வரதட்சினை
Aug 27, 2017 · 1 min read
தேடினேன் தேடினேன் என்னையே தேடினேன்
பாடினேன் பாடினேன் தொலைத்ததை எண்ணியே பாடினேன்
இதயம் விற்று பொருள்கள் பெற்று செல்லும் மனிதன்.
விழிகள் மூடி, செவிகள் மூடி செல்லும் வணிகன்
செய்த பாவம் செய்த தர்மம் எண்ணும் கணிதன் சற்றே நினைத்துப் பார்த்தால் என்றும் அவனே வெல்லும். புனிதன்
பொய்கள் செய்யும் கலைகள் யாவும் கொண்டே வென்றாய்.
புதிய பாவை கண்ட பின்னே எனோ விட்டுச் சென்றாய்
நரிகள் கொஞ்சம் நெறிகள் கொஞ்சம் வாழ்வில் உண்டு
இருந்த போதும் உன்னை ஏற்றேன் கனவு கண்டு
கண்ணீர் விட்டு காதல்விட்டு தெருவில் நின்று வாழ்க்கை தொலைத்து உறவும் அற்று நின்றேன் இன்று
மறந்து போக இறந்து போக எண்ணும் இதயம் சற்றே விழித்திருந்தால் எல்லாம் இங்கு விடியும்
