தனித்து நட …
யாரும் உன் குரலுக்கு செவிமடுக்கவில்லையா ?
நீண்ட சுவடுகளை பதித்து தனித்து நட
எல்லாரும் அகக்கதவுகளை மூடி மவுனித்திருந்தால்
உன் மனதை திறந்து,தனித்து பேசு !
தனித்து நட,தனித்து நட,தனித்து நட
சுடும்பாதை தடைகளால் அழுத்தும்
முகங்களை திருப்பிக்கொண்டு கைவிட்டு போவார்
முற்களை நசுக்கு !
உதிரக்காயங்கள் தோய்ந்து ரத்தம் சொட்டும் பாதையில்
கம்பீரமாக பயணிப்பாய்
தனித்து நட,தனித்து நட,தனித்து நட
யாரும் விளக்கை ஏந்த மறுக்கும்
இருள் கசியும் பொழுதை பெரும் புயல் தாக்கி
பிணிநெருப்பை இடிபோல தந்திடுமாயின்
உன் உள்ளத்தை உருக்கி நீயே ஒளியாகு
தனித்து நட,தனித்து நட தனித்து நட-தாகூர்
தமிழில் — பூ.கொ.சரவணன்.