கோகோ — அபிநயக்கூத்து

தமிழர் நாடகக் கலையின் தோற்றத்தினை விவரிக்கும் நூற்களில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது அகத்தியம் என்னும் தலைச்சங்ககாலத்து நூலாகும். நாடகம் என்பது பாட்டும், உரையும், நடிப்பும் என்பது தமிழ்மரபு வழி கூறும் இலக்கணமாக விளங்குகின்றது.

ஆனால் இன்றோ தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமான வண்ணமிகு செயற்கைகோள் அலைவரிசைகளினூடே தொலைந்துவிட்ட நாம் நம் பழங்கலைகளையும் தொலைத்துவிட்டோம்.

நாடகம் நடைபெறுவதே அரிதான இக்காலத்தில் ஷரத்தா குழுவினரின் கோகோ- தமிழில் அபிநயக்கூத்து அழைப்பிதழ் கண்டு வியக்கப் பெற்றேன். நாடகம் நடைபெறவிருக்கும் நாரதகான சபாவிற்கு இதற்கு முன் பலமுறை நான்சென்றிருந்தாலும்… இம்முறை முதல் முறை போன்றே தோன்றியது.

ஆர்வமிகுதியால் 10 நிமிடம் முன்னரே இருக்கையில் சென்றமர்ந்தேன். இருப்புகொள்ளாது… இக்குழுவினர் மற்றும் அபிநயக்கூத்து பற்றி இணையத்தில் உலாவந்த போது அறிந்தவை..

சென்ற ஆண்டு 8 குறுநாடங்களை அரங்கேற்றிய ஷரத்தா குழுவினரின் புதிய படைப்பு — கோகோ. ஷரத்தா மற்றும் மேக்டிரிக்ஸ் குழுவினரின் இணைந்த படைப்பு — கோகோ.

நாடகம் தொடங்கிய முதல் பத்து நிமிடங்களிலே.. இது மழலையர்கான அபிநயக்கூத்து என்று புரிந்தாலும்… நான் பார்க்கும் முதல் தமிழ் அபிநயக்கூத்து என்பதால் ஆர்வம் மிகுந்திருந்தது.

மிகச் சரியாக 7 மணிக்குஅபிநயக்கூத்து தொடங்கியது. கணிப்பொறி நிழல் அசைவூட்டுதலினால் ஏற்படுத்தப்பட்டநிகழ்வுகள் மிகவும் வியப்பூட்டின.

காட்டுக்குள் சுத்தித்திரியும் ஒரு கோழி நாம் காடுகளை அழித்ததால் ஒரு முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுபொறிக்க அது படும் அவதிகளும் அது எவ்வாறு அக்குஞ்சினை பேணிகாக்கிறது என்னும் ஒருவரிக்குள் கதை சுற்றி வந்தாலும்… சிறிதளவும் தொய்வு ஏற்படாமல் கதையை எடுத்து செல்லும் விதம் மிகவும் பாராட்டத்தக்கது.

ஒரு வழியாக ஒரு பாதுகாப்பான இடமாக அது கருதிய இடத்தில் முட்டையிட்டு பாதுகாக்கும் பொழுது அங்குவழிப் போகர்களாக வரும் குட்டிக்கரண கலைஞர்கள் மூன்று பேர்நட்புடன்அது எவ்வாறு குஞ்சு பொறிக்கிறது.

அச்சிறு குஞ்சாக கோகோ. குழந்தைகளுக்கே உரிய குறும்புத்தனம், விளையாட்டு புத்தி… அதன் தாயாக சிக்கி –தாய்மைகுரிய பண்புகளுடன் குட்டிகரணகலைஞர்களாக ஜோ — ஜோகோ- ராகா குழுவினரின் குதூகலமான அட்டகாசங்கள்… இரண்டு மணி நேரத்தினை மிகவும் நேர்தியாக எடுத்துச் செல்கிறது.

கோகோ வளர்ந்தவுடன் சிக்கி கோகோவின் எதிர்காலம் கருதி கோகோவின் விருப்பதிரற்கெதிராக பல்வேறு பயிர்சிகளில் ஈடுபட வைத்து.. கோகோவை வெறுப்படையச் செய்து… இறுதியில் தன் தாயான சிக்கி அனைத்தினையும் தன் எதிர்கால நலன் கருதியே செய்தாள் என புரிந்து கொள்ளும் பொழுது.. சிக்கியும் தன் மகளை அவளது சக்திக்கு மீறி பாரத்தை ஏற்றிவிட்டோமே என புரிந்து கொண்டு அன்புடன் கட்டி தழுவும் காட்சி மிகவும் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.

மொக்கையாக தொலைக்காட்சி பெட்டியின் முன்அமர்ந்து மாமியார் — மருமகள் பஞ்சாயத்தினை பார்த்து பழகிய நமக்கு… இது போன்ற அபிநயக்கூத்து புதியதாய் இருந்தாலும்… இவை பொழுதுபோக்காக மட்டுமின்றி இன்றைய குழந்தைகள் பெற்றோர்களின் கனவுகளால் படும் அவதிகளையும் மிக அழகாக தொலுரிக்கிறது.
ஷரத்தா குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விடைபெற்றேன்.