மகிழ்ச்சிகரமான வாழ்விற்கு 10 வழிகள்..!
உங்களுக்குத் தெரியுமா? நம் வாழ்நாளில் முக்கால்வாசி நாட்களில் நாம் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறோமாம். கால்வாசி வாழ்வைத் தூங்கியே கழிக்கிறோம். பின் எப்போது தான் நாம் மகிழ்வாக இருக்கிறோம். மகிழ்ச்சியைத் தொலைத்த நாட்களில் வாழ்வு என்று ஒன்று எங்கே இருக்கிறது?
அழுத்தும் பணிச்சுமைகள், துரத்தும் கடமைகள், நிற்க நேரமின்றி, யாரையும் நிமிர்ந்து பார்க்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம். இப்போதெல்லாம் நாட்கள் எவ்வளவு வேகமாகக் கரைகின்றன கவனித்தீர்களா? கிடைத்த வாழ்க்கை நமக்கொரு புதையல். அதை எப்படி மகிழ்வாகக் கழிப்பது என்பதற்கான 10 வழிகளை இக்கட்டுரையில் காண்போம்.
1.மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள்:
மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்திப் பார்த்தலென்பது ஒரு போதை. உங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கத் தான் விரும்புவீர்கள். ஆனால், அதை வெளிப்படுத்தி இருக்கிறீர்களா? குடும்பத்தைத் தாண்டி முன்பின் தெரியாத யாரோ ஒருவரை மகிழ்வித்துப் பாருங்கள். அது தரும் அனுபவம் அலாதியானது. உங்களால் ஒருவர் முகத்தில் தோன்றும் சிரிப்பும், மகிழ்வும் நாள் முழுவதும் உங்களை மகிழ்வாக வைத்திருக்கும். எனவே, நேரம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள்.
2. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்:
தண்ணீர் உடலில் ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கும் அருமருந்து. எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ, அவ்வளவு நாம் நம் உடலைப் பற்றிய கவலையின்றி இருக்கலாம். உடல் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் இருந்தாலே நம் மனம் மகிழ்வாக இருக்கும். எனவே,
இங்கே நீங்கள் படித்தது கட்டுரையின் சிறு பகுதி மட்டுமே. படங்களுடன் மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ள முழு கட்டுரையை இங்கே படிக்கலாம்.
https://ezhuthaani.com/top-10/10-ways-to-live-a-happy-life/
இது போன்ற பயனுள்ள பல கட்டுரைகளையும், தகவல்களையும் தெரிந்துகொள்ள எழுத்தாணியின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்
Originally published at ezhuthaani.com on September 2, 2018.
