சராசரி இளைஞனின் கனவு வாழ்க்கை

ஒரு நடுத்தர குடும்ப இளைஞனின் வாழ்க்கை,சிறுவயது முதல் கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து,என்றாவது ஒருநாள் இந்நிலை மாறும் என்ற கனவுடனே வளருகிறான்,பள்ளி படிப்பு சொல்லி கொடுக்கும் பாடம் நம்மை வாழ்க்கையில் பெரியநிலைக்கு கொண்டுசெல்லும் என்ற நிறைய கனவுகள்,வகுப்பில் முதலிடம் பிடிக்கும் போதெல்லாம் தான் வாழ்கையிலேயே ஜெயித்து விட்டதாக எண்ணி பெருமிதம் கொள்கிறான் ,பள்ளி படிப்பு முடிகிறது ,நிறைய மதிப்பெண்கள் எடுத்து தேர்வில் வெற்றி பெறுகிறான்.குடும்பமே மகிழ்ச்சியின் எல்லைக்கு செல்கிறது ,தன் குடும்ப கஷ்ட்டங்களை நம் மகன் போக்கிவிடுவான் என்று மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்துகின்றனர்.

தன் மகன் தன்னை போல் கஷ்ட்டப்படகூடாது என்பது தந்தையின் கனவு ,எப்படியோ கஷ்டப்பட்டு கல்லூரியில் சேர்க்கிறார் ,

கல்லூரி முதல் நாள் இன்ஜினியரிங் சேரவேண்டும் என்ற கனவு நிஜமாகி ,நிறைய கனவுகளுடன் நுழைகிறான்,கல்லூரி முதல் நாள் தன் உயிர் தோழர்களை சந்திக்கிறான் அவர்கள் தான் இறுதிவரை வரப்போகிறவர்கள் என்று தெரியாமலே அறிமுகமாகிறான் ,பள்ளியில் தமிழில் படித்துவிட்டு எல்லாம் ஆங்கிலம் என்றதும் கனவுகள் அனைத்தும்

இருண்டது போலவே தோன்றுகிறது ,எனினும் எப்படியோ படிக்கிறான் .எல்லோருடைய வாழ்கையிலும் சந்திக்கும் காதலும் கடந்து செல்கிறது,கல்லூரி இறுதியாண்டு கேம்பஸ் இன்டர்வியு வரும் அதில் தேர்வாகிவிடலாம் என்ற கனவு ,கடைசி வரை அது கனவாகவே செல்கிறது,காரணம் அங்கும் மதிப்பெண்களை வைத்தே தேர்வு செய்யப்பட்டனர்.இறுதிதேர்வும் முடிந்து கல்லூரி வாழ்க்கை முற்றுபெறுகிறது ,கண்ணீர்த்துளிகளுடன் நண்பர்கள் பிரிகிறார்கள் ,ஆனால் கனவுகள் மட்டும் தொடர்கிறது.

படித்த படிக்காத அனைவரின் என்னத்தை போலவே சென்னை சென்றால் எல்லா கனவுகளும் நிஜமாகிவிடும் என்று ,வேலை தேடி கனவுகளுடன் சென்னைக்கு பஸ் ஏறுகிறான் ,சொந்தங்கள் நிறைய இருந்தும் யாரும் இல்லாதவனாய் தனியே இருந்து வேலை தேடுகிறான் ,வாழ்க்கையின் நிஜத்தை அந்த தேடல் கற்று கொடுக்கிறது ,தெரியாத ஊர் ,அறிமுகமில்லா மனிதர்கள் என்று எல்லாம் புதிது வெறும் கனவுகளை மட்டும் சுமந்து இன்டர்வியு நடக்கும் அலுவலகங்களை தேடி சென்று கொண்டே இருக்கிறான் ,கிடைத்தது என்னமோ ஏமாற்றம் மட்டுமே ,நம் குடும்ப கஷ்ட்டங்களை மகன் போக்கி விடுவான் என்று எண்ணிக்கொண்டிருக்கும் பெற்றோரிடம் எதையோ ஒன்றை சொல்லி சமாளித்து கொண்டிருக்கிறான் ,கல்லூரி தோழன் வாயிலாக ஒரு சிறிய அலுவலகத்தில் வேலைக்கு சேருகிறான் ,படிக்கும் பொது நிறைய கனவு இன்ஜினியரிங் படித்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்று ,நடந்தது வேறு கிடைத்ததோ வெறும் சொற்பமான சம்பளம்.கனவுகள் அனைத்தும் கண்ணீர்த்துளிகளாக விழிகளின் ஓரம் கரைபுரண்டு ஓடுகிறது.

புது அலுவலகம் புது நண்பர்கள் பிடிக்கவில்லை என்றாலும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் தான் சேர்ந்த வேலையை கற்றுக்கொண்டு அங்கு நன்மதிப்பை பெறுகிறான் ,அங்கு ஒரு பெண் வந்து சேருகிறாள், தன் வாழ்க்கையின் முதல் தோழியை அங்கு சந்திக்கிறான் ,தன் வாழ்க்கையில் தான் அறியாத மற்றும் உணராத நிறைய மகிழ்ச்சியான தருணங்களை தன் தோழி மூலம் உணர்கிறான்,எனினும் அவன் கனவுகள் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது ,நண்பர்களுடன் பெரிய ஷாப்பிங் மால் செல்கிறான் , அவனுக்கு பிடித்த ஆடையை பார்க்கிறான் ,அதன் விலையையும் தான் மாத தொடக்கம் என்றாலும் எதுவும் இல்லை ,வெறும் பர்ஸ் எடுத்த ஆடையை அங்கேயே வைத்துவிட்டு நகர்கிறான் ,அவனுக்கும் ஆசை மற்றவர்களை போல நண்பர்களுடன் செலவு செய்ய வேண்டும் ,தான் ஆசை படுவதையெல்லாம் வாங்க வேண்டும் என்று ,ஆனால் அது இன்றளவும் கனவாகவே சென்றுகொண்டிருக்க , என்றாவது ஒரு நாள் தன் நிலை மாறி விடும் என்ற கனவோடு நண்பர்களுடன் அங்கிருந்து நகர்கிறான்.

மறுநாள் காலை எப்போதும் போல மனதில் நிறைய கனவுகள் இன்னும் கொஞ்சநாள் எல்லாம் மாறிவிடும் என்று தனக்கு தானே கூறிக்கொண்டு வழக்கம் போல் அலுவலகம் நோக்கி நடையை போடுகிறான்,மனதில் கனத்த கனவுகளை சுமந்து கொண்டு….

Like what you read? Give VIJAYAKRISHNAN a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.