யுகங்கள்தோறும் தேடியலைந்து கண்டடைகிறேன் என் வானில் நீயில்லையென
யுகங்களுக்கிடையில் இளைப்பாறும் என் வானம் நீயெனப் பாடிச்சென்றப் பறவைக்கு உன் சிறகுகள்
நீ சூடியிருக்கும் மலர்களிலிருந்து வாடிய இதழொன்றைப் பறித்துக்கொடு, யுகங்கள் தீராப்பெருங்கடல்.
நீ நடந்த பாதைகள் தீப்பற்றியெறிகின்றன. உன் விழிப்பார்வைகள் மழையைப்பொழிகின்றன, எனக்கு மட்டுமான வனமொன்றில்.
நித்யமௌனமொன்றில் வாழத்தொடங்கியிருக்கிறேன்,நீ சூடியிருக்கும் மலர்களிலிருந்து வாடிய இதழொன்றைப் பறித்துக்கொடு.