பொதுச்சொத்தை சேதப்படுத்தாதீர்கள் சேதப்படுத்தாதீர்கள் என்றும் இது உங்கள் சொத்து நீங்கள் பாதுகாக்க வேண்டும் எனவும் அரசாங்கம் எவ்வளவு தூரம் அல்லல்பட்டாலும் எனது மக்கள் கேட்பதாகவே இல்லை என்று தோண்றுகின்றது நேற்று நடைபெற்ற சம்பவம் ஒன்று.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்க்காக நகர் சேர் கடுகதியின் 3 ம் வகுப்பில் ஏறினேன். கூட்டம் அலை மோதியது. அனுராதபுரம் தாண்டி ஏறிய ஒருவர் (அரசாங்க ஊழியர் என்று நினைக்கிறேன்) எனக்கு அருகாமையில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் உணவுப்பண்டங்கள்(வடை, பழங்கள்) பரிமாறினார்கள். எனக்கு அருகிலிருந்தவர் தோடம்பழம் வாங்கினார். அதன் பிறகு அவரின் நடவடிக்கை ஆத்திரத்தை வர வைத்தது. தோடம்பழத்தின் தோலை உரித்து ரயில் பெட்டி உள்ளேயே போடத்தொடங்கினார். நன்றாக கேட்க வேண்டும் என தோண்றியது. ஆனால் என்ன செய்ய அவர் சகோதர மொழி பேசுபவர். எனக்கோ சகோதர மொழி தெரியாது என்ன செய்ய என்று யோசித்து கொண்டிந்தேன்.

அப்போது எனக்கு பின்னால் அமர்ந்திருந்த வெளிநாட்டவர் ( ஐரோப்பியர் என நினைக்கின்றேன்) ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினார். எனக்கோ மனதுக்குள் மகிழ்ச்சி ஒருபக்கம், நான் செய்ய எதிர்பார்த்ததை வேறொருவர் செய்கிறார் என்று, வெட்கம் ஒரு பக்கம், என்னால் எனது நாட்டுக்காரர் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றை செய்வதை எதிர்த்து கேட்க முடியவில்லை என்று.

யார் என்ன சொல்லி என்ன பயன், அன்பர் கச்சானை வாங்கி கொறித்து தோலை கீழே போட்டுக்கொண்டு இருந்தார். கம்பஹா மட்டும்.

Show your support

Clapping shows how much you appreciated Sabesan Mahalingam’s story.