தன் சமூகத்தையோ, தன் பொருளாதாரத்தையோ பறைசாற்றவே இங்கு வந்தேன் என்பவர்களுக்கு நட்புவட்டம் கிடைத்தது முதல் ஆச்சரியம். காரணம் அதுவாய் இருக்கும் பட்சத்தில் மற்றவர்களின் கருத்துக்களை எதிர்பார்க்க கூடாது, அப்படி எதிர்பார்த்தாலும் negative comments ஐ ஏற்கக்கூடாது.
கவனிக்காது ஆயிரம்பேர் விலகிச்செல்லும்போது உரிமையுடன் தவறுகளை சுட்டிக்காட்டும் உரிமை நண்பனுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை மறுப்பது மடத்தனம்.
நான் இன்ன இனத்தான் என்பதில் கேவலமாக நினைக்கிறேன் எனும்போதே நீங்கள் கேவலமாக நினைக்கப்பட்டுவிட்டீர்கள்.
அரசின் சலுகைகளுக்கோ, அரசு பதவிகளுக்காகவோ தன் இனத்தை கூறி இலவசங்களையும் உரிமைகளையும் அள்ளிப்பருகும்பொழுது இன்ன இனத்தான் என்பதில் வலிக்காத மனம், இலவசங்களும் உரிமைகளும் கொடுக்கப்பட்ட காரணத்தை கூறும்பொழுது மட்டும் உங்களுக்கு அடிவயிறு பற்றிக்கொண்டு எரிவது வேடிக்கையாகத்தான் உள்ளது.
(கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை)
உங்கள் இனம் கையாலாகாதது பிழைக்கத்தெரியாதவர்கள் என அரசிடம் இத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்கும்பொழுது, நாமும் சகமனிதர்கள்தான் அரசின் பிரத்யேக உதவிகள் தேவையில்லையென படிப்பறிவுள்ள (பட்டதாரி) நீங்கள் ஒருமுறைகூட குரல்கொடுத்து இனி குரல்கொடுக்க மாட்டீர்கள் என்பது ஆணித்தரமான உண்மை.
இனத்தின் பெயரைச்சொல்லி இலவசங்கள் வாங்கி வாழநினைக்காத ஒவ்வொரு மனிதனும் உயர்ந்தவன்தான். போதுமான பொருளாதார நிலையில் இருப்பீர்களென நினைக்கிறேன் உங்கள் பிள்ளைகளை இலவசவுரிமைக்காக கோரிக்கைவிடுத்து அவர்களையும் உங்களைப்போல் இனத்தானாக மாற்றாதீர்கள். அவர்களாவது மனிதர்களாக வாழட்டும்.
நீங்கள் இங்கேசெய்த புரட்சியின் பலன் எங்கள் பெற்றோரின் காலத்தோட அழிந்துபோன எங்கள் இனத்தைப்பற்றிய சிந்தனையை தூண்டிவிட்டதைத்தவிர வேறொன்றையும் புடுங்கவில்லை.
-Porukke