எப்பவாச்சும் இருந்திட்டு ஏதாவது சாப்பிடத் தோணும்போது அம்மாவிட்ட அடம்பிடிச்சு செய்துதரச் சொல்லும் போதெல்லாம், அப்ப நாளைக்குச் செய்வம் என்றதுபோல அம்மா சொல்லிட்டால் காணும். குதூகலம். நாளைய நாள் வரும் வரை காத்திருப்பும் எதிர்பார்ப்பும். எனக்குப் பிடிச்ச சாப்பாடு எண்டால் அம்மா செய்து தாற மரக்கறி ரொட்டி. கரட், பீற்றூட், கோவா எண்டு எல்லாம் மாவில் கலந்து அம்மா சுட்டுத்தரும் ரொட்டிக்கு ஈடிணையே இல்லை. அண்டைக்கும் அம்மாவிடம் கேட்டு அடுத்தநாள் மரக்கறி…