இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

வாழைப்பழம் உடலுக்கு அதிக ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது. இதிலுள்ள இரும்புச்சத்து ரத்த சோகையை எதிர்த்துப் போராடுகிறது. உடல் எடையை சீராக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல இது சளியை அதிகரிக்க செய்யும் என ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சோர்வான தசைகளை வலுவாக்க உதவுகிறது. எனவே மாலை நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. இது இரவு நேரத்தில் நன்றாக தூங்குவதற்கு வழிவகுக்கும்.

வாழைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த பொட்டாசியம் உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கிறது.

வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அவர்களின் மனநிலையில் சிறந்த மாற்றங்கள் ஏற்படும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரு வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளன. 500 கலோரிகளும் குறைவாக சாப்பிட விரும்புவோர் இரண்டு வாழைப்பழங்கள் மற்றும் ஒரு கப் பால் சாப்பிடலாம்.

இரவு நேரத்தில் காரமான உணவை சாப்பிடுபவர்கள் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்புண் குணப்படுத்த உதவும்.

வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின்களும் நார்ச்சத்துக்களும் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.

ஆஸ்துமா, சைனஸ், சளித் தொந்தரவு இருப்பவர்கள் இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Health Tips in Tamil | Indian Actress Photos | Aanmeega Thagavalgal | TamilXP — Tamil Health Tips, Actress Photos, Anmeega Thagaval

Get the Medium app

A button that says 'Download on the App Store', and if clicked it will lead you to the iOS App store
A button that says 'Get it on, Google Play', and if clicked it will lead you to the Google Play store