மாற்றம் முன்னேற்றம்

இப்ப பரவலா சில விசயங்கள் ஜாஸ்தியாய்ட்ட மாதிரி தெரியுது. இதுலாம் எதனாலன்னு புரியல. அல்லது இது ஒரு இயற்கையான சுழற்சிதானான்னும் தெரியல.

Courtesy: Internet
  1. புல்லட்டு: அந்த பைக்கோட வெல கொறஞ்சுதா, இல்ல மக்கள் வசதியாய்ட்டாங்களா, இல்லன்னா Peer Pressureரான்னு தெரீல. ரோட்ல every 3rd guy ஒரு புல்லட்ட டுப்புடுப்புடுப்புன்னு ஓட்டிட்டு போறாங்க. நண்பர் ஒருத்தரோட ஆபிஸ்ல ரெண்டு மூனு பேர் புல்லட்டு வாங்கிருக்காங்கனு இன்னொருத்தரும் வட்டிக்கி லோன் வாங்கி வண்டி வாங்குனதா சொன்னாப்டி. மேய்க்கப்போறது எரும. இதுல என்ன பெரும?
  2. Trekking: இது ஓரளவு உலகத்த புரிஞ்சுக்க உதவுற நல்ல விசியம் தான். இதுவும் சமீபமா ஜாஸ்தியாய்ருக்கு. இதுக்குன்னு பேஸ்புக்ல லச்சக்கணக்குல குழுமங்கள் செயல்படுது. வீக்கெண்டோ ஒரு நாள் லீவோ வந்துட்டாப்போதும். நாகலாபுரம், நகரி, கொல்லிமலைன்னு பொட்டியக்கட்டிடுறாங்க. மனுசங்களே அண்டாத எடத்துக்குப்போயி அங்கயும் ப்லாஸ்டிக் போடுறது, பீர் பாட்டில ஒடச்சு வீசுறதுன்னு இல்லாம இருந்தா சிறப்பு.
  3. சைக்கிள் & மாரத்தான்: புல்லட்டுகளோட பெருக்கம் மாதிரியே இதுவும் பெருகிடுச்சு. மக்கள் திடீர்னு ரொம்ப ஹெல்த் கான்ஷியஸ் ஆகிட்டு வராங்களோன்னு தோண வெக்கிது. 50கிமீ 100 கிமீட்டர்னுலாம் சைக்ளிங் பண்றவங்கள பாத்துருக்கேன். இந்த சைக்கிள்க வெல மட்டுமே 30ஆயிரத்துலருந்து லச்சங்கள் வரைக்கும் இருக்குதாம். இவ்வளவும் எல்த் பெனிபிட்டுக்காம். (நான் மைலாப்பூர்ல பொடிநடையாவே வாக்கிங் போயிக்கிறேன்.)
  4. *லியோ முதலிய டயட்டுகள்: சாதா ஆளவிட டயட்டுல இருக்கவன் தான் வகவகயா லிஸ்ட்டு போட்டு திங்கிறானுங்கன்னு ஒரு பேச்சு நிலவுது. இப்ப ரீசண்ட்டா வந்த ஒரு டயட் மதமா மாறிட்டு வருது. லைட்டா தீவிரவாத சுமெல்லும் அடிக்கிது. அதப்பத்தி தப்பாவோ விமர்சனமாவோ எங்கயாச்சும் இணையத்துல பேசினா இதுக்குன்னே பதுங்கிட்டிருக்க சிலீப்பர் செல்லுக ஸ்க்ரீன்சாட் எடுத்து மேலிடத்துக்கு தகவல் குடுத்துடுதுக. அவங்களும் கும்பலா வந்து ஹார்ஷா திட்டிட்டு போறாங்க. அதான் பேரச்சொல்லவே பயமாருக்கு. ஒரு எக்சைசும் வேணாம். தின்னு தின்னே ஒடம்பக்கொறைக்கலாம்னு சொல்றாங்க. கேட்டு வெச்சுப்பம்.
  5. ஸ்பா & மசாஜ்: நண்பர் ஒருவர் அப்பப்ப மசாஜுக்கு போவார். ஒரு தடவ, ஒரு தடவ தடவ எம்புட்டுன்னு விசாரிச்சேன். கால அமுக்குறதுக்கே 500 ஓவாய்ன்னாப்டி. அங்க விட்ட ஓட்டம், இன்னும் ஓடிட்டிருக்கேன். தலவலி அமிர்தாஞ்சனம் வாங்கவே யோசிக்கிற முப்பாட்டன் வம்சம் இப்ப பெடிகூர் மெனிகூருக்கு ஆயிரங்கள எறைக்கிது. ஒலகம் முன்னேறிடுச்சா இல்ல நாம பின் தங்கிட்டமா?
  6. எதுக்கெடுத்தாலும் அடுத்தவனத் திட்டி மட்டமா பேசி ஒரு போஸ்ட்டொன்னு தேத்துறது. இந்தா இப்டி.