Medium புதிதாக சில வசதிகளை தோற்றுவித்துள்ளது. அதில் முதன்மையானது, சிறியதோ பெரியதோ அளவு வேறுபாடின்றி பதிவுகளை உருவாக்கி பகிர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பாகும். இந்தப் பதிவும் அதன் ஒரு வருவிளைவாகும்.

அதேபோன்று, புதிதாக Textshots என்கின்ற எழுத்துக்களை படிமங்களாக்கிப் பகிர்கின்ற வசதியையும் Medium வழங்கியுள்ளது. ஆனாலும், இது தமிழ் எழுத்துக்களை படிமங்களாக மாற்றுவதில் வழுநிலையைக் காட்டுகிறது.

இதுபற்றி, Medium வடிவமைப்புக் குழுவிற்கு அறிவித்தேன். அவர்கள் இந்த வழுவை விரைவில் திருத்துவதாக பதில் சொல்லி அனுப்பியுள்ளார்கள். பார்க்கலாம். இந்த Text shots ஐ தமிழ் எழுத்துக்களோடு காண்பதற்கு ஆர்வமாயிருக்கிறது.

எழுதுங்கள். எழுதிக் கொண்டேயிருங்கள்.