வாழ்வே மாயம்

“ஹலோ”

“சொல்லுங்க”

“அப்துல் சார்?”

“ஆமா”

“சார் நாங்க க்ரெடிட் கார்ட் பர்சனல் லோன்லாம் ப்ராசஸ் பண்றோம். எதும் லோன் ரெகொயர்மெண்ட் இருக்குங்களா?”

“எந்தக்கடனும் இல்லாம சந்தோஷமா இருக்கேங்க”

“ஹாஹா.. சரிங்க சார். ஃப்யூச்சர்ல எதும் தேவப்பட்டா இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க”

“தேவையே வந்துடக்கூடாதுன்னு வேண்டிக்கிறேங்க”

மற்றொரு ஹஹ்ஹஹ்ஹா. ஒரு தாங்க்ஸ் சார். லைன் கட்.

பேசி முடிச்சதும் “எந்தக்கடனும் இல்லாம சந்தோஷமா இருக்கேங்க” — இந்த லைன மைண்ட் வாய்ஸு ‘ஏம்ப்பா பழ்னிச்சாமி இது நெசந்தானா’னு கேட்டுச்சு.

கடன் இல்லாம இருக்குறேங்குறது நெசந்தான். ஆனா சந்தோஷமா இருக்கேனான்னு… அப்டின்னு திங்கிங் போயி திஸ் விருமாண்டி மொமண்ட் ஆகிப்போச்சு.

அன்னலச்சுமி இல்லாத இந்த ஆயிச கடத்த வேண்டி வரும்…