Arivalagan Dhannath
Sep 7, 2018 · 1 min read

திராவிட இயக்கமும் செப்டம்பர் மாதமும்:

செப்டம்பர் மாதம் திராவிட இயக்க அரசியலில் முக்கியமான நிகழ்வுகள் நிகழ்ந்த மாதம்.

1. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா இருவரும் பிறந்த மாதம் செப்டம்பர்.

2. 1934- ம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் ஒரு வேலைத்திட்டத்தை தயாரித்தார். அதாவது விவசாய நலன், தொழிலாளர் நலன் எனும் சோசலிஷ பாதையில் அமைக்கப்பட்டிருந்த அத்திட்டத்தில், 'மதங்கள் ' அரசியலில், நிர்வாகத்தில் எந்தவிதமான சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும் என்பதான கருத்துக்கள் இருந்தன. இவரது வேலைத்திட்டத்தை காங்கிரஸ் கட்சிக்கும், நீதிக்கட்சிக்கும் அனுப்பி வைத்தார். காங்கிரஸ் கட்சி அதை ஏற்க மறுத்தது. நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டது. அந்த நாள் 1934-.ம் ஆண்டு 29- ம் நாள் செப்டம்பர்.

3. 1938-ல் இந்தி திணிப்பை எதிர்த்து,

இந்தி திணிப்பு எதிர்ப்புப்படை உருவானது. அந்தப்படை பாவேந்தர் பாடலை பாடிக்கொண்டே பெரும் பயணம் மேற்கொண்டது. அப்படை திருச்சி உறையூரில் தொடங்கி, 234 ஊர்களைக் கடந்து, 87 பொதுக்கூட்டங்களை நடத்தி 42 நாட்களாக நடந்த நெடும் பயணம் சென்னையில் நிறைவுற்ற தினம் 11ம் நாள் செப்டம்பர்.

4. சென்னை கடற்கரையில் 70 ஆயிரம்பேர் திரண்டிருந்த கூட்டத்தில் ' தமிழ்நாடு தமிழருக்கே' என தந்தை பெரியார் முழங்கியதும் அதே 1938, 11, செப்டம்பர்.

5. 1945-ல் திருச்சி புத்தூர் மைதானத்தில் கூடிய மாநாட்டில் திராவிட நாடு என்ற கருத்தியல் முழுமை பெற்று, தமிழக கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கறுப்புச்சட்டை படையின் துவக்கம் 29, செப்டம்பர்.

6. பேரறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கியது 1949, 17, செப்டம்பர்.

7. முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் மாநில உரிமைகளை நிலைநாநாட்டும் விதமாக ராஜமன்னார் குழுவை நியமித்தது 1969-ம் ஆண்டு 22- ம் நாள் செப்டம்பர்.

எனவே செப்டம்பர் மாதத்தை என்றும் நினைவில் கொள்வோம்.

நன்றி .

அன்புடன்,

ஜெகன்னாதன் ஆசிரியர்(ஓய்வு) , கருப்பூர்,

ஒன்றிய இலக்கிய அணிஅமைப்பாளர்,, திருவையாறு தெற்கு.


Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade