புறா பாட்டு

புறா புறா குட்டிப் புறா
கூரை மேலே குந்தும் புறா
வாலை ஆட்டி ஆடும் புறா
வானத்திலே போகும் புறா

அம்மா புறா ஒன்னு அப்பா புறா ஒன்னு
குட்டி குட்டி குட்டி புறா மொத்தம் இங்கே மூணு
அம்மா அப்பா ரெண்டும் பாலை ஊட்டும் பாரு
பாலைக் குடிச்சு குட்டி பறந்து போகும் பாரு

எனக்கு புடிச்ச நல்ல புறா
அரிசி கொத்தும் செல்ல புறா
என்னத் தேடி வந்த புறா
எங்க வீட்டின் சொந்த புறா