வள்ளுவ வாசகன் பக்கம்

ஆதிமுதலாய் தோன்றிய உலகில் நாகரீகம் எப்படி வளர்ந்தது என்பது ஏடுகளில் இருந்து நாம் காலம் காலமாய் தெரிந்து கொண்டு வருகிறோம். ஆனால் காலம் தாண்டிய முதியவர்களின் குரலை மதிக்கக் கூட நேரம் இல்லாவிட்டாலும் நமக்கு வள்ளுவனின் வரிகளை மறுக்க மனம் இல்லை என்பதே உண்மை. இதில் நான் மட்டும் என்ன சொல்லிவிடப் போகின்றேன் என எனக்கும் ஒரு கேள்விதான். ஆனால் காலம் செல்லச் செல்ல வள்ளுவனின் குறள் அடிகள் நம் குரலை விட்டு விலகி விடாமல் இருக்க இதுவும் ஒரு முயற்சி. ஆனால் குரலை படித்துவிட்டு பழைய விளக்கவுரை புராணம் சொல்ல நான் எண்ணவில்லை. புதிய வாழ்க்கையில் எங்கே நாம் வள்ளுவனை விட்டு விலகி நிற்கின்றோம் என்பதை வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து எடுத்து காட்டவே விழைந்துள்ளேன். இத்தகைய முயற்சி இன்றைய சூழலில் வெற்றி பெறா விட்டாலும் அதன் மதிப்பை இழக்காமல் நம்மோடு முடிந்த வரை எடுத்துச் செல்ல வழிவகை செய்து விட்டு செல்வோம் என்பதே இதற்கான விளக்கம். இதற்காக நான் ஒரு முகப்பு புத்தக பக்கத்தை தொடங்கியுள்ளேன். அதன் வாயிலாகவே இன்றைய சமுதாய மக்களை எளிதில் சென்றடைய வாய்ப்பாகவே உள்ளது என்ற கருத்தினால், அதில் “வள்ளுவ வாசகன்” என்ற பக்கத்தை நிறுவியுள்ளேன். உங்களுக்கும் ஆர்வம் இருப்பின் வயது வரம்பின்றி ஆதரவை முடிந்த வரையில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தொடரும்…