அன்புள்ள நண்பர்களே, குடும்பத்தினர்களே: கறுப்பு நிறத்தவரின் உயிரும் உரிமையும் எமக்கும் முதன்மையானது (Canadian Version — Tamil Translation)

Letters4BlackLives-Canada
8 min readJul 28, 2016

--

இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட, மனம்திறந்த மடல் கறுப்பினத்தவரின், உரிமைக்கான கடிதங்கள் என்ற ஒரு வேலைத்திட்டத்தினூடாக, பல சமூகங்களை சார்ந்த, பல நூற்றுக்கணக்கானோர், கனடாவிலும் அமெரிக்காவிலும் ஒன்று இணைந்து, தத்தம் சமூகங்களில் குடும்பங்களில் இருக்கின்ற கறுப்பினத்தவர் பற்றிய எதிர்மறை கருத்துகளை அகற்றி, கறுப்பினத்தவர்களின் விடுதலைக்காக, தார்மீக ஆதரவை வழங்கும் முகமாக, இப்படியான ஆவணங்களை உருவாக்கி, மொழிபெயர்த்து, கறுப்பினத்தவரின் உரிமைக்காக போராடும் #BlackLivesMatter என்ற அமைப்பும் மற்றும் இதே நோக்கோடு செயல்படும் அமைப்புக்களும் இணைந்து செயல்படுகின்றனர்.

(shortened link for sharing: http://bit.ly/2ayJNk2)

அன்புள்ள நண்பர்களே, குடும்பத்தினர்களே,

ஒரு முதன்மையான விடயம் பற்றி நான் உங்களோடு கதைக்க வேண்டும.

கறுப்பு இன மக்கள் எனது வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கின்றார்கள். இவர்கள் எனது நண்பர்கள், என்னோடு படிப்பவர்கள், என்னோடு பணிபுரிபவர்கள், ஏறத்தாழ இவர்கள் எனது சக குடும்பத்தினர் போன்றவர்களாவர். இன்று அவர்களது நிலையை நினைத்தால் எனக்கு அச்சமாகவும், கவலையாகவும் இருக்கிறது.

ஜூலை 2016 ல், Alton Sterling என்ற கறுப்பு இனத்தவர் ஒரு கடைக்கு முன்பு இறுவட்டு (சீடி) விற்றுக் கொண்டிருந்த பொழுது அமெரிக்க காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்ததிற்கு அடுத்த நாள் Philando Castile என்ற இன்னொரு கறுப்பு இனத்தவர் பயணம் செய்துகொண்டிருந்த வாகனத்தின் மின் விளக்கு உடைந்து இருந்ததற்காக அமெரிக்க காவல் துறையால் விசாரணைக்காக தடுத்து நிறுத்தப்பட்ட போது அவரது காதலி மற்றும் நான்கு வயதுப் பிள்ளை முன்னே வாகனத்திற்கு உள்ளே இருக்கும் போதே சுட்டுக் கொல்லப்பட்டார்.

2016 ல் 500 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது 25% கருப்பு.

எனினும் அமெரிக்க மக்கள் தொகையில் கறுப்பு இனத்தவர்13% மட்டுமே.

கனடாவிலும் கறுப்பின மக்களும்; பூர்வீக குடியினரும் காவல்துறையினரால் ஓரவஞ்சனையாகக் குறிவைக்கப்பட்டு, வன்முறைக்கு உள்ளாக்கிச் சிறையில் தள்ளப்படுகின்றனர. அண்மையில் கனடாக் காவல் துறையினர் Andrew Loku, Jermaine Carby, Abdi Hirsi, மற்றும் Jean-Pierre Bony என்னும் கறுப்பின ஆண்களின் உயிரைப் பறித்துள்ளனர். மேலும் இந்தப் பெயர்களை விட இன்னமும் வெளியே சொல்லப்படாத கனேடிய காவல்த்துறையின் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட கறுப்பினத்தவர்கள், பூர்வீகக் குடிப்பெண்கள, மற்றும் LBTQIAயினரின் சோகக் கதைகள் அதிகமுண்டு. பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் இதற்காகக் காவல் துறையினர் எந்தவித விழைவுகளையும் எதிர்கொள்ளவில்லை.

எமது கறுப்பின நண்பர்கள் பலர் இப்படிப்பட்ட அச்சமான நிலையில் நாள்தோறும்; வாழ்ந்து வருகிறனர்.

நாம் கறுப்பு இனத்தவர்கள் நாளாந்த வாழ்வில் எதிர்நோக்கும் அபாயங்களை அறிந்து கொள்ளும் போதும், எமது உள்ளுணர்வு எமக்கும் அவர்களுக்குமிடையில் உள்ள வேறுபாடுகளை நினைத்து, எம்மை யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளவிடாது தடுக்கிறது. பொதுவாக காவல்துறையினர் ஒரு கறுப்பினத்தவரை சுடும் போது நாம் இலகுவாகவே அந்த நபரைக் குற்றவாளியெனக் கருதுகிறோம். இதற்குக் காரணமாக ஊடகங்களிலும் எங்கள் வீடுகளிலும் இவர்களைப் பற்றிப் பேசப்படும் எதிர்மறைக் கருத்துக்கள் அமைகின்றன.

எனவே இவற்றின் மீதான எனது பார்வையை, நான் எப்படி இவற்றையெல்லாம் விளங்கிக்கொள்கின்றேன், என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவதன் மூலம் நீங்களும் இவற்றை அவ்வாறு பார்ப்பீர்களென நம்புகின்றேன்.

தென் ஆசிய-கனடியர்களான நாம், பல வேளைகளில் இந்த நாட்டில், எம்மீதான பல பாகுபாடுகளை பார்த்திருக்கிறோம். நாம் பின்பற்றும் வேறுபட்ட கலாச்சார பாரம்பரியங்களுக்காக பிறரால் பரிகசிக்கப்பட்டுள்ளோம். வேலைத்தளங்களில், எமது தாயகக்கல்வித் தகமைகள் இங்கு போதாது என சொல்லிச் சம வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டுள்ளதுடன் உயர்பதவிகளுக்குத் தகுதியற்றவர்கள் எனவும் கருதப்பட்டுள்ளோம். அகதிகளாக வந்த போது, சில சந்தர்ப்பங்களில் எமது குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கப்பட்டு நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்கப்பட்டோம். போராலும் வன்முறையாலும் ஏற்பட்ட மன அதிர்ச்சிக்கும் வறுமைக்கும் முகங் கொடுத்து வாழ்ந்தோம். எமது சமூகங்களுக்குள்ளேயே நாம் சாதி, பால், வருமானம், பாலியல் நாட்டம், மற்றும் தோல் நிறச் சாயல், போன்ற பல காரணிகளால் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டோம்.

ஆயினும் கறுப்பினத்தவர்களுக்கு நடக்கின்ற அளவுக்கு காவல் காவல்துறை நமது குழந்தைகளையும் தாய் -தந்தையரையும் சுட்டுக்கொல்வதில்லை. ஒப்பீட்டளவில் வேலைத்தளங்களிலோ, வீட்டு உரிமையாளர்களோ, மற்றும் நிறுவனங்களோ எம்மை சிறப்பாகவே நடத்துகின்றன.

கறுப்பு நிற நண்பர்களுடைய வாழ்க்கை அனுபவம் எம்மைப் போன்றதாக அமையாததற்கு பல காரணங்கள் உள்ளன. நீங்கள்; இதைப்பற்றி அறிந்திருப்பதற்கான சந்தர்ப்பங்கள், கிடைத்திருக்கும், அல்லாவிட்டால் கிடைத்திருக்காமல் விட்டிருக்கும். ஐரோப்பியரின் காலணியாதிக்கத்திற்கு உள்ளான ஆபிரிக்க கண்டத்தில் பூர்வீக குடிகளின வாழ்வும் வழமும் சுரண்டப்பட்டு கறுப்பு இனத்தவர்கள் அடிமைகளாக இங்கு கொண்டுவரப்பட்டார்கள். அதன்பின் பல நூற்றாண்டுகளாக அவர்களுடைய சமூகம், தலைமுறை தலைமுறையாக இலாப நோக்கம் கருதி சுரண்;டலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளனர். அடிமைத்தனம் முடிந்த பின்பும் அவர்களுடைய வாழ்க்கை முன்னேற பெரிய அளவில் எந்தவித உதவியோ ஒத்தாசையோ செய்ய யாரும் முன்வரவில்லை. இன்றும் அவர்களுடைய வாழ்க்கை வன்முறையின் நிழலிலேயே இருக்கிறது. நாம் வாழும் சமுகத்திற்கோ சட்டத்தின் முன்னோ நாமும் சமமானவர்கள் என்ற நிலையை அடைவதற்காக தொடர்ச்சியாக போராடிக் கொண்டே இருக்கவேண்டியுள்ளது.

கறுப்பின செயற்பாட்டாளர்கள் தங்களுடைய உரிமைக்குப் போராடும் வேளையில் கறுப்பு இனத்தவருக்கு மட்டுமின்றி அனைவருடைய உரிமைகளுக்காகவும் சேர்ந்தே போராடுகின்றார்கள். தனி மனித சுதந்திரங்களை பாதுகாத்து பேணவேண்டுமென்பதை அரசாங்கத்திற்கு வலியுறுத்தும் போராட்டங்களின் போது பலர் அடிக்கப்பட்டும், சிறையில் அடைக்கப்பட்டும், கொல்லப்பட்டுமுள்ளனர். இன்று கனடாவில் தென்னாசிய சமுகங்களாகிய நாம் அனுபவிக்கும் பல உரிமைகள் இவர்களது முயற்சியால் கிடைக்கப் பெற்றன. இவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். நாம் எமக்குள் போட்டியிடுவோம் என எதிர்பார்க்கும் இந்தப் பொது அநிதியான கட்டமைப்புக்களுக்கு எதிராக நாம் எல்லோருமே இணைந்து போராடுவோம். எம்மைப் போலவே நமது குடும்பங்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கவே அதிகமான கறுப்பினத்தவர் கனடாவிற்கு அகதிகளாகவும் குடிவரவாளராகவும் வந்தார்கள். இந்த வகையில் எம்மையும் அவர்களையும் பல பொது சவால்கள் ஒன்று இணைத்திருக்கின்றன.

முற்கூறிய காரணங்களுக்காக நான் கறுப்பினத்தாரின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் இந்த Black Lives Matter என்ற இயக்கத்துக்கும் எனைய இதே நோக்கம் கொண்ட அமைப்புக்களையும் ஆதரிக்கிறேன். இதன் அடிப்படையில் எனது சமூகத்தில் எனது குடும்பத்தில் கறுப்பினத்தவர் பற்றி இருக்கின்ற எதிர்மறையான, அவர்களது மனித தன்மையை தாழ்த்துகின்ற கருத்து, செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுப்பதென உறுதி எடுத்துள்ளேன். உங்கள் மீது நான் வைத்திருக்கிற அன்பின் அடிப்படையில் இதை மனம் திறந்து சொல்கிறேன். ஏனெனின் இந்த விடயம் எம்மை பிளவு படுத்துவதை நான் விரும்பவில்லை.

எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்துக்கும் இந்த உண்மைகளை தெரிவிக்கின்றேன். கறுப்பு நிறத்தவரும் நம்மைப்போன்ற மனிதரே ஆவர். அவர்கள் எல்லோரையும்விடக் குறைந்தவர்கள் என்று கருதுவது தவறு ஆகும். தங்கள் நிறம் காரணமாக தங்களுடைய குழந்தை, தாய், தந்தை, நண்பர், உற்றார், உறவினரை காவல் துறையினரது வன்முறையின் காரணமாக இழந்துள்ள கறுப்பு நிறத்தவரின் ஆத்திரத்தையும் வருத்தத்தையும் மாந்த நேயத்தோடும் பரிவோடும் நோக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்காக போராட்டத்தில் கலந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த மடலை உங்களுடைய நண்பர்களோடும் குடும்பத்தினர்களோடும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களையும் தங்களுக்குள் இருக்கின்ற, மற்றவர்களை பற்றிய பாரபட்சங்களை மீளாய்வு செய்து இந்த நல்ல நோக்கங்களுக்கான நியாயங்களை விளங்கி, அதை ஏற்று, அதற்காகக் கூட்டுக்குரல் கொடுக்குமாறு வேண்டுங்கள். அநீதிக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுப்பது அச்சமான ஒன்றாகத்தான் இருக்கும். எனினும் எனது கோபத்தையும் கவலையையும் விளங்கி நான் போராட்டத்தில் இறங்கி குரல் கொடுக்கும் போது எனக்கு ஆறுதலாக இருப்பீர்களென நம்புகிறேன். எம்மை பாதுகாக்க வேண்டிய சமூகக் கட்டமைப்புகளால் எமது கறுப்பின மற்றும் பூர்வீகக் குடி சகோதர சகோதரிகளுக்கு நாளாந்தம் ஆபத்துக்கள் வரும் போது நல்ல மனச்சாட்சி உள்ள மனிதர்கள் ஒருபோதும் அநீதியை கண்டு அமைதியாய் இருக்கமாட்டார்கள்.

தமிழ் சமூகத்தின் ஒரு உறுப்பினர் என்ற வகையில், இந்த நாட்டிற்கு வந்து பல்வேறு சவால்களையும் சந்தித்து, நீண்ட கடின உழைப்பினாலே, தமது வாழ்வை உயர்த்தி நிற்கும் எமது குடும்பங்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கின்றது. இவர்கள், தமது பிள்ளைகள், எதிர்வரும் தலைமுறையினர், தாம் இந்த நாட்டில் அனுபவித்த கஷ்டங்களை அனுபவிக்கக் கூடாது என்பதற்காக, கனடாவில் இருக்கின்ற எத்தனையோ வகையான பாரபாட்சங்களுக்கும் முகம் கொடுத்து, தம்மிலும் விட தமது பிள்ளைகள் நல்லொரு வாழ்வு வாழவேண்டும் என்பதற்காக வழி செய்துள்ளனர். கனடாவில்; குடிபுகுந்து ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்ட உங்களுடைய குழந்தையான நான் உங்களை எப்பொழுதும் பெருமையோடும்; நன்றியோடும்; நோக்குவேன். அந்த நல்வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நீங்கள் பட்ட துன்பங்களை நானும் படவேண்டாம் என்று என்னை நீங்கள் பாதுகாப்பதையும் நன்றாக அறிவேன். நல்வாழ்க்கை என்னும் கனவு உங்களுடைய குழந்தைகளுக்கு மட்டும் கிடைத்தால் போதும் என்று நினைப்பது தவறு என்ற உண்மையை நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும.; நல்வாழ்க்கை என்ற கனவு அனைவருக்கும் சம உரிமையானது. எனவே நாம் எல்லோரும் இணைந்து இந்த கனடா நாட்டில், காவல்துறையின் வன்முறைகளுக்கோ, இனவாதத்துக்கோ, மற்றும் ஏனைய பாகுபாடுகளுக்கோ, பலருமே உள்ளாகாத வகையிலான ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவோம். அப்படியான ஒர் எதிர்காலத்தையே நான் வேண்டுகிறேன். அதையே நீங்களும் வேண்டுவீர்கள் என்றும் நம்புகிறேன்.

அன்புடனும் நம்பிக்கையுடனும்,

கறுப்பினத்தவரின் உயிருக்கும் உரிமைக்கும் ஆதரவான தமிழர்கள்

This is the Tamil version of the open ​letters​ created by Letters for Black Lives, an ongoing project for people in ​the US and Canada​ to create and translate resources on anti-Blackness for their communities in solidarity with #BlackLivesMatter ​and other movements for Black liberation​. The letters were written and translated collaboratively by hundreds of people who want to have honest and respectful conversations with their ​families and communities​ about an issue important to them.

Dear friends and family,

There’s something important that I want to talk to you about.

Black people are a significant part of my life: they are my friends, my classmates, my colleagues, my partners, and my family. And I am scared for them.

Police in the United States killed a Black man named Alton Sterling while he was selling CDs in front of a store in July of 2016. The next day, police killed another Black man, Philando Castile, after pulling him over for a broken tail light while his girlfriend and four-year-old daughter were in the car.

This year, of the more than 500 people already killed by U.S. police, 25% were Black, even though Black people make up 13% of the population. In Canada, Black and Indigenous people are also negatively stereotyped, targeted and treated violently by the police, and are over-represented in prisons. Canadian police have recently claimed the lives of Andrew Loku, Jermaine Carby, Abdi Hirsi, and Jean-Pierre Bony — all Black men. These names do not account for the lives of Black and Indigenous women and LGBTQIA people whose stories of violence do not get told. Overwhelmingly, police do not face any consequences for ending these lives.

This is a terrifying reality that many of my Black friends live with every day.

Even as we hear about the dangers that Black people face, our instinct is sometimes to point at the ways we are different from them, and to shield ourselves from their reality instead of empathizing. When a police officer shoots a Black person, it is easy to think it is the victim’s fault, because we hear so many negative stereotypes about them in the media, and at our own dinner tables.

I want to share with you how I have come to see things, in hopes that you may see things similarly.

It is true that we face discrimination for being South Asian in this country. We are ridiculed for our different cultures and practices. In the workplace, we are denied opportunities because our education from abroad is seen as inadequate or we are not thought of as “leadership material”. As refugees, we are detained and separated from our families for indefinite periods of time. We struggle with poverty and the trauma of wars and violence. We are even ostracized within our own communities because of caste, gender, income, sexual orientation or the hue of our skin.

But it is also true that the police do not regularly gun down our children and parents for simply existing to the same extent that they do with Black people. And employers, landlords and institutions often treat us better.

There are reasons why our Black friends experience things differently. As you may or may not have had the opportunity to learn, Europeans colonized this continent, stole land and resources from Indigenous peoples, and forcibly brought Black people from Africa as slaves. For centuries, their descendants, communities, families, and bodies were ripped apart for profit. Even after slavery, they continued to be treated as less than human and were given very little support to rebuild their lives. Black people had to fight for the right to be seen as equal under the law, and faced constant threats of violence, which continue to this day.

In fighting for their own rights, Black activists have led the movement for equality not just for themselves, but for us as well. . They have been beaten, jailed and even killed in their struggles to remind the government of its role as protector of individual liberties — many of which South Asians in Canada enjoy today. We owe them so much in return. We are all fighting against the same unfair system that prefers we compete against each other. Many Black people come to Canada as immigrants or refugees, looking for a better life and safety for themselves and their families, just like many of you have. Our struggles, while not all the same, are connected.

For all of these reasons, I support Black Lives Matter and other movements for Black liberation. Part of that means speaking up when I see people in my community — or my own family — say or do things that diminish the humanity of Black people. I am telling you out of love, because I do not want this issue to divide us.

I hope you join me in empathizing with the anger and grief of the parents, siblings, partners and children who have lost their loved ones to police violence. I hope you empathize with my anger and grief, and support me if I choose to be vocal or protest. I ask that you share this letter with your friends and family, and encourage them to collectively examine our prejudices and be empathetic and vocal too. I know that it can feel scary to speak up. However, we cannot in good conscience stay silent while the lives of our Black and Indigenous brothers and sisters are endangered every day, especially by the very system that supposedly protects us.

As a member of the Tamil community, I am proud of our families for their long, hard journey here, and for working hard and living in a place that has not always been kind to them. They have never wished their struggles upon future generations. Instead, our families have suffered through a prejudiced Canada to give their children a better life than they had. We are all in this together, and we cannot feel safe until all of our friends, loved ones, and neighbours are safe. We seek a place where everyone in Canada can live without fear of police violence, racism, and discrimination. This is the future that I want — I hope you do too.

With love and hope,

Tamils in support of Black Lives Matter

--

--