உங்க சாப்பாடுல சுகர் இருக்கா? சுகர் — அன்றாட வாழ்வின் அகராதியில் இன்று இயல்பாகிவிட்ட ஒரு வார்த்தை. வீட்டிற்க்கு வரும் விருந்தாளிகளிடம், ‘நல்லா இருக்கீங்களா?’ என்று கேட்பதை விட, “காப்பியில் சுகர் போடலாமா?” என்று கேட்பது அவசியம் ஆகிவிட்டது. நமது பொது கலாச்சாரத்தில் ‘சுகர்’ என்பது இரண்டு விசயங்களை குறிக்கிறது — ஒன்று இனிப்பு சுவை கொண்ட சர்க்கரை, இரண்டு diabetes எனப்படும் நீரிழிவு நோய். ‘சுகர்’ என்றாலே diabetes…