ஏன் TechStarsStartupWeekend-Madurai ஹேக்கத்தான்?

ஒருமித்த எண்ணத்துடன் செயல்படும் பலரும் தங்கள் உற்பத்தித்திறனை / அன்றாட செயல்பாடுகளை பாதிக்கும் பல பிரச்னைகளை தினம் தினம் எதிர்கொள்கிறார்கள். தினமும் ஒரே விஷயத்தை ஒரு பாணியில் செய்வது கூட அந்தப் பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கலாம். அந்த இயக்கத்தின்போது அவர்களுக்குத் தெரியாமலே அவர்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்கலாம்; அன்றாடம் பல புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்; பல சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வுகளைக் கண்டறியலாம். ஆனால், அந்த தெளிவு தேவைப்படுபவருக்கு பெரும்பாலும் கிடைப்பதே இல்லை. ஒருவர் தேவையில்லை என நினைக்கும் விஷயம், இன்னொருவரின் பல்லாண்டு கால சிக்கலை நொடியில் தீர்ப்பதாக அமையலாம். குப்பையில் வைரத்துண்டே இருந்தாலும், கோழிக்கு அது குப்பைதானே?!

முன்பு எப்போதையும்விட இப்போது அதிகளவில் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிலிருந்து கிடைக்கும் தகவல்கள் டெரா பைட் அளவுக்கு குவிகின்றன. அப்படிச் சேகரமான தகவல்களை/தீர்வுகளை தன்னார்வ நிறுவனங்கள், அரசு அமைப்புகள், கார்பரேட் நிறுவனங்கள் என சகலதரப்பினரும் உலகத்துடன் பகிர்ந்துகொள்ளத் தயாராகவே இருக்கிறார்கள். பிரச்னைகளுக்கான தீர்வுகளைத் தேடுகிறவர்கள்…. தீர்வுகளைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பவர்கள்… ஆகிய இருவருக்கும் இடையிலான தொழில்நுட்பப் பாலமாக இருக்கப் போவதுதான் TechStarsStartupWeekend-Madurai. அறிதல்கள், புரிதல்கள்… இவற்றை பரஸ்பரம் தேவைப்படும் சமயம் தேவைப்படுபவருடன் பகிந்து கொள்ளவே இந்த ஹேக்கத்தான் முயற்சி.

IT நிறுவனங்களிலும், கல்லூரிகளிலும் பிரபலமானதொரு பெயர் ஹேக்கத்தான்.கல்லூரிகளில் புதிர் போட்டிகளுக்கு இப்படி ஹேக்கத்தான் என பெயர் வைப்பார்கள்.நிறுவனங்களில் மட்டுமே பிரச்னைகள்,தீர்வுகள் என இந்த ஹேக்கத்தான் அதன் சிறகை விரிக்கும். அப்ப, இது system hacking பற்றி இல்லையா ? என்கிறீர்களா. sorry, hackers இது Students & Startup மக்களுக்கான களம்.

TechStarsStartupWeekend-Madurai மக்களின் பிரச்னைகளுக்காக டெக்னோவின் உதவியுடன் களம் இறங்க இருக்கிறது.

என்ன டெக்கீஸ் நீங்க தயாரா?

ஐடி செக்டாரில் வேலை பார்ப்பவர்கள் என்றாலே, மக்களின் மீது, குறிப்பாக மக்கள் பிரச்னைகளின் மீது எந்த புரிதலும் இல்லாமல் இருப்பார்கள் என்ற கருத்து இருக்கிறது. அந்த நிலையை மாற்றலாமா?. ஒரு விஷயத்தை ஒரு கோணத்தில் பார்க்கிறோம்.ஒரு முடிவு வருகிறது.வேறொரு முடிவுக்கும் அதே கோணத்திலா பார்ப்போம்?.Think out of the box dudeனு டீம் லீட் சொல்லியிருப்பார்ல. அதே தான். இதுல பங்கேற்பது ரொம்ப சிம்பிள் ப்ரோ.

Education,Agriculture, Environment, Empowerment & Employablity, Civic Life & Community Power இந்த டாபிக்ஸ்ல மக்கள் சந்திக்கும் ஏதோவொரு பிரச்னைக்கு உங்களால தீர்வு சொல்ல முடியுமா? நீங்க தான் ப்ரோ வின்னர். நான் சொல்லப்போகும் பிரச்னையும், தீர்வும் இதில் அடங்காது என நினைக்கிறீர்களா?. இங்க பிரச்னைகளுக்கு பஞ்சம் இல்ல. தீர்வுகளுக்குத்தான்.

Hackathon = “தீர்கத்தான்”

நீங்க செயல்படுத்திக்காட்டும் தீர்வு,ஒரு நிகழ்வை மாற்றி அமைக்கலாம்.ஒரு பெரும் மாற்றத்திற்கு பட்டாம்பூச்சியின் சிறகு அசைவுகள் கூட காரணமாக இருக்கலாம்.

#SWMadurai

நீங்க பண்ண வேண்டியது register மட்டும் தான். https://in.explara.com/e/swmadurai2019

For Those surprise of the ticket charges ?

Ticket Inclusions:

- All 7 meals during the event

- Network with top mentors and Venture Capitalists

- Learn to startup from a simple idea

- Free .Co domain

- 3000 US $ worth of cloud services from Google

- Be a part of the entrepreneurship community of Madurai

- Startup Weekend Madurai goodies!

- Tender Coconut/Cold beverages,Tea and Coffee to keep you going 54 hours #SWMadurai

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade