கண்ணாடி.,
“இல்ல இல்ல நீங்க நேர்ல வந்துட்டு போங்க, இந்த வயசுல பேசுற பேச்ச மேடம் இது”
“அதுக்கு இல்ல மிஸ், நா வந்து”
மருமுனையில் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
“யாருமா போன்ல” கைகடிகரத்தை கட்டியவாரே பார்த்தார் மாணிக்கவாசகம்.
“ஆருத்ரா வோட மிஸ்ப்பா, ஸ்கூல்லருந்து”
“என்னவாம், ஏதாச்சும் பிரச்னையா”
“இல்ல பா, இவ ஏதோ சொல்லிர்ப்பா போல, அதுக்கு கால் பண்ணி காம்பலைன்”
“என்ன சொன்னாளாம்?”
“யாரோ கூட படிக்குற பசங்கள திட்டிற்பா போல”
“பாரு, அவனோட ரத்தம்ல ஓடுது அதான், கேட்டு விற்றாத ரெண்டு சாத்து சாத்து, பயம் வரட்டும்”
பதில் பேசாமல் சுவற்றை பிடித்தவாரே நின்றாள்.
“புதன்கிழம கடைசி ஹெரிங், நியாபகம் இருக்கட்டும், சனியன தலமுழ்கிடலாம்”
கண்ணில் நீர் வடிவதை சற்றும் அலட்சியம் செய்யாமல் , ஒளி மங்கிக்கொண்டிருந்த காமாட்சி அம்மன் விளக்கை பார்த்தாள்.
வித்யா…காதல் திருமணம்…சாதி…மதம்… பேதம்… அனைத்தும் மீறி கண்ணனை கரம்பிடித்தவள். சிறிது சிறிதாக ஆரம்பித்து கடைசியில் பிறந்த வீட்டிற்கு குழந்தையுடன் பொங்கலுக்கு வந்தவள், திரும்பி செல்லும் எண்ணம் அடியோடு போயிற்று. பண தட்டுப்பாடும், நிரந்தர வேலை இல்லாமல் , கடைசியாக தன் நகைகளை விற்று குழந்தைக்கு மருத்துவ செலவுகள் பார்த்துகொள்ளும் நிலை வந்தது… சிறு வயதில் தாயை இழந்து, வசதியும் அந்தஸ்திலும் திளைத்து இருந்தவள், தந்தையின் பேச்சை மீற முடியவில்லை..
“அவன் ஒன்ன விட்டுட்டு வேற ஏவ கூடையாச்சும் போவான், உன்ன இப்படி பாக்கவாமா இவ்ளோ சொத்து சேர்த்து வேக்கேன்” என்று கண்ணீர் விட்டு காரியத்தை கச்சிதமாக கையாண்டார்.
“என்னயும் புள்ளையையும் விட்ரு…உனக்கு புண்ணியமா போகும்.. டிவோர்ஸ் குடுத்துரு”
பெரிய இடியை இறக்கினாள்.. ஸ்தம்பியதுபோனான் கணவன். தொழிலில் நஷ்டம், வேலை இழந்து முகம் வாடி, பிட்சைகாரனை போல் இருந்தான்.
“ வாய தொறந்தாலே டிவோர்ஸ்… கொஞ்சம் பொரு, செரியாடும்….புரிஞ்சிக்கோ…. நா எல்லாத்தையும் வித்தாவது உன்னயும் பாப்புவையும் பாத்துக்குரேன்”
“இதையே சொல்லு, என்னையும் வித்ரு, இந்த உன் புள்ள…இதையும் வித்ரு.”
பளார்…. பொங்கல் அன்று வீட்டை விட்டு வெளியேறினவள். காலம் ஒன்றை கடந்து ஓடிக்கொண்டிருந்தது. அவனின் எண்ணம் வந்து போயினும், நடைமுறையில் அவனுடன் வாழ்வது சாத்தியமற்றது என்று தீர்மானித்துகொண்டாள்.
விவாகரத்து பூர்த்தியாகும் கடைசி தருணம் நெருங்கிக்கொண்டிருந்தது. மாணிக்கவாசகமோ கண்ணனை கொடூரமாய் திட்டி தள்ளினார். பாவம் கண்ணன், ஏதோ ஒரு பகுதிநேர வேலையை செய்துகொண்டு அதில் வரும் பங்கில் வக்கிலுக்கு செலவு செய்து வந்தான். எப்படியும் இந்நிலை மாறும்…. குடும்பம் சேரும் என்று நினைத்த தருவாயில் விழுந்தது இடி….கடைசி மாதம்…இதன் பின் வழக்கு அவளுக்கு சாதகமாய் அமையும் என்று அவன் தரப்பு வக்கீல் குறிவிட்டார்.
விளக்கில் சற்று எண்ணெய் ஊற்றி, திரியை ஏற்றி வைத்தாள். ஓடிய எண்ணங்கள் நீராய் கண்ணில் பெருக்கெடுத்தது. பாவம் அவள் பெற்றெடுத்த குழந்தை…ஒன்றும் புரியாமல் சீக்கி தவித்தது…
கார் சாவியை எடுத்து கொண்டு ஸ்கூலை நோக்கி கிளம்பினாள் வித்யா.
“வாங்க மேடம்… உங்கள தான் பாத்து பேசனும்னு இருந்ததேன்…. என்னதான் உங்களுக்கு உள்ள பிரச்னை இருந்தாலும் குழந்தைய யார் பத்துக்குறா?”
“இல்ல மிஸ்…ஒழுங்கா தான் படிக்குற… எல்லாம் பண்றா…என்னன்னு எனக்கு புரியல”
“என்னனு சொல்ல வித்யா மேடம், படிப்பு வாழ்க்கையில ஒரு பங்கு தாங்க, அவளுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கல, பணத்தால எல்லாத்தயும் வங்கமுடியாது மேடம்”
சற்றே எரிச்சலடைந்து “என்ன கூப்ட ரீஸன் சொல்லறீங்களா” என்றாள் சற்றே அழுத்தமாக.
“பைன்… இன்னிக்கு PT Periodல யூக்ஜி பசங்களும் எல்கேஜி பசங்களும் சேர்ந்து விளையாடினாங்க, திடீர்ன்னு பாத்தா உங்க பொண்ண காணோம், பதறிப்போய் தேடுநதுல வாட்ச்மென் கிட்ட நின்னு பேசிட்டு இருக்கா”
கண்கள் சற்றே வியந்த நிலையில் இருந்து கொண்டு , சற்று தூரத்தில் குழங்கல்லை பொறுக்கி கொண்டிருந்த தன் மகளை கண்டாள்… வித்யாவை கண்டு பல்லை காட்டியவாறு சிரித்துக்கொண்டு விளயாடிக்கொண்டிருந்தாள் வெள்ளந்தியாக..
“போயி விசாரிச்சப்போ, இன்னிக்கு பாதர்ஸ் டே கொண்டாடினோம்.. அப்பா எங்க போச்சுன்னு தெர்ல…நீ வறிய தாத்தானு கேற்றுக்கா, நாம மேட்யூரிட்டி இதிலே தெரியணும் வித்யா”
“அப்டி லாம் பேச கூடாதுனு சொன்னத்துக்கு, என்ன சொன்ன தெரியுமா”
கண்களில் நீர் சொட்ட சொட்ட விளயாடிக்கொண்டிருந்த தன் மகளை பார்த்தவாரே
“என்ன சொன்ன”
“நீ பேசாத மிஸ்… உன்ன டிவோர்ஸ் பண்ணிடுவேணு ஓடி போய்ட்டா”
“பாத்துகொங்க” என்று தோளில் தட்டி குடுத்து சென்றாள்.
ஆள் அரவம் இல்லாத அந்த மாலை நேரத்து பள்ளி பூங்காவில், முகத்தில் கையைமூடி குமுறி அழுதாள்.
ஓடிவந்த ஆருத்ரா கையை விலக்கினாள்…அவளின் கண் கண்ணாடியில் வித்யாவின் பிம்பம் பிரதிபலித்தது…
“போலாம் வித்யாம்மா…பசிக்குது….சீக்கிரம் போலன தாத்தா திட்டும்” என்று காரை நோக்கி ஓடினாள்.
எதையோ சிந்தித்து பெருமூச்சை விட்டு காரை நோக்கி சென்றாள். காரை ஸ்டார்ட் செய்தவள்…வலப்புறம் பதில் இடப்புறம் திரும்பினாள்..
“எங்கமா போரோம்” என்று வினவினாள்.
“நம்ம வீட்டுக்கு….நம்ம அப்ப இருக்குற வீட்டுக்குடாம்மா” என்று அழுத்தமாய் கூறினாள்.
கண்ணாடியை சரிசெய்ததில்…ஆருத்ராவின் உதட்டின் புன்சிரிப்பு இவளுக்கும் ஒட்டிட்ரூ…
