📖 மக்களுக்கான எங்கள் செயற்பாட்டு வரைவு - 2016 📖
பக்கம் : 92
📜 *கல்விக்கொள்கை* 📜
*குளறுபடிக் கல்விமுறை*
📔 தேசியக் கல்விக் குழு, ஆச்சாரியா கல்விக் குழு, இராமமூர்த்தி கல்விக் குழு ஆகிய குழுக்கள் பரிந்துரைத்த *"பொதுப்பள்ளிகளோடு இணைந்த அருகாமைப் பள்ளி"* என்ற திட்டத்தை நாடாளுமன்றம் ஏற்றது. ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை. அரசுப் பள்ளிகளோடு தனியார் பள்ளிகளையும் இணைத்துக் கொண்டு அனைவருக்குமான சமமான கல்விமுறை என்ற திட்டம் கிடப்பிலேயே உள்ளது. நாம் அதைப் போராடி நிறைவேற்றுவோம்._
*கட்டாயக் கணினிக் கல்வி*
📕 ஒன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரையிலும் கட்டாயக் கணினி பயிற்சி வகுப்பு இணைக்கப்படும்.
📗 சுமார் 21 ஆயிரம் கணினிப் பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சி முடித்துவிட்டு வேலையின்றிக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். மாணவர்களுக்கும் கணினி அறிவு புகுத்தப்படும்.