கொஞ்சநாளா எல்லாரும் சட்ட வல்லுநர்களா மாறிட்டே வர்றாங்க, DA என்னாச்சுன்னு தெரியுமான்னு கேட்டுட்டு ஆன்லைன் சாட்ல வந்தார் நண்பர். DA ன்னா dearness allowance ஆன்னு கேட்டேன், இதுகூடத் தெரியாம இருக்கயே நீயெல்லாம் என்ன வாசகன்(இப்ப இதான் ஃபேசன்)திட்டிட்டார். DA ன்னா disproportionate asset ஆம், ஜெயலலிதாவோட சொத்துக்குவிப்பு வழக்க DA CASE னு தான் கூப்பிடறாங்க(அரசியல் நமக்கெதுக்கு).

இது பரவால்ல எந்தந்த குற்றத்துக்கெல்லாம் ஜாமீன் கிடைக்காதுன்னு தெரியுமான்னு கேட்டுட்டு அவரே பதிலையும் சொல்ல ஆரம்பிச்சிட்டார்(நடுராத்திரில நானெதுக்குங்க சுடுகாட்டுக்குப் போகனும்னு எனக்குள்ளயே கேட்டுகிட்டேன்).

செசன்ஸ் கோர்ட்டோட தீர்ப்ப மீற சுப்ரீம் கோர்ட்டுக்கே அதிகாரம் இல்லைன்னு புதுசா வந்திருக்கற PP(அரசு தரப்பு வக்கீலாம்) சொல்றாரு அப்படியான்னு கேட்டார். நமக்கெதுக்கு சார் அரசியல்னு அவர்ட்டயே கேட்டு தப்பிச்சிட்டேன்.

சிபிஐ இந்தக்கேச இழுத்து மூடிருவாங்க போலயேன்னு முன்னாள் எதிர்க்கட்சியப் பத்தி எதோ பேச ஆரம்பிச்சார், நான் சேட் வின்டோவ இழுத்து மூடிட்டேன். தங்களுக்குத் தெரியாத சட்டமொன்றுமில்லை யுவரானர் ;)

One clap, two clap, three clap, forty?

By clapping more or less, you can signal to us which stories really stand out.