ரொக்கப்பணமில்லா ஹிந்தியா?Cashless India?

வெளிநாட்டில் குவிக்கப்பட்ட கருப்பு பணம், வெளிநாடு வழியே நுழையும் போலி முதலீடு, பெரு முதலாளிகள் கட்டாமல் ஆட்டையப்போட்ட பணம் என கருப்பு பணத்தின் 90 சத முக்கிய மையத்தை விட்டு, பத்து சதம் பிரச்சனையான பணம் பதுக்கலை இந்திய அரசு ஒழிக்கிறேன் என நோட்டுகளை செல்லாததாக்கியதன் பின்னணியே வேறு..

அது 85 சத பணப்புழக்கத்தை ஒழித்து, மீதமுள்ள நூறு ரூபாய்களின் தட்டுப்பாடில் செயற்கை பணத்தட்டுப்பாட்டை கொண்டுவருவதும்,

அதன் தொடர்ச்சியாக, 70 சதம் வங்கி கணக்கு இல்லாதவனை வங்கி கணக்கு துவங்க வைப்பதும்,

பணத்தட்டுப்பாட்டால், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்தாதவனை அதை பயன்படுத்தியே தீரவேண்டும் எனும் பழக்கத்தை உண்டாக்கவும்,

பணம் பரிமாறும் சிறு வணிக சந்தைகளை ஒழித்து, இணையதளம், கார்டு மூலம் வணிகம் செய்யும் பெருமுதலாளிகளிடம் தள்ளுவதற்கும்,

மக்களின் பொருளாதாரத்தை வங்கிகளும், கடன் அட்டைகளும் தீர்மானிக்கவும் வரம்பு மீறி செலவழிக்கவும் தூண்டவுமாகும்.

முடிவில், பெருமுதலாளி இன்னும் பெருமுதலாளி ஆவான். சிறு வணிகர்கள் சந்தையிலிருந்து ஒழிவான். இணையதளம், கடன் அட்டை என வரம்பற்ற செலவில் மக்கள் கடனாளியாக பெருமுதலாளிகளுக்கு வட்டி கட்டி வாழ்வான்.

ரூபாய் நோட்டு ஒழிப்பு கொடுத்த அடியில் ஏழை பரம ஏழையாவான்.

கேஷ்லெஸ் இந்தியா பெருமுதலாளிகளுக்காக, பல கோடி இந்திய மக்களை காசில்லாதவனாக ஆக்குவதேயாகும்.

ஆக்கம்: மதிவானன்