எங்கே Cell-லும் இந்தப் பாதை…

Courtesy: NFNLabs.Design

நெருப்பு கண்டுபுடிச்ச காலம்தொட்டு நடக்குற டெக்னாலஜி புரட்சிகள்ல செல்போன் புரட்சி அளவுக்கு வேகத்தோடும் வீரியத்தோடும் கடைநிலை வரைக்குமான தாக்கத்தோடும் வேறெதும் புரட்சி இருக்குதான்னு தெரியல (புரட்சித் தளபதி விசாலின் வெற்றி ஓரளவுக்குக் கிட்டக்க வரும்). இருபது வருசத்துக்கு முன்ன மோட்டோரோலா நோக்கியாலருந்து இன்னைக்கு எண்ண முடியாத அளவுக்குக் குவிஞ்சு கெடக்குற செல்போன் வகைகளும் கையடக்கப் பிரம்மாண்டங்களும் எல்லாரும் தடவியதே.

இந்தத் துறைல அடுத்த கொஞ்ச காலத்துக்காச்சும் ஹெர்குலியன் மாற்றம் வராதுன்னாலும் அப்பப்ப சின்னச்சின்ன ஆச்சர்யங்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Processor board சிறுசாக ஆக அந்த கேப்ப நிறைக்கற மாதிரி பேட்டரி பெருசாயிட்டே போகுது. இன்னிக்கி செல்போன்ல தலையாய பிரச்சினையா பெரும்பாலானோருக்கு இருக்குறது பேட்டரிதான். பேஷண்டுக மூத்தர பையத் தூக்கிட்டே அலையுறாப்ல செல்போன்வாசிகள் பவர் பேங்க்க கையோடயே வச்சுட்டு சுத்தறாங்க. Ultra slim மொபைலுங்குறான் ஆனா பிந்துகோஷ் பவர் பேங்க்க ஒட்ட வச்சுட்டுருக்கான். ஆகவே, பேட்டரி சைஸு சிறுசாக்குற டெக்னாலஜி வரணும்.

கோயம்பேடு பஸ்டாண்ட் போன்ற ஏரியாக்கள்ல பாத்துருக்கலாம். சார்ஜ் பாயிண்ட்டுகிட்ட மணிக்கணக்கா ஒரே பொசிசன்ல நின்னுட்டுருப்பாங்க சார்ஜ் போட. அதுவும் இந்த ஆன்றாய்டிருக்கிறதே ஆன்றாய்ட், சர்க்காரோட நேரடி தொடர்புல இருக்குறவர பேட்டரி ஃபுல்னு காட்டும் சார்ஜர புடுங்குன அடுத்த நொடி ஜொய்ங்குன்னு லோ பேட்ரி மெசேஜ் காட்ட ஆரமிச்சுடும். புவர் ஃபெல்லோஸ். So, சட்டுன்னு ஃபுல் சார்ஜ் ஆகுற, ஆனா என்ன அடி அடிச்சாலும் சார்ஜ் எறங்காத பேட்டரிகள் வரணும். அந்தக்கால கால்குலேட்டர்ல இருந்தாப்ல வெளிச்சத்துலருந்து தன்னால ஆட்டோ சார்ஜ் ஆகிக்குற போன்கள் வந்தா அத வாங்க 9.50pm டாஸ்மாக் மாதிரி கூட்டம் அம்மும்.

ஆன்றாய்டுகாரனுவ சார்ஜ் எறங்குதுன்னு அழுதா ஆண்டவன் ஆப்பிளானுகளுக்கும் அவங்களுக்குத் தக்கன ஆப்பு வச்சிருக்கார். சார்ஜர் கேபிள் பிஞ்சிபோச்சுன்னு ஐயோ அம்மான்னு அழாத ஐயோயெஸ் யூஸர் ஒருத்தரக் காட்டுங்க, ரஜினி சார் போடறதா சொன்ன பிரியாணிய நாம்போடுறேன். என் எதிர்காலத்தப் பத்தி நெனச்சதவிட சார்ஜர் ஒயருக்கு எதும் ஆயிடக்கூடாதுன்னுதான் அதிகம் நான்லாம் நெனச்சுருக்கேன். மூளைக்குள்ள எப்பவும் ஒரு dedicated neuron thread இதுக்குன்னே ஓடிட்டிருக்கும். ஆக, அடுத்து wireless சார்ஜிங்குக்கு எதாச்சும் புது டெக்னிக் வரணும்.

அப்டேட்டில்லா ஆப்புக்கு அழகு பாழ் எனும் அப்டேட்டட் பழமொழிக்கேற்ப எல்லா ஆப்புநர்களும் அடிக்கடி அப்டேட் அனுப்பிட்டே இருக்காங்க. அதுல பாருங்க, தமிழ்நாட்டுக்கே பட்ஜெட் போடுற அளவு அமௌண்ட்டு இத்துணூண்டு ஆர்கே நகருக்கு மட்டும் திரும்பத்திரும்ப போறாப்ல, தக்ளூண்டு போனுக்கு ஜிபி கணக்குல அப்டேட் உடுவாங்க. ஓசி நெட்டு கெடைக்குதுன்னாலும் அப்டேட்ட பதுக்க போன்ல எடமிருக்கனும்ல? ஒவ்வொரு அப்டேட்டப்பவும் ஸ்டோரேஜ் இல்லன்னு இருக்குற பாட்டெல்லாம் அழிச்சு, போட்டோலாம் அழிச்சு, மத்த ஆப்பெல்லாம் அழிச்சு, மெசேஜ்லாம் அழிச்சு, கடேசில காண்டாக்ட்ஸக்கூட அழிக்கிற நெலமைக்கு நெருக்கிடுது. ஆகவே, டிவைஸ்ல அப்டேட் பண்ணாம சர்வர் சைடுல அப்டேட் பண்ணதும் தன்னால பளிச்சுன்னு தன்ன புதுப்பிச்சுக்குற ஆப் டெக்னாலஜி வரணும்.

இதுலாம் வருமான்னு தெரியல. வந்தா நல்லாருக்கும்னு தோணுது. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல பாருங்க.