விசாரணை: இது வரை தமிழில் நான் பார்த்த ஆக சிறந்த திரைப்படம். எழுத்து வகைகளில் மட்டுமே கையாளப் பட்டு வந்த சமரசம் இல்லாத, நேர்மையான கதை சொல்லல், முதன் முறையாக தமிழ் சினிமாவில்.
எல்லா நிலைகளிலும், நிரம்பி வழியும் ஆணவ அவலங்கள். அரசியல் தலைவர்கள், அரசு ஊழியர்கள், கார்பரேட்கள், குடும்ப தலைவர்கள், சாமானியர்கள் என அனைத்து தளங்களிலும் தன்னை விட கீழ் நிலையில் உள்ளோரின் தலை மிதித்து தன் உயரம் ஏற்ற துடிக்கும், மனிதம் - சமூக கட்டமைப்பு.
விசாரணை, காவல் துறையை களமாக மட்டுமே பயன்படுத்தி, படம் பார்ப்பவரை சுயவிசாரணைக்கு இட்டு செல்லும் - realistic experience.