ரௌத்திரம் பழகு
தாலி கட்டிய மனைவி தாலியின்றி காத்து கிடக்க ...
வீட்டு அடுப்பில் பூனை உறங்க ...அடுப்பின் உபயோகம் தெரியாமல் குட்டி மழலை அதை சுற்றி விளையாடும் அவலம் கேட்கவில்லை …
அந்த சாக்கடை ஓரமிருந்து செவ்வாய் கிரகம் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் அந்த குடும்ப தலைவனுக்கு…
ரௌத்திரம் பழகு…

காதல் என்பதோர் புனிதச்சொல்...புனிதச்சொல்லில் தொடங்கி
மாதர்தம் மெய் தொடும் சாவியாய்மாறிபின்…
உயிரையும் மாய்த்து விடும் மரணச்சொல்லில் முடித்தது விதி..
முடித்தது யாரோ இத்துறை வித்தகன்தான்...ஆனால் பழி
பாவம் விதி மேல்…
ரௌத்திரம் பழகு…

பல காரும் போகுதய்யா..பல்லக்கும் போகுதய்யா ..
அங்கே கீழே கிழவன் விழுந்துகிடக்க..
வருந்தியதே கூட்டம்
கிழவனின் வலியை கண்டா?
வழிமாறி போக வேண்டும் என்று..
இனி டேக் டைவர்சன் அல்லவா?
ரௌத்திரம் பழகு…

பொழப்பத்தேடி பாரீனுக்கு போனான் ஒருத்த..
பாக்குறதென்னமோ பத்து டாலர் உத்தியோகந்தா..
ஆனால் பகட்டோ தன் தாயின் மார்பை சேலை போர்த்தி மறைக்க மறந்தவன் போல்
என் தமிழை நாவினிக்க உரைக்க மறந்ததென்று பிதற்றும் பாவியின்
கடவுசீட்டு கசக்க பட வேண்டுமென்று …
ரௌத்திரம் பழகு…

தன் இனத்தை தானே அழித்த வரலாறு மனிதனை தவிர வேறு எந்த மிருகத்திற்கும் இல்லையம்மா
அன்று என் தங்கை கருவறுக்கப்பட்டு கிடக்கையில்
என் தமயருள் ஒருவர் கூட வரவில்லை…
அன்று பழகிக்கொண்டேன் ரௌத்திரத்தை…
பார் போற்றும் பாரதி சொன்ன மனிதனாக வேண்டாம்…
பாதி மனிதனாய் இரு போதும்..

கவிஞர் . மகிழ்

Show your support

Clapping shows how much you appreciated மகிழ்😊..’s story.