பாலிவுட் நடிகை வித்யாபாலன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

முன்னணி பாலிவுட் நடிகை வித்யாபாலன் கடந்த சில நாட்களுக்கு முன் ‘காஹானி-2’ படப்பிடிப்புக்காக அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். பின்னர் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது இந்தியா திரும்பிய நிலையில் உடல்நிலை குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் நடத்திய சோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து வித்யாபாலன் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருக்குமாறு டாக்டர்கள் தெரிவித்ததையடுத்து 10 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ‘காஹானி-2’, ‘பேகம் ஜான்’ மற்றும் மலையாள படம் ஒன்றும் நடிக்க முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.