நட்பையும் காதல் கொள்

நட்பு கடவுள் அளித்த ஒரு அழகிய வரம் . இரு மனம் இணைந்தால் வருவது காதல் மட்டுமல்ல நட்பும் கூட தான். எதிரிகள் இல்லை என்பவன் கூட இங்கு உண்டு. நண்பன் இல்லை என்று கூறுபவன் இந்த மண்ணில் இல்லை என்று அடித்து கூறும் அளவுக்கு நட்பு அனைவரைவரையும் ஆட்க்கொண்டுள்ளது. காதல் மட்டுமல்ல நட்பும் கூட எல்லா உயிர்களிடத்தும் உள்ளது. நட்புகென்று எந்த தடையும் இங்கு கிடையாது. இந்த அழகிய உலகத்தில் பணம்,பொருள் எதற்கும் மதிப்பு கிடையாது, அன்பிற்கு மட்டும் தான் மதிப்புண்டு. இங்கு எதிர்பார்ப்புகள் கூட மிகவும் குறைவே. இங்கு அதிகம் எதிர்பார்க்கப்படுவது உண்மையான அன்பும்,நம்பிக்கையும் தான்.

ஒவ்வொரு காதலிலும் ஒரு அழகான நட்புள்ளது , ஒவ்வொரு நட்பிலும் ஒரு அழகிய காதல் உள்ளது. இதை உணர்ந்து வாழ்ந்தவர்களை விட உணராமல் இங்கு வாழ்பவர்களே அதிகம். ஆணும் -ஆணும் கொள்ளும் நட்ட்புக்கும் ,பெண்ணும்-பெண்ணும் கொள்ளும் நட்புக்கும் ஒரு பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை, இதில் எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லை. இது இரண்டிலும் அதிகம் தேவைபடுவது நம்பிக்கை மட்டும் தான், இது இரண்டிற்கும் இங்கு எதிர்ப்புகள் கூட கிடையாது.இவை இரண்டிற்கும் அடுத்து ஒன்று உள்ளது ஆணும் பெண்ணும் கொள்ளும் நட்பு. மேல் கூறிய இரண்டையும் விட இங்கு எதிர்பார்ப்புகள் இங்கு அதிகம், மேலிரண்டையும் விட இங்கு அதிகபட்ச நம்பிக்கை மற்றும் புரிதல் தேவை. உண்மையான புரிதல் இருந்தால் மட்டுமே இங்கு நட்பு என்பது சாத்தியப்படும்.

என்னதான் காலங்கள் மாறினாலும், உலகை பார்ப்பவர்கள் கண்கள் மட்டும் இன்னும் மாறவே இல்லை. ஆணும் பெண்ணும் சிரித்து பேசினால் அதற்கு தனி பாடமே புகட்டும் உலகம் இன்னும் அப்படியே தான் உள்ளது. கண்ணை கட்டிக்கொண்டு உலகை பார்ப்பவர்களுக்கு பகலும் இரவு தான். கண்ணில் குறையை வைத்துக்கொண்டு காட்சியை குறை கூறுவது எந்த அளவு தவறோ அது போல தான் இதுவும். இங்கு இதுவும் தவிர்க்க முடியாத ஒன்று.

இருட்டிய பொழுதில் வீடு வரை கொண்டு செல்லும் தோழனையும், காசில்லா பொழுதில் கொடுத்து உதவும் தோழியையும், நட்பை உணர்ந்தவர்களால் மட்டுமே இங்கு அறிய முடியும்.

நண்பர்கள் நிறைந்த உலகம் அழகானது, இந்த அழகை ரசிக்க உணமையான நட்பு கொண்டால் மட்டுமே முடியும்.

ஆணும்-ஆணும், பெண்ணும்-பெண்ணும் நட்பு நிலைபெற இரு மனங்கள் நினைத்தால் போதும். ஆண்-பெண் நட்பு உயிர்வாழ நான்கு மனங்களும் மனது வைக்க வேண்டும்.

“நட்பிலும் ஒரு நாள் பிரிவு வரும்,

பிரிவும் ஒரு நாள் முடிவுக்கு வரும்,

முடிவும் ஒரு நாள் மகிழ்ச்சியாய் துவங்கும்,

அதுவரை நட்பையும் கற்பை போல் நேசி,

நட்பையும் காதல் கொள்.”

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.