பகல்கருதி பற்றா செயினும் இகல்கருதி இன்னா செய்யாமை தலை

குரள் 852

பகல்கருதிப் பற்றா செயினும் — நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும்,
இகல்கருதி இன்னாசெய் யாமை தலை — அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.

Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred.

பொதுவாக திருக்குறளின் பொருளை உணர்த மேற்கோள் காட்டும் நால்வருமே ( மு. வரதராசனார், கருணாநிதி, சாலமன் பாப்பையா, பரிமேலழகர் ) மேற்கூறிய குறளின் பொருளை இவ்வாறே விளக்கவுரை தந்துள்ளனர்.

அவர்கள் தமிழறிவுக்கு நான் தூசானாலும், ஏனோ எனக்கு அது முழுமையானதாக படவில்லை. ‘பகல்’ என்னும் வார்த்தையும், ‘பற்றா’ என்னும் வார்த்தையும் வேறு அர்த்தங்கள் கூறுவதாக உணர்கிறேன். (திருத்தம் 1-ஐ கீழே கவணிக்கவும்)

பணிவுடன் என்னுடைய விளக்கவுரையை பகிர்கிறேன்:

“வெட்டவெளிச்சத்தில் பல நன்மை செய்வதைக்காட்டிலும், நம் பகைவருக்கு (போட்டியாளருக்கு) கெடுதல் செய்யாமல் இருத்தலே சிறந்தது” என்பதே எனது விளக்கம்.

இதில், ‘பகல்’ என்ற வார்த்தைக்கு ‘வெளிச்சம்’ என்றும் ‘பற்றா’ என்ற வார்த்தைக்கு ‘பல நன்மை’ என்ற பொருளும் கொண்டுள்ளேன். ‘பற்றாக’ என்ற சொல், செய்யினும் வார்த்தையுடன் இணைகையில் ‘க’ கெட்டுதல் விகாரத்தால் மறைந்து “பற்றாக + செயினும்” பற்றாசெய்யினும் என்றானது. பற்று என்பது “நன்மை” என்று ஒரு பொருள்.

ஏன் மாற்று கருத்து?

இக்குறளை குறள் 481 உடன் ஒப்பிட விரும்புகிறேன்.

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

பொருள்

பகல் நேரமாக (பகல்) இருந்தால் கோட்டானைக் காக்கை வென்றுவிடும் எனவே எதிரியை (இகல்) வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இருக்குறளிலும் ‘பகல்’ மற்றும் ‘இகல்’ என்ற வார்த்தை பயன்பாடு ஒரேமாதிரியாக இருப்பதை கவனிக்கவும்.

குறள் 481ல் ‘பகல்’ என்னும் வார்த்தை பகற்பொழுதையே குறிக்கின்றன. இவ்வாறே பகல் என்னும் வார்த்தை மற்ற குரல்களிலும் (மொத்தம் 4) பயன்படுத்தப்பெற்றுள்ளது.

Explanation in English:

In spite of having easy opportunity to win the competition by doing bad things to the competitor, not doing such bad things or making shortcuts (though such not doing will not be recognised by any) is a better than doing a good deed in any other situation that is easily recognised by others.

To clarify my explanation, consider 2 instances.

Instance 1: A and B are competitors. A has a chance to beat B in competition when A can take a shortcut or do something that puts B in disadvantage. Only A is aware of it and no one else. But A does not undertake such opportunity but rather makes straight forward attempt. Nobody recognise and appreciate A’s straight-forwardness, because except him none knows.

Instance 2: A is doing good deeds that is well recognised by public in general.

While considering which is a better deed between instance 1 and instance 2, according to the Kural, instance 1 is better.

ஏன் மாற்று கருத்தில் உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.


1. திருத்தம் (21–08–2015)

நண்பர் ஸ்ரீதரன் தனஞ்செயன் குறள் 851 ‘பகல்’ என்ற வார்த்தை பயன்பாட்டை மேற்கோள் காட்டி, அது மேற்கூறிய வாதத்திற்கு ஒப்பாமல் இருப்பதை கூறியிருக்கிறார். நன்றி.

அவர் கூற்று, செறியே. ‘பகல்’ என்ற வார்த்தையின் அர்த்தங்களை ஆராய்ந்துக்கொண்டு இருக்கிறேன். அறிந்ததும் திருத்தம் செய்ய முனைவேன்.

Like what you read? Give Karthigeyan a round of applause.

From a quick cheer to a standing ovation, clap to show how much you enjoyed this story.