ஜியோ சிம் செயலிழப்புக்கு வோடபோன்,ஐடியா,ஏர்டெல் நிறுவனங்களே காரணம்..!! ரிலையன்ஸ் பகிரங்க குற்றச்சாட்டு..!!

ஜியோ சிம் இயங்காமல் செயல் இழந்து போவதற்கு காரணம் வோடபோன்,ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் தான் என்று நேரடியாக குற்றம்சாட்டி ட்ராய்க்கு கடிதம் எழுதியுள்ளது.
ட்ராய் சேர்மென் ஆர்எஸ் ஷர்மாவுக்கு ரிலையன்ஸ் ஜியோ சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில், பாரதி ஏர்டெல் நிறுவனம்,ஐடியா செல்லுலார் லிமிடெட்,மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பான மற்றும் விபரீதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. லைசென்ஸ் விவகாரத்தில் அவைகள் காலம் தாழ்த்தியதே அதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ குறித்த ட்ராய் கேட்ட கேள்விகளுக்கு அந்த நிறுவனங்கள் உரிய காலத்தில் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் நிறுவனம் வோடபோன்,ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்களை நேரடியாக குற்றம்சாட்டி உள்ளதுடன் அந்த நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் ட்ராயிடம் வலியுறுத்தி உள்ளது.
ஜியோ சிம் இயக்கத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் பல சங்கடங்களை சந்தித்து வருகிறது.இதனால் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த நிறுவனங்கள் தான் ஜியோ இயக்கத்தை தடை செய்கின்றன. அந்த தடைகளை நீக்குவதற்கு ட்ராய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.இது தொலைதொடர்புத்துறை நிறுவனங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.