Use(less) Case!

சமீபத்துல ஒரு சம்பவம் நடந்துச்சு. இந்த சமீபம்ங்குறதே ரிலேட்டிவ்தான்ல. ரியல் எஸ்டேட்காரனுக்கு மெற்றாஸும் அந்தமான்ஸும் சமீபம்தான். எனக்கு பக்கத்தூட்டு பெங்குட்டியின் ப்ரென்சிப்பும் அசமீபம்தான். சிறப்பு.

கடந்த மாசம் ஆபிஸ்ல ஒரு வேல வந்துச்சு. இதுவரைக்கும் செய்யாத ஒரு வேல. ஒரு புது ப்ராஜெக்ட். அதுக்கு Use Case எழுதணும். ஒரு ப்ராஜெக்ட் உருவாகுமுந்தி அது எப்டியெல்லாம் இருக்கும்னு எழுத்துப்பூர்வமா புள்ளயார்சுழி /செவென் எய்ட் சிக்ஸ் / praise the lord போடுறது யூஸ்கேஸ் டாகுமெண்ட் எனப்படும். (பைதிவே, இந்த 786 லாஜிக்க(!) கண்டுபுடிச்ச டாகு எந்த டாகு?).

க்லையண்ட் ரெகொயர்மெண்ட்டுகள் மெய்ல் வழியாவும் மீட்டிங் வழியாவும் பறக்க, எல்லாத்தையும் நோட்ஸ் எடுத்து ஒரு வழியா எழுத ஆரமிச்சேன். எப்டெப்டிலாம் எழுதணும்னு எங்க பாஸ் சூத்தரத்த சொல்லச் சொல்ல, நண்பன் இடிக்க, நான் வடிக்க, இப்புடியே ஒரு ஒருவாரத்த ஓச்சு, நைட்டு பகல்னு பாராம 150 பக்கம் (நெஜமாவே 150 பக்கம்) டாகுமெண்ட் ரெடியாச்சு. ஒரு நள்ளிரவு (அல்லது அதிகாலை) 4.34 மணிக்கு முடிச்சு பாஸுக்கு அனுப்பினேன். மெய்ல் தட்டி பத்தே நிமிசத்துல நீங்க வீட்டுக்குப்போலாம்னு பதில். ஆனது ஆச்சுன்னு ஒருக்கா “உலக அழகி நான் தான்” பாட்டப்பாத்துட்டு (HDகெடைக்க மாட்டுதே) உல்லாசமா வீட்டுக்குப்போய் தூங்கினேன். டாகுமெண்ட் ரிஜக்டட்னு 11 மணிக்கி வந்த மெய்லப்பாத்துதான் கண்ணு முழிச்சது. Completeness இல்ல. டாகுமெண்ட் வெறும் டெஸ்டர் point of viewல இருக்குன்னு சொல்லிருந்தாரு. ஓடுவது டெஸ்டிங் ரத்தமல்லவா (A1+ve in real . வேண்டுவோர் அணுகவும்).

சரின்னு மறுபடியும் பட்டி டிங்கரிங் பரபரன்னு பாத்து பாதி வாரம் எடுத்து அனுப்பினேன். மூனே மூனு மணி நேரம். ஜஸ்ட் திரீ அவர்ஸ். மீண்டும் ரிஜக்டட். நம்மளோட அவ்வையார் ஆரம்ப பாடசால ஆங்கிலத்த வச்சு எழுதினத க்லையண்ட்டு பாத்தா வாயால சிரிக்க மாட்டான்னாரு. அப்புறம் ஒவ்வொரு use caseசும் எடுத்து அத வேற எப்டிலாம் யோசிக்கலாம்னு சொல்லிக்குடுத்தாரு.

இந்த அசைன்மெண்ட் மூலம் கத்துக்கிகிட்ட விசயங்கள்:

  1. தெரியாத விசயத்த செய்றியான்னு யாரும் கேட்டா curiosityக்காக ஒடனே ஓகே சொல்லிடக்கூடாது
  2. தெரியாத வேலைல எறங்கற நெலம வந்தா அது தெரிஞ்ச ஒரு 2,3 நபர்கள்ட்ட கேக்கணும்
  3. Waterfall modelலுக்கு சங்கூதிடணும். Agile முறைல அப்பப்ப feedback வாங்குறது எல்த்துக்கும், 11 மணிக்கே தூங்குறதுக்கும் உதவும்
  4. எழுத்தைப் பொறுத்தவரை, எழுதி-எடிட்டி-எழுதி-எடிட்டி-ரிவ்யூவி-மீண்டும் எடிட்டி-எழுதி வெளியிடுறது உயிருக்கு நன்று
  5. நம்மளவிட இண்டெலிஜெண்ட் பாஸ்கிட்ட வேல பாக்கவே கூடாது. நொட்டு நொட்டும்பாங்ய

எழச்சு எழச்சு எழுதினது ரிஜக்ட் ஆனத விட்டு வெளிய வர கொஞ்சம் டைமாச்சு. அந்த ஆத்தாமைய போக்கிக்க ஒரு Mock use case எழுதிப்பாக்கணும்னு தோணிச்சு.

Use Case Id: 1

Use Case Name: ராஜா கரடியைக் கொல்லுதல்

Actors: ராஜா, கரடி

Brief Description: காட்டிற்குச் சென்று கரடியை ராஜா அம்பால் வீழ்த்திக் கொல்லுகிறார்

PreCondition: கரடி உயிரோடிருத்தல், ராஜாவும் உயிரோடிருத்தல், வில் அம்பு ரெடியாயிருத்தல்

Basic Flow: காட்டில கரடியோட அட்டகாசம் தாங்காமப் போகவே, அதோட கொட்டத்த அடக்க ராஜாஹ் தன்னோட வேட்டைப் படையோட காட்டுக்குப் போகத் தீர்மானிக்கறார். ஒரு நல்ல நாளிலே வில் அம்பு மற்றும் படையினரோட காட்டுக்குப் போறார். கரடியும் கண்ல பட்டுடுது. அப்போ:

  1. ஒரு அம்ப எடுக்கறார், எய்ம் பண்றார், அம்பு விடறார், மிஸ்ஸாய்டுது
  2. மறுபடியும் ஒரு அம்ப எடுக்கறார், எய்ம் பண்றார், விடறார், மிஸ்ஸாய்டுது
  3. இந்த தடவ விட்டுடக்கூடாதுன்னு ஒரு பெரிய அம்ப எடுக்கறார், சார்ப்பா எய்ம் பண்றார், விடறார், தக்காளி அதுவும் மிஸ்ஸாய்டுது.

Post Condition: இப்ப கரடி அந்த ராஜாகிட்ட வந்து சொல்லுது. இத்தன அம்பு விட்டும் என்னக் கொல்ல முடியலியே, உண்மைலயே நீ என்ன சுட வந்தியா? இல்ல…

#ஹப்பாடா