நம் முதல் முயற்ச்சி

ஒரு குட்டி கதை

ஒருத்தன் ஒரு ஆறோட கரைல போய் நின்னு அக்கரையை பார்க்கிறான்.அக்கரைக்கு போகணும்ன்னு நினைக்குறான். ஆனால் அவன் குடும்பத்தில் அவனை சொகுசாக படகில் அக்கரைக்கு கொண்டுபோய் விட வசதியும் இல்லை,வழிகாட்ட ஆளும் இல்லை.எப்படி போவது,எங்க இருந்து ஆரம்பிக்கிறதுன்னு தெரியாமல் தினம் வந்து திரும்பும் அவனை கவனித்த ஒரு சாமியார் அவனிடம் என்ன பிரச்சனை என்று கேட்டு தெரிந்து கொண்டார்.

இப்படி தினம் வந்து பார்த்து கொண்டிருப்பதால் நீ அக்கரைக்கு போக மாட்டாய்,எதிர்நீச்சல் அடித்து போ,கடக்க உனக்கு இறைவன் ஏதாவது ஒரு வழியில் உதவுவான் என்று கூறி நீச்சல் தெரியாத அவனை ஆற்றில் தள்ளிவிட்டார். தள்ளாடிய அவன் வாழ்வா சாவா என்று போராடி,ஆற்றில் அடித்து வந்த ஒரு மரக்கிளையை பற்றி அக்கரைக்கு போய் சேர்ந்தான்

கதை அல்ல நிஜம்

இது வருஷா வருஷம் நடக்கும் சம்பவம் தான்.+2 தெரிவில் நல்ல மார்க் எடுத்த அரசு பள்ளி மாணவர்கள் மேற்படிப்பு படிக்க வசதி இல்லாமல் அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நிற்பார்கள். உதவிகேட்டு அவர்களை பற்றிய செய்திகள் இணையத்தில் உலவும். பின் தமிழகத்தில் ஏழை மாணவர்களுக்கு உதவும் NGO/Trust பற்றிய செய்திகள் உலவும். எல்லாம் கொஞ்ச காலம் தான் ரிசல்ட் வந்து ஒரு வாரத்திற்கு மட்டும் உலவும். அந்த மாணவர்கள் என்ன ஆனார்கள்?,உதவி கிடைத்ததா? தொண்டு நிறுவங்கள் உதவியதா? அதை மரக்கிளையைப் போல் பற்றிக்கொண்டு அந்த மாணவர்கள் அக்கரைக்கு போய் சேர்ந்தார்களா என்றெல்லாம் நமக்கு தெரியாது. நம்மை பொறுத்த வரை அது ஒரு 100 RT #Hashtag செய்தி .

நாம் ஏன் உதவக்கூடாது ?

சிலர் அவர்களால் முடிந்ததை செய்கிறார்கள். பலர் இப்படி காலங்காலமாக நாம் ஏன் செய்யக்கூடாது என்று

திண்ணைப்பேச்சு RT வீர்கள் எதையாவது எழுதுவார்கள். அதுவும் RT ஆகும்,சிலர் ஆம் உதவி செய்வோம் “வெற்றிவேல் வீரவேல்” என்று சொல்வார்கள்.

ஆனால் இணைய போராளியின் பேச்சு,அதை RT பண்ணிட்டா போச்சு என்பது தானே வழக்கம்

யார் செய்வது?

தமிழ் நண்டு கதை தான் தெரியுமே,ஒரு நண்டு எதையாவது பயனுள்ளதாக செய்ய நினைத்தால்,உடனே மற்ற நண்டுகள் அதெப்பெடி நீ மட்டும் செய்யலாம் என்று காலை பிடித்து இழுத்து நடிகர் சண்டை, இசை சண்டை, அரசியல், ஜாதி, மதம்போன்ற இணைய மரபு சண்டைகளுள் அடைத்துவிடும் அறிவுரைகளாலும், விமர்சனங்களாலும்.

  • இதெல்லாம் பேச வேணா நல்லா இருக்கும்,பண்ணலா முடியாது
  • டேட்டா கார்ட் போடுறதே பெருசு,இதுல உதவணுமாம்
  • ஏற்கனவே கைவிடப்பட்ட முயற்ச்சி(தவறை சரி செய்யாமல்,முயற்ச்சியையே கை விடுவதா?)
  • உன்னை நம்பி யாரும் தர மாட்டார்கள்
  • இதெல்லாம் பிரபலங்கள் தான் ஆரம்பிக்கணும்
  • இங்கு யாரும் நண்பர்கள் இல்லை,யாரையும் நம்பாதே உதவுவார்கள் என்று
  • உதுவது என்றால் தனியா செய்,தமிழ் டிவீட்டர்கள் சார்பாக செய்யனும்னு எல்லாம் நினைக்காத, நடக்காது
  • இங்க இருக்குறவங்களை நம்பியா?எத்தன பேர்கிட்ட உதவுங்கன்னு பிச்ச கேட்ப ?,எல்லாம் சும்மா படிக்க கூட மாட்டங்க,இல்ல கர்டசிக்கு ஒரு பதில் கூட வராது
  • இதெல்லாம் உனக்கு தேவையா?,RT வேணும்னா கேளு பண்ணி விடுறேன்..etc
தமிழ் டிவீட்டர்கள் நமக்காக நாமே சேர்ந்து செலவு செய்து டிவீட் அப் நடத்தி அது செய்தியாக வருவதை விட,
தமிழ் டிவீட்டர்கள் இணைந்து மாணவர்களுக்கு உதவுகிறார்கள் என்ற சமூக செய்தி சிறந்தது தானே ?

சாத்தியமா ?

10 ருபாய் போதும் ! http://www.twitlonger.com/show/n_1sa0jav இணையத்தில் மக்களை இணைப்பது தான் பிரச்சனையே ஒழிய,உதவி செய்ய வழிகள் அனைத்தும் சாத்தியமே.

முதல் முயற்ச்சி

எதுவுமே செய்யாமல் இருப்பதை விட முடிந்ததை செய்வது சிறந்தது, நாமே செய்வோம்,இப்போதிக்கு முதல் அடியை எடுத்து வைப்போம் பின்பு இதை பார்த்து மக்கள் வருவார்கள் வரும் காலங்களில் என்ற நம்பிக்கையில் உதவ முனைந்தோம்.

“Better to do than to say”

நண்பர் @Yaaro_ கீழ்காணும் மாணவிக்கு அப்ளிகேஷன் கூட வாங்க இயலவில்லை என்று சொல்ல சென்னையில் இருக்கும் நண்பர் @Kothavranga ஹிந்து நாளிதழ் வாயிலாக அந்த மாணவியின் அத்தை செந்தமிழ்ச்செல்வி அவர்களிடம் பேசி தகவலை பெற்றார். http://www.twitlonger.com/show/n_1smc0gv

சிறுக சிறுக முடிந்ததை ஒரு வாரம் சேர்த்து,தமிழ் டிவீட்டர்கள் சார்பாக சேர்ந்ததை கொடுப்போம் என்று, நண்பர் @Kothavranga அவர்களின் வங்கி தகவல் அடங்கிய http://www.twitlonger.com/show/n_1smc0gv Twitlongerஐ நண்பர்களுக்கு DM செய்தோம்,அவர்களின் நண்பர்களுக்கும் DM செய்ய வேண்டுகோள் விடுத்தோம்.(சிலருக்கு அது கிடைத்து இருக்கும் பலருக்கு கிடைத்துஇருக்காது. கிடைக்காதவர்கள் மன்னிக்கணும்.)

இந்த ஒரு வாரத்தில் 11 பேர் இந்த முயற்ச்சியை ஆதரித்து,நம்பிக்கை தந்தார்கள். அந்த 11 பேர் மூலம் மொத்தம் சேர்ந்த தொகை 14201 ருபாய் !!!

உதவ முன்வந்த நல் உள்ளங்களுக்கு நன்றி ☺(பணம் வந்து சேர்ந்ததற்கான acknowledgement ,மொத்த தொகை கணக்கு விபரங்கள், மாணவிக்கு அனுப்பியதற்கான சான்று முதலியவற்றை எல்லோரிடமும் பகிர்ந்து விட்டோம் )

இன்று நண்பர் @Kothavranga அந்த மாணவியின் குடும்பத்திற்கு 14201 ருபாயை அனுப்பி விட்டார்.அவர்களுக்கு போனில் தகவலையும் சொல்லி விட்டார்.

நடந்த உரையாடல்

மாணவி தனலட்சுமியின் அத்தை செந்தமிழ்ச்செல்வி அவர்களிடம் இன்று நண்பர் @Kothavranga தமிழ் ட்வீட்டர்கள் சார்பாக உதவித்தொகை 14201 ருபாயை அனுப்பிவிட்டதாக கூற

“ரொம்ப நன்றி தம்பி, உங்க கிட்ட நான் சொல்லுறேன் தம்பி ,நீங்க உதவின ஒவ்வொருத்தர் கிட்டயும் எங்க நன்றியை தெரிவிச்சுடுங்க”
நீங்க சென்னையா தம்பி ?
ஆமாங்க
நாங்க அங்க வரும்பொழுது ஏதாவது உதவி தேவை பட்டால் கூப்பிடலாமா ?
தாராளமா தயங்காம கூப்பிடுங்க நிச்சயம் உதவுவோம்

அடுத்த வருடம்

முதல் வருடமே இவ்வளவு தொகை சேர்ந்ததே பெரிய விஷயம் தான் இங்கு.இதை ஒவ்வொரு ஆண்டும் தமிழ் டிவீட்டர்கள் சார்பாக உதவி தேவைப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்காக செய்ய உள்ளோம்.கொஞ்சம் திட்டமிடல் மற்றும் நல்ல ஆதரவு இருந்தால் போதும் நிச்சயம் சாத்தியமே !

அடுத்த வருடம் ரிசல்ட் வெளிவரும் வரை காத்திருக்காமல் Apr 1 to May 31 வரை transfer window வைத்து சேர்ந்த தொகையை June 1st மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகையை அனுப்புவோம்.

ஒருவனின் பசியை போக்க ஒரு மீனை சாப்பிடக் கொடு
அவன் தினமும் வாழ அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடு
அவன் தலைமுறையே வாழ அவனுக்கு கல்வியைக் கொடு
உங்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
நன்றி மக்களே…!
Like what you read? Give Yoda a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.