வியாழக்கிழமை மதியம் கோவையில் ஒரு பேருந்தில் பயணிக்கும் போது ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரிடம் உரையாடுக் கொண்டிருந்தேன். அந்த உரையாடிலில் சில துளிகள்

நான்: வேலையல்லாமல் எப்படிங்கோ ?

அவர்: அதுவாட்டுக்குப் போகுதுபா.

நான்: அதே பள்ளிக்கூடங்களா ?

அவர்: ஆமாம் பா. கவுன்சிலிங் நடந்து கொஞ்ச வருஷமாச்சு. யாராச்சும் ரிட்டையராகனும் இல்லை யறக்கன்னும். இப்ப எல்லாயிடத்திலும் தேவைக்கு மேல் ஆள் இருக்கு. 3 பேர் தேவையானயிடத்தில் 4 பேரிருக்கோம்.

நான்: ஆங்கில வழிப் பள்ளியாக மாத்தினாங்க, அதனாலியாங்க அதிகமாகிருக்கிறாங்க ?

அவர்: இல்லையப்பா. அதுவும் பேருக்கத்தான். எங்களுக்கே ஒழங்கா ஆங்கிலம் வராத. இன்னும் சில நாளிலேயே பேரன்ஸ்க்கு பதில் சொல்லறது தான் கஷ்டம். யாராச்சும் ஒரு அளவுக்கு ஆங்கிலம் தெரிஞ்சவங்களே டெம்பிர்ரியா போட்டா பரவாயில்லை. இப்படியே போனா 15 வருஷத்தில் எல்லா அரசுப் பள்ளியும் சாத்திருவாங்கபா. ஒன்னும் சரியில்லை.

இப்படியே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அவர் சொன்னதை நாம் கேட்டது. ஆனால் இதற்க்கு எல்லாம் தரவுண்டா என்று தேடியப்போது, கிடைத்தது

தமிழகத்தில் 6 வயத்திற்குள் 10 சதவீதம் பேர்யுள்ளார்கள் என்கிறது UNICEF. 6 முதல் 17 வயதுள்ளவர்கள் சுமார் 17% (1,38,20,661) இருப்பார்களென்று கனிப்பு [0].

இவர்கள் எங்கு படிக்கிறார்கள் ? தமிழகத்தில் 8226 தனியார் பள்ளிகள் [1], 580 CBSE பள்ளிகள் [2], 53000 அரசுப்பள்ளிகள் [3].

அரசுப்பள்ளியில் 162656 மற்றும் தனியார் பள்ளியில் 1627289 ஆசிரியர் உள்ளனர் [4]. தனியார் பள்ளியில் 14 மாணவர்களுக்கு ஓராசிரியர் ஆனால் அரசுப்பள்ளியில் 27 மாணவர்களுக்கு ஓராசிரியர்.

பத்தாண்ட்டுக்கு முன்னால் 65% மாணவர்களுக்கு அரசுப்பள்ளிகளில் பயின்றார்கள், ஆனால் தற்போது 57 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்க்கு பல காரணங்கள். முக்கியமாக இருக்காரணங்கள், ஒன்று சமச்சீர் கல்வி மற்றொன்று குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை. தமிழகத்தில் இது 1.8. அதாவது 10 குடும்பத்தில் 7லில் 2 குழந்தைகள், 3லில் ஒரு குழந்தை. ஆனால் உ.பியில் 3.6. கடந்த ஐந்தாண்டிலில் CBSE பள்ளிகள் இரண்டு மடங்கு அதிகமாகியுள்ளது [5].

வருடத்திற்கு 1 முதல் 3 சதவீத மாணவர்கள் தனியார் பள்ளிக்குச் சென்றால் அடுத்தப் பத்து பதினைந்தாண்டில் இலவசக்கல்வியைக் காலியாக விடும்.

வளர்ந்த நாடுகளிலெல்லாம் அரசே தரமான கல்வி அளிக்கிறது எ.டு சிங்கை, டெண்மார்க். இதேப் பெற்றோர் தான் அரசு நடத்தும் IIT, NIT, ANNA பல்கலைக்கழகத்தில் தங்கள் பிள்ளைகள் படிக்க ஆசைப்படுகிறார்கள். IAS ஆவதுப் எவ்வளவு கடினமோ அது போல ஆசிரியராத கடினமாகிருந்தால் ஒரு வேளை பள்ளிக்கல்வி மாறலாம்.

நானும் ஒரு தனியார் பள்ளியில் தான் படித்தேன்.

குறிப்புக்கள்:

[0]: http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/statistics/PopulationProjection2016%20updated.pdf

[1]: http://www.tn.gov.in/miscellaneous/fees.html

[2]: http://www.icbse.com/schools/state/tamilnadu

[3]: http://www.ssa.tn.nic.in/docu/genedustat.pdf

[4]: http://globalcenters.columbia.edu/mumbai/files/globalcenters_mumbai/13.%20Rural%20Education%20Tamil%20Nadu_08.pdf

[5]: http://timesofindia.indiatimes.com/home/education/news/Number-of-CBSE-schools-double-in-5-years-in-Tamil-Nadu/articleshow/45947930.cms