரத்தைச் சாட்டையால் சுற்றிக் கொண்டு வட்டத்திற்குள் பம்பரத்தை சுழலவிட வேண்டும்.

இங்கே நீங்கள் படித்தது கட்டுரையின் சிறு பகுதி மட்டுமே. படங்களுடன் மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ள முழு கட்டுரையை இங்கே படிக்கலாம்.

https://ezhuthaani.com/arts-entertainment/forgotten-childhood-games-of-tamil-people/

இது போன்ற பயனுள்ள பல கட்டுரைகளையும், தகவல்களையும் தெரிந்துகொள்ள எழுத்தாணியின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்


Originally published at ezhuthaani.com on September 2, 2018.

NeoTamil TV

Written by

தமிழின் முழு முதல் தகவல் தளம்

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade